Friday

மதவாதமும் மனநோயும்

மனநோய் என்பது மனதில் ஏற்படும் தடுமாற்றங்களாலும் ஒரு செயல் ஏற்படுத்திய பாதிப்பாலும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் சொல்லுகிறீர்கள் . அப்படி மனநோய் ஏற்படும் போது நல்லது எது கேட்டது எது என்பதை தெரிந்து கொள்ளும் பகுத்தறிவு மழுங்க பட்டு விடுகிறது . இதனால் என்ன செய்கிறோம் என்பது அறிவுக்கு தெரியாமல் சமூக சீர்கேட்டை விளைவிக்க தோன்றும் .

இன்றைய உலகில் கடவுளின் பெயரை சொல்லி பிழைப்பை நடத்துகிறவர்கள் ஒருபுறம் . கடவுளின் பெயரால் வன்முறையை துவக்குகிறவர்கள் ஒரு புறம் . இன்றைய மனிதன் தான் மனிதன் என்ற அடையாளத்தை விட அதை தாண்டிய ஒரு அடையாளம் தேவை என உணர்கிறான் . அதன் அடிப்படையில் மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் ஒளிந்து நின்று நான் அந்த மதம் இந்த மதம் என்று பெருமை கொள்வதாய் நினைக்கிறான் .

ஆனால் கடவுள் என்ற ஒரு நிலையை அறிமுகபடுத்திய யாரும் நாளை உலகம் இப்படி மாறும் என நினைத்து அறிமுக படுத்தியிருக்க மாட்டார்கள் . மாறாக மனிதனை நல்வழி படுத்தவே தோன்றியிருக்க வேண்டும் .

எந்த மதமும் வன்முறையை வாழ்க்கையாக எடுத்துரைக்கவில்லை . ஒவ்வெருவரும் தன் மதத்தை வளர்க்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர அந்த மதத்தின் நல்ல செயல்களை கடைபிடிப்பதாக தெரியவில்லை . மற்றவர்களுக்கு நான் இந்த மதம், அந்த மதம் என தெரியவேண்டும் என்பதற்காக அடையாள படுத்துகிறார்கள் . தன் மீதும் தன் முயற்சி மீதும் வைக்க வேண்டிய நம்பிக்கையை விட்டு கடவுள் மீது நம்பிக்கை வைக்கின்றனர் . ஒரு தவறு செய்தால் கூட கடவுள் ஏன் இப்படி செய்துவிட்டார் என்று கடவுள் மீது பழிபோடுகிறார்கள் . இப்படி தான் செய்யும் ஒவ்வெரு அயோக்கியத்தனத்துக்கு காவலாக கடவுளை வைத்திருக்கிறார்கள் .

கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும் தினம் தினம் பல உயிர்களை பலி கொடுக்கிறார்கள். கடவுள் மீது இருக்கிற அக்கறையை மற்றவர்களின் மீது காட்டுவதில்லை . இந்த வகையில் தான் மதவாதிகள் (அதாவது மனநோயாளிகள் ) இன்னொரு மதத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர் .


ஏன் இப்படி இவர்கள் இருக்கிறார்கள் என பார்க்கும் போது அவர்கள் மனதை பாதித்தது மதம். மதம் எப்படி யானைக்கு வந்தால் பாகனை கூட தெரியாதோ அதேபோல் தான் மதவாதம் என்னும் மனநோய் மனிதனுக்கு வந்துவிட்டால் அவனும் மனிதன் என்பது மறந்து போகும் . எந்த மனிதனுக்கும் ஆத்திரம் என்பது சுயநினைவு குறையும் போது தான் ஏற்படும் . சுயநினைவு குறையும் போது மனநோய் வரும். இப்படி வரும் மனநோயால் தான் மனிதாபிமானம் இல்லாமல் போகிறது .
மதத்தை பின்பற்றுங்கள் தவறு இல்லை நம்பிக்கை என்பது உங்கள் மேல் வையுங்கள், உங்கள் மதம் சொல்லியிருக்கும் நல்லதை மட்டும் வாழ்க்கைக்கு பயன்படுத்துங்கள் , மனிதனுக்கு மனிதன் உதவுங்கள், மனிதாபிமானம் மண்ணில் வளர்ந்தால் மதம் நமக்கு தேவையில்லை.
மனநோய் மாறட்டும் மனிதநேயம் பரவட்டும்.

7 கருத்துக்கள்:

அப்பாவி முரு said...

நல்லா சொன்னீர்கள், இன்றைய போலி - மதத்தின் நிலையை.

எல்லா மதத்தினரும், அவர்களின் மதவிளக்கத்தை ஒழுங்காக படித்து அதன் படி அமைதி வழி நடந்தால் எந்த பிரச்னையும் இல்லை, யாருக்கும் மனநோயும் இல்லை.

Anonymous said...

ayyaa கொஞ்சம் பத்தி பிரித்து இடம் விட்டு எழுதவும். அயர்ச்சியை தவிர்க்கும்

தேவன் மாயம் said...

//நம்பிக்கை என்பது உங்கள் மேல் வையுங்கள், உங்கள் மதம் சொல்லியிருக்கும் நல்லதை மட்டும் வாழ்க்கைக்கு பயன்படுத்துங்கள் , மனிதனுக்கு மனிதன் உதவுங்கள், மனிதாபிமானம் மண்ணில் வளர்ந்தால் மதம் நமக்கு தேவையில்லை///

மதம் மதம் பிடிக்கும் அளவுக்கு செல்லக்கூடாது!!!
தேவா...

Suresh Kumar said...

ayyaa கொஞ்சம் பத்தி பிரித்து இடம் விட்டு எழுதவும். அயர்ச்சியை தவிர்க்கும்///////////


உங்கள் ஆலோசனைக்கு நன்றி அடுத்த பதிப்பில் உங்கள் ஆலோசனையை கவனத்தில் எடுக்கிறேன். உங்கள் பெயரை சொல்லியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.

Anonymous said...

well done i accept you!
now a days new new couples interduce themself they have special power!! e..g
Amma bahavan!!

Suresh Kumar said...

எல்லா மதத்தினரும், அவர்களின் மதவிளக்கத்தை ஒழுங்காக படித்து அதன் படி அமைதி வழி நடந்தால் எந்த பிரச்னையும் இல்லை, யாருக்கும் மனநோயும் இல்லை.///////////

யாருக்கும் மனநோய் வரக்கூடாது என்பது தான் நம் விருப்பம்

இராகவன் நைஜிரியா said...

//மனநோய் மாறட்டும் மனிதநேயம் பரவட்டும் //

மதம் மறந்தாலே மனநோய் மாறிவிடும்..

Post a Comment

Send your Status to your Facebook