Sunday

ஜெயலலிதாவின் தமிழ் ஈழ ஆதரவில் நாம் சிந்திக்க வேண்டியது என்ன ?

அதிமுக பொது செயலார் ஜெயலலிதா நேற்று சேலம் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் பொது ஈழ தமிழர்களின் வாழ்வுக்கு தமிழ்  ஈழம் ஒன்றே தீர்வு என உரையாற்றினார் .

அந்த உரையை நீங்கள் கேட்டிருக்கலாம் கேக்க வில்லையென்றால் இந்த இணைப்பில் செல்லவும் .

http://www.youtube.com/watch?v=BLa8EkxGz4c
சிங்கள இனவெறி அரசும் இந்திய காங்கிரஸ் அரசும் சேர்ந்து ஈழ தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட ஒரு இனபடுகொலையை நடத்தி வருகிறது . உலக தமிழர்கள் அனைவரும் இலங்கையில் இனபடுகொலைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் .

மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க போன்ற நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்வதாக இல்லை . மேற்குலக நாடுகள் எச்சரிக்கும் போது இந்தியா நாடகமாடி அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி இலங்கை ராணுவத்திற்கு உற்சாகமூட்டி வருவது தான் வழக்கமாக இருக்கிறது .

தமிழகத்தில் ஈழ தமிழர்களுஉகு ஆதரவான போராட்டங்களை அரசியல் கட்சிகளும் அரசியல் காட்சிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கங்களும் நடத்தி வந்தன . இதன் மூலம் தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்காக ஆதரவும் தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற அவசியம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது . இந்த நாடாளுமன்ற தேர்தல் ஈழ தமிழர்களுக்காக வாழ்வுரிமைக்கான தேர்தலாக மாறிவிட்டது . காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான திமுக மீது ஒரு எதிர்ப்பலை தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது .

இந்த நிலையில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று உறுதியுடன் ஜெயலலிதா நேற்று பேசியிருக்கிறார் . ஜெயலலிதா பேசியதின் பின்னணி என்ன இது வரை காலமும் விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்து வந்த ஜெயலலிதா மற்றும் ஈழ தமிழர்கள் என்று அழைக்க கூடாது இலங்கை தமிழர்கள் என்றே நாம் அழைக்க வேண்டும் என சொன்ன ஜெயலலிதா முதன் முதலாக ஈழ தமிழர்களுக்காக தமிழ் ஈழம் போராடி நான் பெற்று தருவேன் என கூறி இருக்கிறார் .

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்ஜி சமீபத்தில் இலங்கை சென்று இடம்பெயர்ந்த மக்களை பார்த்து வந்தார் . அதில் அவர் கூறியிருந்தார் பிச்சைகாரர்களையே காணாத இனம் இன்று யாரை கண்டாலும் கையேந்து நிலைக்கு ஆகியிருக்கிறது என்றார் . அவர் ஜெயலலிதாவையும் சந்தித்து அங்கு நடைபெற்ற முழுவிபரத்தையும் சொல்லியிருக்கிறார் மற்றும் ஒளிபடங்கள் வாயிலாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விளக்கியிருக்கிறார் . இதை பார்த்த பின்னர் தான் மனமிரங்கி தமிழ் ஈழ மக்களுக்கு முழுமையாக உதவ ஜெயலலிதா முன்வந்திருக்கிறார் .

இது ஒரு நல்ல முன்னேற்றம் தேர்தல் நேரத்தில் இதை சொல்லியிருந்தாலும் தமிழ் ஈழம் தான் தீர்வு என்பது அங்கே தமிழ் ஈழத்திற்காக போராடும் போராளிகளுக்கும் உலக தமிழர்களுக்கும் ஒரு உற்சாகத்தையும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது . அது மட்டுமல்லாமல் தமிழகத்திலும் இந்தியாவிலும் ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிராகவே இருக்கிறது . ஈழத்திலே தமிழர்கள் படும் நெருக்கடிகளை சரியாக எந்த ஊடகங்களும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை .

இந்த நிலையில் ஜெயலலிதா அங்கே தமிழர்கள் படும் துயரங்களை விளக்கி பேசியிருக்கிறார் . இப்படி மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பேசுகின்ற வார்த்தைகள் நேரடியாகவும் விரைவாகவும்  மக்களை சென்றடைந்து விடும் . அந்த வகையில் தமிழக மக்களும் இந்திய மக்களும் தமிழர்கள் படும் துயரங்களை தெரிந்து கொள்ள ஜெயலலிதா உதவியிருக்கிறார் . ஜெயலிதாவை பொறுத்தவரையில் தான் நினைக்கும் காரியத்தில் உறுதியாக நிற்பார் .

இது ஒரு வகையில் போராளிகளுக்கும்   ஈழ தமிழர்களின் எண்ணங்களுக்கும்  கிடைத்த அங்கீகாரம் . தமிழக மக்கள் தமிழர் விரோத கூட்டணியான திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம் . தமிழனின் ஒற்றுமையை காட்டுவோம் . இனி எந்த அரசியல் வாதியும் தமிழனுக்கு எதிராக செயல்பட பயப்பட வேண்டிய சூழலை உருவாக்குவோம் .  தமிழ் ஈழம் வெல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை . 

"தமிழர்களின் தாகம் தமிழ் ஈழ தாயகம்"

19 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ் ஈழம் வெல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை . //

எல்லா தமிழர்களின் மனதிலும் இதுதான் ஓடிகொண்டுள்ளது..

Suresh Kumar said...

உங்கள் கருத்துக்கு நன்றி ஞான சேகரன் அவர்களே

Ram said...

திமுக காங்கிரஸ் கூட்டணிகளை தோற்கடிப்போம்

Anonymous said...

ஜெயல்லிதா இப்போதும் ஈழத்திற்கு எதிரானவர்தான். 23 சீட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பேசும் பேச்சை ஒரு விசயமாக எடுத்துப் பேசுவதும் அந்த அம்மாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பெரியார் சிந்னைவாதிகளுக்கும் அவமானமாகப் படவில்லையா..

ஈழப்பிரச்சினையை உலக இஷ்யூ ஆக்க விரும்பினால் மே 13 அன்று தமிழனுக்குப் பிறந்தவன் எவனும் அல்லது ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிப்பவன் எவனும் வாக்குச்சாவடிக்கு போக்க் கூடாது... இதனை மற்றவனுக்கும் சொல்ல வேண்டும்...

இதைச் செய்யாதவன் ஏழேழு ஜென்மத்திற்கும் பாசிஸ்டுகளின் பாதந்தாங்கும் பேடிகளாகவே இருப்பர்

Suresh Kumar said...

ஈழப்பிரச்சினையை உலக இஷ்யூ ஆக்க விரும்பினால் மே 13 அன்று தமிழனுக்குப் பிறந்தவன் எவனும் அல்லது ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிப்பவன் எவனும் வாக்குச்சாவடிக்கு போக்க் கூடாது... இதனை மற்றவனுக்கும் சொல்ல வேண்டும்... ///////////////இது போகாத ஊருக்கு வழிகாட்டுவது போன்றது தான் உங்கள் வாதம் .வாக்களிக்க விருப்பமில்லை என்ற ஒரு பொத்தானையும் மின்னணு வாக்கு பதிவில் சேர்க்க போராடுவோம் .

Anonymous said...

எம் தமிழினத்திற்கு சோதனை தான் வாழ்க்கையா ஆண்டவா ?

Anonymous said...

ஈழத்தின் தற்போதய நிலை பற்றி ,ஈழ கவி சேரனின் கவிதை ஒன்று
இந்த பதிவில் இருக்கிறது .படித்து உங்கள் கருத்தை எழுதவும்
http://tamizhinithu.blogspot.com/2009/04/blog-post_05.html

Anonymous said...

எது போகாத ஊர்.... தேர்தலை புறக்கணிப்பதா...
பொத்தானை அமுக்க போனாலே அவனை நாம் ஏற்றுக் கொண்டு விட்டதாகத்தான் அர்த்தம்...
மே 16 க்கு பிறகு சொன்ன‍ சொல்லில் ஜெயா மாறினால் திருப்பி அழைக்க ஒரு பட்டனை ஏற்பாடு செய்யுங்கள் பார்க்கலாம்... எந்தப் பாதையில் ஊருக்கு போக முடியாது என்று

ராசா said...

//ஜெயல்லிதா இப்போதும் ஈழத்திற்கு எதிரானவர்தான். 23 சீட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பேசும் பேச்சை ஒரு விசயமாக எடுத்துப் பேசுவதும் அந்த அம்மாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பெரியார் சிந்னைவாதிகளுக்கும் அவமானமாகப் படவில்லையா//

இது ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று..
ஆட்சியில் அமர்ந்ததும் ஜெயலலிதா இந்த தமிழீழத்தை செயல் படுத்துவாரேயானால் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று பட்டு கடமை பட்டவர்களாக இருப்போம்..
எதிர்காலத்தில் அவருக்கு முழு ஆதரவை கொடுப்போம்..
அதுவரை..
திமுக காங்கிரஸ் கூட்டணிகளை தோற்கடிக்க மாற்று கட்சியை தேர்தெடுக்க வேண்டியது அவசியமே..

r.selvakkumar said...

புரட்சித் தலைவியின் அற்புத நடிப்புக்கு ஒரு ஓட்டு கிடைத்துவிட்டது.

மற்றபடி இதை பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை!

Anonymous said...

உலகத் தமிழருக்கு அவசர வேண்டுகோள்
இன்று இரவு விஷ வாயு ரசாயன குண்டுகள் எரிவாயு குண்டுகள் போட்டு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொல்வதற்கு இலங்கை ராணுவம் திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன
தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்
உடனடியாக செய்யுங்கள்
தமிழகத்தில் இப்போது நள்ளிரவு என்று தெரிந்தாலும் ஏதாவது செய்யுமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்

Anonymous said...

//ஈழப்பிரச்சினையை உலக இஷ்யூ ஆக்க விரும்பினால் மே 13 அன்று தமிழனுக்குப் பிறந்தவன் எவனும் அல்லது ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிப்பவன் எவனும் வாக்குச்சாவடிக்கு போக்க் கூடாது//

ஓட்டுப் போடாமல் என்ன சாதிக்கப் போகிறோம்?. ஒவ்வொரு முறையும் 40% ஓட்டுக்கள் பதிவாவதில்லை. அந்த 40% என்ன சாதித்தார்கள்?.

20% ஓட்டுப் போட்டாலும் தேர்தல் செல்லும்.

60%க்குக் கீழ் ஓட்டுப் பதிவானால் தேர்தல் செல்லாது என்ற சட்டம் இருந்தால் ஓட்டளிக்காமை ஏதாவது நன்மை பயக்கும்.

இந்த முறை காங்கிரஸ்-திமுகவைத் தவிர எந்த ந்ந்ந்நாய்க்கு வேண்டுமானாலும் குத்தலாம் என்பதே சரி!

கருணாநிதி...முத்துவேல் கருணாநிதியாகப் பிறந்தார்....வெறும் நிதிக்காக வாழ்ந்தார்...இப்போது தமிழின துரோகியாக.."கருணா"வாக சாகிறார்...(அடடா..என்ன ஒரு பேர்ப் பொருத்தம்!!)

அல்லது....மனிதனாகப் பிறந்து..தமிழனாக "நடித்து"..காங்கிரஸ் கைக்கூலியாக சாகிறார்

Dharan said...

உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??

பார்பணர்களின் பிரச்சனை திமுக. கருணாநிதி முதல்வர் பதவியை துறந்துவிட்டால் ஈழம் உடனே அமைந்து விடுமா???

குடுமி கும்பலின் அரசியலுக்கு எப்போதும் தமிழ்நாடு பலிகடா???

Dharan said...

உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??

பார்பணர்களின் பிரச்சனை திமுக. கருணாநிதி முதல்வர் பதவியை துறந்துவிட்டால் ஈழம் உடனே அமைந்து விடுமா???

குடுமி கும்பலின் அரசியலுக்கு எப்போதும் தமிழ்நாடு பலிகடா???

Suresh Kumar said...

உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??

பார்பணர்களின் பிரச்சனை திமுக. கருணாநிதி முதல்வர் பதவியை துறந்துவிட்டால் ஈழம் உடனே அமைந்து விடுமா???//////////இப்படியே எத்தனை நாள் தான் பார்ப்பன சொல்லியே பிழைப்பு நடத்துவீங்க . எத்தனை தமிழ் உயிர்கள் செத்தாலும் பரவாயில்லை தானும் தன் குடும்பமும் பதவியில் இருக்க வேண்டும் என்ற வெறி பிடித்தவர் தானே கருணாநிதி .

கருணாநிதி தமிழகத்திற்கு முதல்வராக இருந்து என்ன பயன் கண்டீர்கள் . கையாலாகாமல் சோனியாவின் காலடியில் தன் சுயமரியாதையை விட்டதன் நோக்கம் என்ன .


குடுமி கும்பலின் அரசியலுக்கு எப்போதும் தமிழ்நாடு பலிகடா???///////////

குடுமி கும்பல் என்பதை விட கருணாநிதியின் நாடகத்திற்கு தமிழ் நாடு பலிகடா என கேளுங்கள் . கருணாநிதியின் தமிழர் எதிர்ப்பை சுப்ரமணிய சாமி , சோ போன்றோர்கள் ஆதரிக்கிறார்கள் இவர்கள் எல்லாம் யார் ?

செந்தில் said...

ஜெயலலிதா மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுடார் போல .. இத்தனை நாட்களாக இலங்கை தமிழர் கஸ்டம் அம்மாவுக்கு தெரியவில்லை போலும், இப்போதுதான் உணர்ததுள்ளாராம்.

Anonymous said...

செந்தில் April 27, 2009 2:28 PM

ஜெயலலிதா மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுடார் போல .. இத்தனை நாட்களாக இலங்கை தமிழர் கஸ்டம் அம்மாவுக்கு தெரியவில்லை போலும், இப்போதுதான் உணர்ததுள்ளாராம். /////////////


கருணாநிதியின் நாடகம் முடிந்து விட்டதாமே கேள்வி பட்டீர்களா ?

Suresh Kumar said...

செந்தில் April 27, 2009 2:28 PM

ஜெயலலிதா மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுடார் போல .. இத்தனை நாட்களாக இலங்கை தமிழர் கஸ்டம் அம்மாவுக்கு தெரியவில்லை போலும், இப்போதுதான் உணர்ததுள்ளாராம்.////////////////

நன்றி செந்தில் எதிரி மனம் மாறி விட்டார்கள் . ஆனால் துரோகி கருணாநிதியை பாருங்கள் மீண்டும் துரோகம் அரங்கேற்றி வருகிறார் . உண்ணாவிரதம் என்று ஒரு நாடகம் போட்டு அதன் மூலம் போர் நிறுத்தம் என்று ஒரு போலியான செய்திகளை பத்திரிக்கைகளுக்கு கொடுத்து வருகிறார் .

இந்த நிலையில் இன்றும் இரண்டு முறை விமானம் மக்கள் வசிப்பிடங்களில் குண்டு வீசியிருகக்றியாது . இப்போ சொல்லுங்க கருணாநிதியை விட ஜெயலலிதா மேல் தானே

Anonymous said...

துக்ளக் ராமசாமி அதிமுகவிற்கே வாக்களிக்குமாறு துக்ளக் பத்திரிகையில் சொல்கிறார்.எனவே ஜெயலலிதா அவர்கள் சொலும் தனி ஈழம் முழுவதும் நம்பமுடியவில்லை காரணம் தனி ஈழத்தை முழுவதுமாக எதிர்பவர் துக்களக் ராமசாமி ஜெயலலிதாவின் மிக நெருக்கமான அரசியல் நண்பர். எனவே இதில் ஏதேனும் உள் அர்த்தத்துடன் செயல் படுகிறார்களா என்பது தெரியவில்லை

Post a Comment

Send your Status to your Facebook