Saturday

சேர்ந்திருந்த துரோகிகள் தனிதனியாகி இருக்கிறார்கள்

பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ளதாக திமுக உயர்நிலை கூட்டத்தில் முடிவெடுக்க பட்டுள்ளது . இந்த இரண்டு கட்சிக்களுமாக சேர்ந்து தமிழகத்திற்கு எவ்வளவு கெடுதல் செய்ய முடியுமோ அவ்வளவு செய்து வந்தனர் .

முல்லை பெரியாறு அணையில் காங்கிரஸ் கட்சிக்காக தமிழகத்திற்கு பாதகாமான செயல் பாடுகளில் ஈடு பட்டது.  காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றே  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே ஒத்தி போட்டவர் தான் இந்த கலைஞர் . மக்களின் குடிநீர் வாழ்வாதாரம் எதுவும் முக்கியமில்லை காங்கிரஸ் கட்சி தான் முக்கியம் என்று இருந்தார் . 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் திமுக இரண்டுமே சேர்ந்து கூட்டு கொள்ளையடித்தது. அந்த ஊழல் பணத்திற்காக தமிழகத்தையே காங்கிரஸ் கட்சிக்கு விலை பேச துணிந்தவர் தான் இந்த கலைஞர் . பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது கருணாநிதிக்கு சரியாக இருக்கும் . 
என்றும் தமிழகர்கள் மத்தியில் ரத்த கறைகளோடு வலம் வந்தது தான் தன் வாழ்க்கையில் செய்த மிக பெரிய துரோகம் . காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஈழத்திலே சிங்கள இனவெறி அரசால் மேற்கொள்ளப்பட்ட இன படுகொலைக்கு சரியான பாதையை ஏற்படுத்தி கொடுத்தவர் . தன்னை தமிழின தலைவனாக காட்டி கொண்டு தமிழர்கள் கொல்ல பட்ட பொது கடிதம் எழுதியும் , காலை உணவை முடித்து மதிய உணவிற்கு முன்னர் ஒரு உண்ணாவிரதம் நடத்தி மக்கள் மத்தியில் பல நாடகங்களை அரங்கேற்றி முள்ளி வாய்க்காலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொல்ல காரணமாக அமைந்தார் கருணாநிதி . 

ஸ்பெக்ட்ரம் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் இனத்தையே கருவறுக்க துணிந்தவர் தான் கருணாநிதி . பைபிளில் 30 வெள்ளி காசுக்காக இயேசுவை யூதாஸ் காட்டி கொடுத்தாக இருக்கிறது . அதே போல் நிகழ் கால யூதசாக கருணாநிதி 175000 கோடி பணத்திற்காக லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமாகி விட்டார். தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்ல பட்ட போதும் கடிதம் எழுதினார் . ஆனால் மகனுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக டில்லி சென்று போராடினார் .
தெரிந்து திருடுகிறவனை இன்னொரு திருடன் முதலில் திருட விட்டு பின்னர் பிளாக்மெயில் செய்வது போல் காங்கிரஸ் கட்சி திமுகவை செய்தது . பொறுக்க முடியாமல் வேறு வழியின்றி இப்போது காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டிருக்கிறது திமுக . ஈழ போராட்டடம் நடைபெற்று கொண்டிருந்த பொது சிங்கள இனவெறி படை ஈழ சகோதரர்களை சிறு குழந்தைகள் என்றும் கூட பார்க்காமல் கொன்று குவித்த பொது அனைவராலும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கி கொள்ளுங்கள் என கருனாநிதியிடம் கேட்க பட்டது .  ஆனால் அந்த நேரமெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்து விட்டு இப்போது தங்கள் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாமல் போய்விடுமோ என்று காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்திருக்கிறது . 

ஐயா கலைஞரே இதே முடிவை நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்திருந்தால் ஈழத்து சகோதர சகோதரிகள் காப்பற்ற பட்டிருப்பார்கள் . உங்களையும் மனிதம் வாழும் வரை உலகம் போற்றியிருக்கும் . அதை விட்டு விட்டு உங்கள் குடும்ப சுயநலத்திற்காக நீங்கள் எடுத்திருக்கிற இந்த முடிவால் மக்கள் காறி துப்ப தான் செய்வார்கள் . 

வாக்காள பெருமக்களே இப்போது துரோகியையும் எதிரியையும் தோற்கடிக்க வாய்ப்பு சரியாக வந்திருக்கிறது . காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனியாக நிற்கட்டும் அவர்கள் தானாகவே அழிந்து போவார்கள் . துரோகி திமுகாவை முழு மூச்சோடு எதிர்த்து தோற்கடிக்க பட வேண்டும் . இந்த தோல்வி வாழ்வில் மறக்க முடியாத மரண அடியாக கலைஞருக்கு இருக்க வேண்டும் .

10 கருத்துக்கள்:

வருண் said...

சபாஷ் காங்கிரஸ் தனித்து போட்டியிடட்டும் தானாக அழிந்து விடும் . நமது நோக்கம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் . எதிரியை விட துரோகி தான் மோசமானவன்

வின்னர் said...

துரோகி திமுகாவை முழு மூச்சோடு எதிர்த்து தோற்கடிக்க பட வேண்டும் . இந்த தோல்வி வாழ்வில் மறக்க முடியாத மரண அடியாக கலைஞருக்கு இருக்க வேண்டும் . //////////////////////////////


மானமுள்ள தமிழர்களாய் உணர்வு மிக்க தமிழர்களாய் இதை நாம் செய்ய வேண்டும் . இந்த முறை நாம் செய்யாமல் விட்டால் ஒரு நாளும் செய்ய முடியாது

shibi said...

காங்கிரஸ் கதை முடிந்தது.... கலைநர் விஜயகாந்த் கூட்டணியில் கையெழுத்து இடும் வரை காத்திருந்து காங்கிரஸ் ஐ பழிவாங்கிவிட்டார் ... திமுக தானாக அழிந்து விடும் .. அ இ தி மு க வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது

Suresh Kumar said...

@shibi ///////

கனிமொழியை மிக விரைவில் சிபிஐ ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக கைது செய்ய போகிறார்களாம். கூட்டணியில் இருக்கும் போது கைது செய்தால் அதன் மூலம் ஆதாயம் பெற முடியாது மாறாக அவமானமே மிஞ்சும் அதனால் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டால் . அப்படியே கைது செய்தாலும் அதை வைத்து அரசியல் செய்து அனுதாபம் பெற முடியுமா என பார்கிறார் கலைஞர் . பிணத்தை வைத்தே அரசியல் செய்தவருக்கு இதெல்லாம் சகஜம் தானே

Suresh Kumar said...

@ வருண் & வின்னர் ///////

எஸ் ................விழிப்புடன் செயல் பட்டு துரோகிகளை தோற்கடிக்க வேண்டும் .

Anonymous said...

காங்கிரசுக்கு 60 தொகுதிகளுடன் கூட்டணி தொடரும்

http://tamilmalarnews.blogspot.com/2011/03/60.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FedYm+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%29

Anonymous said...

காங்கிரசு திமுக கூட்டணியில் இருந்து விலக விரும்புவதால் திமுகவும் மத்திய அரசில் இருந்து விலகுவதாக திமுக உயர்நிலை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது ஒரு தந்திர நாடகமாகவே தெரிகிறது. இறுதிவரை இழுத்து இறங்கி வருவது தான் காங்கிரசின் திட்டம். அவ்வளவு தான் என்று முடித்து அணைத்துக்கொள்வது தான் திமுகவின் திட்டம்.

தற்போது டெல்லியில் இருந்து அவரசர அவசரமாக குலாம்நபி ஆசாத்தும் சிதம்பரமும் சென்னை திரும்பி உள்ளனர். 60 தொகுதிகளுக்கு உடன்பட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தான் வருகையின் நோக்கம்.

இன்று இரவு அல்லது நாளை காலை ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று தெரிகிறது.

கூட்டணி தொகுதி ஒதுக்கீடு விபரம்

திமுக 121
காங்கிரசு 60
பாமக 31
வி.சி 10
கொமுக 7
இதரம் 5

தனித்து போட்டியிட்டு சுவடற்று போக காங்கிரசும் தயாரில்லை. கனிமொழியை டெல்லி திகார் சிறையில் சந்திக்க கருணாநிதிக்கும் தைரியம் இல்லை.

அடிமட்ட தொண்டர்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக தான் இந்த நாடகங்கள் எல்லாம் நடக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

விடிந்தால் விசயம் தெரியும்

Suresh Kumar said...

இன்னும் எந்த மந்திரியும் ராஜினமா செய்யவில்லையே . ஈழ தமிழர்கள் கொல்ல பட்ட போது எம்பிக்கள் ராஜினமா செய்வார்கள் என்ற நாடகம் போல் நாடகாம்டுகிறாரா கருணாநிதி?

Anonymous said...

கருணாநிதியும் வீரமணியும் சேர்ந்து போடுற நாடகம் தான் இது

Anonymous said...

koottani murinthu vittathu athanal DMK vai thorkadiththu vidalam en ninaithal athu nadakkathu. Meendum koottani seruvom tamil nattil meendum aatchiyai pidippom.

Post a Comment

Send your Status to your Facebook