Friday

முகாம்களில் இருக்கும் தமிழர்களையும் கொலை செய்யும் சிங்கள இனவெறி அரசு .

சிங்கள இனவெறி அரசு நடத்தும் தமிழர்கள் மீதான இனபடுகொலை எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது . ஒரே நாளில் 25000 தமிழர்களை கொலை செய்த சிங்கள அரசு இப்போது முகாம்களில் வாழும் தமிழர்களில் இளைஞர்களை தேடி தேடி கொலை செய்து வருகிறது .

போரை நிறுத்தி விட்டோம் என்று சிங்கள அரசு உலக நாடுகளுக்கு அறிவித்து விட்டு இனி தமிழ் சமுதாயம் எழுந்து விட முடியாத அளவிற்கு இன படுகொலையை செய்கிறது சிங்கள அரசு . தமிழர்களை உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கைவிட்ட நிலையில் சத்தமின்றி தமிழினத்தை கருவறுக்கும் பணியை சிங்களம் செய்து வருகிறது .

இந்த நிலையில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள 13000 மக்களை காணவில்லை என ஐ நா தகவல்கள் தெரிவிக்கின்றன . அந்த மக்கள் அனைவரும் படுகொலை செய்ய பட்டிருக்கலாமோ என சந்தேகம் வெளியிட்டிருக்கிறது . ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலகம், இந்த காணாமல் போன தமிழர்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.  வெளியுலகிற்கு தெரியாமல் சிங்கள அதிகார வர்க்கம் இதை மறைத்து  வருவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது .

மனிதாபிமான ஆணையங்களுக்கே மனிதாபிமானமற்று போன பின்னர் சிங்கள அரசிற்கு மட்டும் மனிதாபிமானம் இருக்குமா . ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு வெற்றி கிடைத்த பின்னர் துணிந்து இனபடுகொலையை மீண்டும் மீண்டும் சிங்கள அரசு நடத்தி வருகிறது . தமிழர்களின் ரத்த கறைகள் இந்திய அரசியல்வாதிகளின்  கையில் படிந்துள்ளது தான் மிக பெரிய வேதனை .

8 கருத்துக்கள்:

Suresh said...

தமிழர்ஸிலும் தமிழ்ஷ் வோட்டு போட்டாச்சு

Suresh Kumar said...

Suresh கூறியது...

தமிழர்ஸிலும் தமிழ்ஷ் வோட்டு போட்டாச்சு /////////

நன்றி

vasu balaji said...

இன்னும் என்னதான் செய்யப் போகிறான்? நாசமாய் போக. சுயலாபம் தேடும் பச்சோந்திகள்

வின்னர் said...

தமிழர்களுக்கு வந்த சோதனை என்றே நினைக்கிறேன்

ஆ.ஞானசேகரன் said...

நாம் என்ன செய்ய போகிறோம்..

Suresh Kumar said...

பாலா... கூறியது...

இன்னும் என்னதான் செய்யப் போகிறான்? நாசமாய் போக. சுயலாபம் தேடும் பச்சோந்திகள் //////////////

நேற்று கூட நவநீதம் பிள்ளையின் விசாரணை தேவை என்பதை இந்திய எதிர்த்திருக்கிறது .

"மனித உரிமை மீறல் விசாரணை தேவை" என்ற நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது; இந்தியாவும் கடும் ஆட்சேபம் .http://www.tamilwin.com/view.php?2aasE9tNb0bcDDpYQ00eccC0jt30cc3ZZLuu24d336Wn544b32VVQ664d4eEUG7fdd0eePh2ggde

Suresh Kumar said...

winner கூறியது...

தமிழர்களுக்கு வந்த சோதனை என்றே நினைக்கிறேன் ////////////////

நல்ல தலைவர்களை நாம் தேர்ந்தேடுக்காததாலும் நாம் சுயநல வாதிகளாகவும் இருப்பதால் தான் இந்த சோதனை

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் கூறியது...

நாம் என்ன செய்ய போகிறோம்.. //////////////

மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும் ( அரசியல் லாபமற்ற ) நன்றி

Post a Comment

Send your Status to your Facebook