வாழ்கையில் காதல் ஒரு இனிமையானது சோகங்களும் சுமைகளும் சுகமாவது காதலில் மட்டுமாகத்தான் இருக்க முடியும் . ஒரு வயதை தாண்டி விட்டால் தானாகவே காதல் ஏற்பட்டு விடுகிறது மனிதர்களுக்கு . எந்த ஒரு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதலித்திருக்க வேண்டும் அல்லது காதலிக்கப்பட்டிருக்க வேண்டும் .
காதல் தோல்வியில் முடிந்தவர்களும் உண்டு வெற்றியில் முடிந்தவர்களும் உண்டு . காதல் குடும்ப உறவுக்கு வந்த பின்னர் தோல்வியடைந்தவர்களும் உண்டு .பொதுவாகவே காதல் வெற்றியில் செல்கிறதா இல்லை தோல்வியில் செல்கிறதா என்பது ஒரு சாராரை பொறுத்ததில்லை இரு சாராரையும் பொறுத்தது . காதலிக்கும் முன் இவர்களின் மனநிலை எப்படி இருக்கும் காதலித்த பின் எப்படி இருக்கும் என்று பார்த்தல் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும் .
காதலிக்கும் முன் ஆண் பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆனால் பெண்ணோ காதலித்த பின்னர் அந்த ஆணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆணின் மனநிலை எப்போதுமே அந்த பெண்ணை காதலிக்க வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார் . ஆனால் பெண்ணிற்கோ காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் வெளியில் காட்டாமல் ஆணை ஓட விட்டு கொண்டேயிருப்பார் . பெண்ணை காதலிக்க வைக்கும் வரை எவ்வளவு ஓட விட்டாலும் சலிக்கவே செய்யாது.
அந்த பெண் காதலை சொன்ன பின்னர் தான் பெண் அந்த ஆணை அதிகமாக காதலிக்க தொடங்குகிறார் . அதை விட முன்னர் எதையெல்லாம் தூரத்தில் இருந்த போது ரசித்தாளோ அதையெல்லாம் பக்கத்தில் இருந்து ரசிக்க நினைப்பாள். தன் காதலன் காதலிக்க துரத்திய போது எப்படி இருந்தாரோ அதே போல் இருக்க வேண்டும் என நினைப்பாள் . காதலனோ காதலியிடம் முன்னர் ரசித்த கோபம் குறும்புகளை பார்த்தல் கோபம் வரும் .
காதலிக்க முன்னர் இருந்தது காதலித்த பின்னர் தலைகீழாக மாறிவிடும் . இந்த நேரத்தை அவர்கள் தவறவிடும் போது காதல் தோல்வியில் கூட முடியும் . இருவருக்குமே அவர்கள் பக்கம் நியாயமாக இருக்கும் . பெண்ணுக்கு அவன் மாறிவிட்டான் அவன் என்னை இப்போது காதலிக்கவில்லை என எண்ண தோன்றும் . ஆணுக்கோ இப்பவும் அவள் நான் சொல்வதை கேட்க மாட்டேங்கிறா பழைய போலவே இருக்கிறாள் என எண்ண தோன்றும் . இந்த நேரத்தில் தான் காதலர்கள் விட்டு கொடுத்து யதார்த்தத்தை புரிந்து செயல் பட்டால் தான் காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும் .
6 கருத்துக்கள்:
அருமை சுரேஷ்.
காதலர்களின் எதிர்ப்பார்ப்பை குறைத்துக்கொண்டால் காதலில் வெற்றிதான் போங்க
//காதலர்கள் விட்டு கொடுத்து யதார்த்தத்தை புரிந்து செயல் பட்டால் தான் காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும் //
ரொம்ப நொந்துட்டீங்க போல..
அருமையான வரிகள்!!
பொதுவா பார்த்தா நல்லாத்தான் இருக்குங்க. ஆனா ஒவ்வோரு மனுஷனுக்கு ஓவ்வொரு ஃபீலிங்ஸ்! :)
ஆ.ஞானசேகரன் said...
அருமை சுரேஷ்.
காதலர்களின் எதிர்ப்பார்ப்பை குறைத்துக்கொண்டால் காதலில் வெற்றிதான் போங்க ////////////
சரியாக சொன்னீர்கள் எதிர்பார்ப்பை குறைத்து கொண்டு புது வாழ்க்கையில் பயணித்தால் nalamaaka இருக்கும் . நன்றி நண்பா
கலையரசன் said...
//காதலர்கள் விட்டு கொடுத்து யதார்த்தத்தை புரிந்து செயல் பட்டால் தான் காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும் //
ரொம்ப நொந்துட்டீங்க போல..
அருமையான வரிகள்!! ////////
நண்பா நான் நொந்து பதிவு எழுதவில்லை ஆனால் சிலர் வாழ்க்கையில் காதல் திருமணத்திற்கு பின்னர் விவாகரத்து வரை வந்ததை பார்த்திருக்கிறேன் அதன் பாதிப்பு தான் .
Karthik said...
பொதுவா பார்த்தா நல்லாத்தான் இருக்குங்க. ஆனா ஒவ்வோரு மனுஷனுக்கு ஓவ்வொரு ஃபீலிங்ஸ்! :)//////////
உண்மை தான் பீலிங்க்ஸ் காலத்திற்கு காலம் மாறி கொண்டேயிருக்கும் முன்னர் இருந்ததை போலவே இப்போது இருக்க வேண்டும் என இருவருமே நினைக்க கூடாது . விட்டு கொடுத்தல் மிக அவசியம் . நன்றி
Post a Comment