நாளைக்கு காதலர் தினமாமே என்ன செய்யலாம்னே தெரியல கையும் ஓடல காலும் ஓடல. நின்னா நிக்க முடியல இருந்தா இருக்க முடியல நடந்தா நடக்க முடியல என்ன செய்றது. இப்படி தான் என்னை போன்ற பலரும் நினைக்க முடிகிறது. ஆசைகள் உணர்வுகள் என்பது ஏனோ மறுக்கவோ மறக்கவோ முடியாததாகிறது. அதனால் தானோ என்னவோ காதலித்த நேரம் காதலர் தினத்தை சரியாக கொண்டாடவில்லையோ என்ற ஒரு ஏக்கம் காதலர் தினம் வரும் போதெல்லாம் வந்து கொண்டே இருக்கிறது.
இருந்தாலும் மகிழ்வான நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சலாடி கொண்டிருக்கிறது. எத்தனை நாட்கள் காதலியை பார்த்தாலும் அந்த நாள் பார்க்க வில்லையென்றால் ஏதோ ஒரு ஏமாற்றம் சுழன்று கொண்டே தான் இருக்கும். அப்படி ஒரு ஏமாற்றம் வர கூடாது என்பதற்காக தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் முந்திய நாளே முன்னேற்பாடோடு காதலியை பார்க்க வேண்டும் என்ற முடிவோடு படுத்தேன். அதனால் தானோ என்னவோ இன்று வரை அந்த தூக்கத்தை ஈடு கட்டவே முடியவில்லை. நாளைக்கு தான் காதலர் தினம் நாளை கட்டாயம் காதலியை பார்த்தாக வேண்டும் என்பதற்காகவே இன்றே மதியம் கல்லூரியிலிருந்து வெளியேறி விட்டேன்.
எப்படியும் பார்த்தாக வேண்டும் அதற்காக என்ன செய்யலாம் எப்படி பார்க்கிறது? பார்த்தா மட்டும் போதாது இன்னைக்காவது பேசியாக வேண்டும். அந்த நேரம் இதை தவிர வேறு எந்த சிந்தனையும் வந்ததில்லை. எதுக்கு கல்லூரியை விட்டு வந்தேன் என்பதே மறந்து போய்விட்டது. ஒரு வழியா நாகர் கோவில் பார்க்கில் சென்று உட்கார்ந்து யோசித்தேன். நல்ல வேளை ரூம் போட்டு யோசிக்க தோணல. அவள் ஸ்கூல் போற வழியில காலையிலேயே போய் நிக்கலாமோ ? ஊகூம் .......... எல்லா பிள்ளேங்களும் சேர்ந்து வருவாங்க பேச முடியாது. பஸ்ஸில வரும் போது பேசலாமே? ......... ஊரில உள்ளவங்க நிறைய பேரு இருப்பாங்க அப்புறம் பிரச்னை ஆகிடும்.
என்னெல்லாமோ யோசித்து ஒண்ணுமே ஒர்கவுட் ஆகல ... சரி எப்படியும் பார்த்து விடலாம் அப்போ ஏதாவது கொடுத்தா நல்லா இருக்குமே. சரி கடைக்கு போலாம்னு நடைய கட்டிட்டு சும்மா போகல போற வழியெல்லாம் யோசித்துகிட்டே கிபிட் கடை பக்கமா போயிட்டு இருந்தேன் ,சரி கிப்ட் பார்க்கலாம்னு கடைக்கு உள்ள ஏறியாச்சு . அந்த வழியில பாக்கத்து கடைக்கு வந்த ஒரு நபர் ஏதோ சொல்லி கொண்டிருந்தார். என்ன தான்னு காதை கொஞ்சமா நீட்டினா........... மனுசங்க போலவா இருக்காங்க படிக்க போன்னு வீட்டிலேருந்து அனுப்பினா இவனுங்க கார்டு வாங்க வந்திருக்காங்க. பெண்ணுங்க என்ன பெண்ணு போலையா வளருதுக அப்படி திட்டுறாரு. அப்படியே அக்கம் பக்கம் பார்த்தேன் நிறைய ஆட்கள் நின்னாங்க மகளிரும் கார்டு பாக்க நின்னாங்க . சரி விடு விடு ...... எல்லோரையும் சேர்த்து தானே திட்டுறாரு அப்படி மனசுக்குள்ள நினைத்து கொண்டே கார்டு பார்க்க கடைக்கு உள்ளே சென்றேன்.
எனக்கு பிடித்த மாதிரி பளிச்சினு ஒரு கார்டு பார்த்தேன். அதை எடுத்து விட்டு காசு கொடுத்து வெளியில் வந்தேன். திடீர்னு மீண்டும் ஒரு ஞானோதயம் வந்தது அது தாங்க பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கலாம்னு. சரின்னு கடைக்கு போய் பெரிய சக்லேட்டா தாங்கன்னு கேட்டு ஒரு முக்கால் அடி நீளத்தில ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கிட்டேன். இரண்டையும் பைக்குள்ளே போட்டு வீட்டுக்கு பஸ்ஸில ஏறி போயிட்டேன். பஸ்ஸில இருந்த ஒவ்வெரு நிமிடமும் கண்களுக்கு முன்னால் காதலியும் மனதிற்குள்ளே நாளைய தினத்தையும் பற்றிய எண்ணங்களும் தான் வந்து கொண்டிருந்தது. என்னவோ தெரிய வில்லை ஒரு வித பதட்டம் எனக்குள்ளே இருந்தது.
வீட்டிற்கு வந்ததும் பையை திறந்து சாக்லேட் பத்திரமாக இருக்கிறதா என பார்த்து கொண்டேன் . இதே போல் ஒவ்வெரு அரை மணி நேரத்திற்கும் பார்த்து கொண்டேன். கிப்ட் கார்டை எடுத்து என் பெயரோடு அவள் பெயரும் எழுதி என் இதயத்தோடு கலந்த காதல் வார்த்தைகளையும் எழுதினேன் . என்னதான் எழுதி சாக்லேட் வாங்கினாலும் தூங்க படுத்தால் தூக்கம் வரவில்லை. நாளை எப்படி இதையெல்லாம் கொடுப்பது ..? எப்படி அவளிடம் பேசுவது ..? குறைந்த பட்சம் ஐ லவ் யு ஆவது சொல்லியாக வேண்டுமே என்று நினைத்தே தூக்கம் வரவில்லை.
தினமும் கல்லூரிக்கு செல்வதை போல் காலையில் சென்று விட்டேன். நான் செல்லும் பஸ்ஸில் தான் அவளும் வருவாள். நான் பஸ்ஸில் ஏறி முன் பக்க கதவில் தொங்கி கொண்டிருந்தேன். அவள் ஏறும் இடம் பஸ்வந்தது. ஓ ............. மிஸ்ஸிங் தினமும் அதே பஸ்ஸில் வருபவள் இன்று காணவில்லையே சொல்ல முடியாத பதட்டம் ........ ஏன் ? எதனால ? இது தான் என் முன்னால் வந்து கொண்டே இருந்தது. ஒரு புறம் பதட்டம் ஒரு புறம் ஏமாற்றம் வகுப்பிற்கு போக மனம் வரவில்லை. அப்புறம் என்ன பண்றது இனி சாயங்காலம் வந்தா தான் உண்டு. அது வரை நேரத்தை கடத்த சினிமா பார்க்க சென்றிருந்தேன் . என்ன சினிமா பார்த்தேன் என்பதே தெரிய வில்லை. தினமும் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பாஸ் ஸ்டான்ட் வந்து விட்டேன்.
பெரிய ஆச்சரியம் எல்லா நாளும் காவல் துறையினர் நான்கு ஐந்து பேராவது நிற்பாங்க இன்னைக்கு யாருமே இல்லை. மனசுக்குள் ஒரு வித மகிழ்ச்சி பயப்படாம காதலை சொல்லலாம் . தினமும் வரும் நேரத்திற்கு அவள் வந்து விட்டாள். எனக்கு உடம்பெல்லாம் வியர்த்து. மனசுக்குள் இருந்த பதட்டம் வெளியே தெரிய தொடங்கியது. அவளை பார்த்தேன் அவளும் பார்த்தாள் ஆனால் எந்த வித மாற்றமும் இல்லை. கையில் கார்டும் சகேல்ட்டுமாக எளிதாக எடுத்து கொடுக்கும் வண்ணம் வைத்திருந்தேன். அவளை பார்த்து கொண்டே இருந்தேன் , அவள் வேறு பக்கம் பார்க்கும் போது நானும் அந்த பக்கம் சென்று விடுவேன் . வீட்டிற்கு செல்ல வேண்டிய பஸ் வந்தது. கையில் இருந்த பையால் எனக்கு ஒரு இருக்கையும் அவளுக்கு பாட புத்தகத்தால் முன் பக்கம் ஒரு இருக்கையும் சேர்த்து புக் பண்ணி விட்டேன். இல்லைஎன்றால் நிற்க வேண்டியது தான்.
நான் ஏறி விட்டு அவள் என் முன்னால் வந்து உட்காருவாள் என நினைத்தேன் ஆனால் அவள் முன் வாசல் பக்கம் உள்ள இருக்கையில் உட்கார்ந்தாள். எல்லாமே போச்சி வாங்கின சாக்லேட், கார்டு எதுவும் கொடுக்க முடியாது ...... இருந்தாலும் மனசு தளரல இருக்கையை விட்டு சாக்லேட்டை எடுத்து முன் பக்க வாசல் சென்று அவளின் இருக்கை பக்கம் சாக்லேட்டை வைத்து விட்டேன். அதை கவனித்து கொண்டே இருந்தேன் எடுகிறாளா...என்று . அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது உற்று பார்த்தேன் ..................................... நான் எந்த இடத்தில் வைத்தேனோ அதே இடத்தில சாக்லேட் எந்த சேதாரமும் இல்லாமல் இருந்தது .... அந்த நேரம் ............?
அவள் இறங்கிய பின்னர் வைத்த இடத்திலிருந்து சாக்லேட்டை எடுத்து விட்டு ஒரு வித ஏமாற்றத்தோடு வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தேன் ...
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !
8 கருத்துக்கள்:
Enna solrathune theriyala. Nallaa thaan muyarchi seithirukkireerkal
When i read ur post,i imagine my own story which was past...
Any way...
HAPPY VALENTINES DAY...
நன்றி விமலன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
அப்போ கடைசி வரை சாக்லேட் கொடுக்கவே இல்லையா? சேம் சேம்
ஜெறின் said...
When i read ur post,i imagine my own story which was past...
Any way...
HAPPY VALENTINES DAY.. /////////////////
பெரும்பாலான காதலர்களுக்கு இது நடக்கிறது தான்
நான் ஒரு காதலன் said...
அப்போ கடைசி வரை சாக்லேட் கொடுக்கவே இல்லையா? சேம் சேம்
///////////
கடைசி வரை காதலர் தினத்தன்று நடக்கவேயில்லை. நாளை காதல் சொல்லும் காதலர்களுக்காவது காதலர் தினம் இனிதாய் அமையட்டும் .
காதலர் தின வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....
கடற்கரையில்
பூங்காக்களில்
ஆளில்லாத
பேருந்து நிறுத்தங்களில்
எங்கும் சந்திக்க முடிகிறது
காதலர்களை.
பெரும்பாலும்
வெட்கக் குமிழ்களை
உடைத்துக் கொண்டோ ,
கைரேகை
நீளங்களை
அளந்து கொண்டோ ,
கவித்துவமாய்க்
கொஞ்சிக் கொண்டோ ,
பொய்யாய்
சினந்து கொண்டோ ,
அனைவருமே
ஆனந்தமாய் இருக்கிறார்கள்.
இந்தக் காதல் எல்லாம்
தோற்றுப் போய்விடின்
எத்துணை நன்றாய் இருக்கும் ?
“சேர்ந்திருந்தால்
சுகமாய் வாழ்ந்திருப்போம்”
என்னும்
நம்பிக்கைகளாவது
மிச்சமிருக்கும்.
y.jerin hilbert kuwait 00965-65197627
Post a Comment