இன்று இணையம் என்பது இன்றியமையாததும் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. அரபு நாடுகளில் நடைபெற்ற புரட்சிகளில் இணையத்தின் பங்கு மிக முக்கியமானது. Facebook, Twitter, Orkut போன்ற சமூக தளங்கள் மூலம் இளைஞர்கள் புரட்சி கருத்துக்களை பரப்பியும் புரட்சியை ஒழுங்கமைத்தும் கொண்டனர். அதன் மூலமாக அரபு நாடுகளில் சர்வாதிகாரம் ஒழிந்து மக்களாட்சி மலர்ந்து வருகிறது.
தமிழகத்தில் மாற்றம் உருவாக்க இணைய இளைஞர் படையினர் மதிமுக பொதுச்செயலார் வைகோவை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார்கள். இந்த மாதம் 24 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வைகோ இணைய இளைஞர்களுடன் கலந்துரையாட நேரம் ஒதுக்கியுள்ளார். கடந்த மாதம் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் கல்லூரி கற்று முடித்த மாணவர்கள் என நானூறு பேர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கலந்து கொண்டார்கள். வரலாற்றில் இது ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும்.
இரண்டாம் கட்டமாக இணையம் பயன்படுத்தும் இளைஞர்கள் மாணவர்கள் என ஆயிரம் பேர் வரை இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இணையத்தில் ஆங்காங்கே பிரிந்து கிடந்த உணர்வாளர்களை Facebook - சமூக தளத்தில் "வாழும் வரை வைகோ " குழுமம் வாயிலாகவும் "வைகோவின் தம்பிகள்" குழுமம் வாயிலாகவும் ஒன்றிணைத்து வருகிறார்கள். அதே போல் Orkut, Twitter போன்ற தளங்களிலும் அதற்கான செயல் பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இணையத்தில் மாணவர்கள் முதல் புதிய புதிய இளைஞர்களை பார்க்கும் பொது மதிமுக பெரும் எழுச்சி பெற்றதாகவே இருக்கிறது. இந்த தேர்தலில் வைகோ எடுத்த வரலாற்று சிறப்பு மிகக் முடிவால் சுயமரியாதைக்கு எடுத்து காட்டாக விளங்கிய மதிமுகவின் பெயர் மக்கள் மத்தியிலும் இளைஞர் மத்தியிலும் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்றால் மிகையாகாது. அதன் வெளிப்பாடாகவே தான் இதை பார்க்க முடிகிறது. மேலும் இது பற்றிய விபரம் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.
மதிமுக அலுவலகமான தாயகம் நோக்கி பயணிக்கும் இளைஞர் படையே லட்சியம் என்றுமே தோற்காது. மாற்றம் உருவாக்குவோம் தமிழகத்தில் தமிழினத்திற்கு விடியல் ஏற்படுத்துவோம்.
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
4 கருத்துக்கள்:
வாழ்த்துக்கள் நானும் பங்கேற்கலாம் என நினைக்கிறேன்.
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் .......
இதிலெல்லாம் ஒன்னும் ஆக போறதில்ல பாஸ் ......... சும்மா வேற ஏதாவது try பண்ணுங்க
Congrats
Post a Comment