Friday

அரசியலில் நேர்மையை விரும்புவோர் கவனத்திற்கு

அரசியல் சாக்கடை என்றுஒதுங்கி கொள்வோர் ஏராளம். இதனால் தானே மேலும் மேலும் சாக்கடையாகி வருகிறது என்று சிந்திப்பவர்கள் ஒரு சிலரே. ஒவ்வேருவருக்கு ஒவ்வெரு பாதை இருக்கும், நேரமையான அரசியல் மூலம் வளமான தமிழகத்தை கட்டியமைக்க வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக சமூக வலை தளங்கள் மூலமாக அவற்றை வெளி காட்டி வருகிறார்கள். 


அரசியல் பற்றிய தெளிவு பெற வேண்டுமெனில் ஆழ்ந்து படிக்க வேண்டும். எல்லோரையும் படிக்க வேண்டும். எல்லா கொள்கைகளையும் படிக்க வேண்டும். மாறி மாறி வரும் அரசுகளால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. யாருக்கு யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று இலவசங்களை ஒரு புறம் அள்ளி கொடுக்கும் அரசு தான் வரிகள் மூலம் மக்களை வாட்டி வதைக்கிறது. 


தமிழர்களின் இன உணர்வுகள் மங்கி போகும் அளவிற்கு ஆட்சியாளர்கள் அதிகாரத்தின் மூலம் அடக்குகிரார்கள் இதில் இரண்டு ஆட்சிகளுக்கு வேறு பாடு இல்லை. 


மக்கள் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பதிலும் சரி மக்கள் பிரச்சனைகளாக இருந்தாலும் சரி இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்த விசயங்களில் இவர்களே கூட்டணி அமைத்து கொள்கிறார்கள்.  

பல ஆண்டுகளாக தமிழர்களின் உணர்வு பூர்வமான செயல்களில் அலட்சியம் காட்டிய அரசுகள் தான் இந்த அரசுகள். அதில் முக்கியமாக 


ஈழ தமிழர் உரிமை மற்றும் இன படுகொலை , 

சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்ல படுவது 

இதுவரை தீர்வு கிடைக்காத காவிரி ஆறு 

தென் மாவட்டங்களை பாலைவனமாக்க நினைக்கும் கேரளா அரசின் முல்லை பெரியாறு அணை விவகாரம். 

பக்கத்து மாநிலங்களுடனான நதி நீர் பிரச்சனைகள் 

தொலை நோக்கு பார்வையற்ற ஆட்சி நிர்வாகம் 

மாணவர்களின் கல்வியோடு விளையாடும் அரசுகள் 

சாய பட்டறைகள் மூலம் எதிர்கால சந்ததிகள் பாதிக்க படுவதை குறித்து அலட்சியம் கொள்வது. 

சாய பட்டறை ஆலை நிர்வாகிகளுக்கு ஆதரவாக அரசு செயல் படுவது,      

காற்றில் நச்சு தன்மையை பரவ விட்டு அதன் மூலம் மக்களின் வாழ்க்கையை அழிக்க இருக்கும் தூத்துக்குடி நச்சு ஆலை (ஸ்டெர்லைட் )

மது  கடைகளை மேலும் விரிவாக்கி இளையோர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லுதல் 

இன்னும் எண்ணற்ற விசயங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை அழிக்க கூடியதாக இருக்கிறது. திமுக , அதிமுக இரண்டு கட்சிகளும் பெரிய அரசியல் விரோதியாக காட்டி கொண்டாலும் இருவருக்குமே எண்ணங்கள் ஒன்றக தான் இருக்கிறது. காமராஜர் , அண்ணாவிற்கு பிறகு தொலை நோக்கு பார்வை கொண்ட அரசுகள் அமையாதது கூட தமிழகம் பின் தங்கியிருப்பதற்கான ஒரு காரணம். 


கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சமே பிரதானமாக காண படுகிறது. 


இப்படி பல விசயங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது . புதிய சிந்தனைகள் மூலம் தான் இவற்றை மாற்றம் முடியும் . மாணவர்கள் இளைஞர்கள் நினைத்தால் மாற்றம் உருவாக்கலாம் . மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் . 

நல்ல தொலை நோக்கு பார்வை கொண்ட நிர்வாகம் தான் தேவையே ஒழிய இலவசங்களை கொடுத்து ஏமாற்றும் நிர்வாகம் தேவையில்லை என்று மக்கள் மத்தியில் எண்ணங்களை உருவாக்க கூடிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

ஆளுகிறவர்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே மக்கள் நேர்மையாக இருப்பார்கள் என்பது முன்னோர்களின் வாக்கு. அப்படியென்றால் நேர்மையான்வர்களால் தமிழகம் ஆழ பட வேண்டும் . நேர்மையானவர்கள் அரசியலில் வர வேண்டும். 

ஆம் நேர்மையான் அரசியலை எதிர் நோக்கும் நடுநிலையாளர்கள் , இளைஞர்கள் , மாணவர்கள் , பல துறைகளை சார்ந்தவர்கள் அரசியலில் நேர்மையை கடை பிடித்து வரும் வைகோ அவர்களுடன் கலைந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 

நேர்மையை விரும்புவோர் ஆக்கபூர்வ அரசியலை விரும்புவோர் கலந்து கொள்ள்ளலாம் . விபரங்களுக்கு படத்தை பாருங்கள் .     
    

34 கருத்துக்கள்:

Suresh Kumar said...

தகவலுக்கு நற்றி இணைத்து கொள்கிறேன்

Anand said...

Good one.

Suresh Kumar said...

Anand said...
Good one. ///////

Thanks Anand. If possible means u also try to attend.

senthil said...

EXCELLENT SITE... YOUR WORK .... GREAT ....

SENTHIL

Suresh Kumar said...

Thank you Senthil.... Keep in touch with me

Arjun said...

முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்

சேக்காளி said...

மிக நல்ல முயற்சி.துனிசியாவிலும்,எகிப்திலும் மாற்றங்கள் ஏற்பட்டதை போல் தமிழகத்திலும் ஏற்பட வாழ்த்துக்கள்.

thiagu1973 said...

சாயபட்டறைகளின் ஆலை நிர்வாகிக்கு ஆதரவா அரசு செயல்படவில்லை அரசாங்க அதிகாரிகள் அவ்வாறு செயல்பட்டது உண்மைதான் ஆனால் தீர்வு என்னவென சொல்லிங்க 5 லட்சம்பேர் இருக்கோம் எல்லாரும்ம் வேலை கொடுக்கிறீங்களா ?

jagadeesh said...

நீங்க சொன்னதெல்லாம் சரி தான். ஆனா அதுக்கு வைகோ தான் கிடைத்தாரா?. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா இருந்தாருன்னு பொடா சட்டத்துல தூக்கி போட்ட அம்மா கிட்டே பின்னாடி அவர் போயி சேரலையா?. அந்த ஆள் வேஸ்டு. இவ்வளவு தெளிவா எழுதி, போயும் போயி வைகோவ இணைகரீன்களே :)))

jagadeesh said...

அம்மா இந்த அளவுக்கு இலவசங்கள் கொடுத்து இறங்க வேண்டிய சூழ்நிலை, தமிழ் மக்கள் தா உருவாக்கிட்டாங்க. தி மு க மக்களை அப்படி பழகிட்டாங்க. மக்களும் வெக்கமில்லாம எதிர் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா இலவசங்களுக்கு ஆதரவு கொடுப்பவரில்லை. இந்த சமயத்தில் தி மு க கொடுங்காலாட்சிய முடிவுக்கு கொண்டுவரவேண்டிய சூழ்நிலை, இப்படி ஆய்டுச்சு. அம்மா சரியா தா செய்யறாங்க.

jagadeesh said...

தமிழர்கள் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாதுன்னு சொல்லற இவங்களா, இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்கப் போறாங்க :)). முக்கிய பிரச்னையை எல்லா விட்டுட்டு, சினிமா காரங்க அங்க போகக்கூடாதுன்னு உத்தரவு போடறது:)). இந்த ஆள் வெறும் வீரமுலக்கமா தா பேசுவாரு, basement ரொம்ப வீக்!!!!

Suresh Kumar said...

சேக்காளி said...
மிக நல்ல முயற்சி.துனிசியாவிலும்,எகிப்திலும் மாற்றங்கள் ஏற்பட்டதை போல் தமிழகத்திலும் ஏற்பட வாழ்த்துக்கள். /////////

மாற்றம் ஓன்று வந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும். நம்பிக்கையோடு பயணிப்போம் . நன்றி

Suresh Kumar said...

தியாகு said...
சாயபட்டறைகளின் ஆலை நிர்வாகிக்கு ஆதரவா அரசு செயல்படவில்லை அரசாங்க அதிகாரிகள் அவ்வாறு செயல்பட்டது உண்மைதான் ஆனால் தீர்வு என்னவென சொல்லிங்க 5 லட்சம்பேர் இருக்கோம் எல்லாரும்ம் வேலை கொடுக்கிறீங்களா ? //////////


நீங்கள் நினைப்பது போல் சாய பட்டறைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை.சாய பட்டறைகள் எங்கெங்கு அமைக்க வேண்டும் .அதிலிருந்து வரும் கழிவுகளை எப்படி சுத்திகரிக்க வேண்டும். கழிவுகளை குடிநீரில் கலக்க கூடாது என்பன போன்ற பல விதி முறைகள் இருக்கிறது. இப்படி பட்ட விதி முறைகளை பின்பற்றாமல் சாய பட்டறைகள் அமைத்தால் சாய பட்டறைகளை மூடாமல் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்.

நாமும நம் சந்ததிகளும் நலமோடு இருந்தால் எங்கு சென்றாவது வேலை தேடி கொள்ளலாம் . இது ஒரு வகை .

மற்ற படி விதிமுறை மீறி மக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைக்க பட்ட சாய பட்டறைகளை மூடும் பட்சத்தில் அரசு தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடை செய்ய வேண்டும் .

Suresh Kumar said...

jagadeesh said...
நீங்க சொன்னதெல்லாம் சரி தான். ஆனா அதுக்கு வைகோ தான் கிடைத்தாரா?. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா இருந்தாருன்னு பொடா சட்டத்துல தூக்கி போட்ட அம்மா கிட்டே பின்னாடி அவர் போயி சேரலையா?. அந்த ஆள் வேஸ்டு. இவ்வளவு தெளிவா எழுதி, போயும் போயி வைகோவ இணைகரீன்களே :))) ///////////


உயர்ந்த லட்சியத்திற்காக போராடுகிறவர்கள் முதலில் தங்களை (கட்சியை ) காப்பாற்றி கொள்ள வேண்டும் . அதற்காக சில நேரங்களில் சமரசம் செய்து கொள்வதில் தவறு இல்லை . இதை தான் பகத்சிங் சொல்லியிருக்கிறார்.

தன்னை சிறையில் அடைத்தார்கள் என்பதை கூட பார்க்காமல் தமிழகத்தின் நலனுக்காக திமுகவை வெற்றி பெற வைத்து விட கூடாது என்று தான் அதிமுகவோடு கூட்டணி அமைத்தார். ஆனால் மக்கள் புரிந்து கொள்ளாமல் திமுகவை அந்த தேர்தலில் வெற்றி பெற வைத்ததின் விளைவு தான் இன்றைய தமிழகத்தின் நிலை .

சிலர் பட்ட பின் தெளிவடைகிரார்கள் ஆனால் வைகோ அப்போதே திமுகவின் செயல் பாடுகளை தெரிந்து வைத்திருந்தார்.

Suresh Kumar said...

கடந்த சட்ட மன்ற தேர்தலின் போதே தயாநிதி மாறனின் அதிகார துஷ்பிரயோகத்தை ஆதாரத்தோடு வெளியிட்டார் வைகோ. ஆனால் அப்போது நம்பாத மக்கள் இன்று நம்புகிறார்கள் .அப்படியென்றால் அது யார் தப்பு ?

அந்த நிலை இனியும் வர கூடாது மக்கள் மத்தியில் மாற்றம் வர வேண்டும். அது வைகோவால் தான் முடியும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

Suresh Kumar said...

jagadeesh said...
அம்மா இந்த அளவுக்கு இலவசங்கள் கொடுத்து இறங்க வேண்டிய சூழ்நிலை, தமிழ் மக்கள் தா உருவாக்கிட்டாங்க. தி மு க மக்களை அப்படி பழகிட்டாங்க. மக்களும் வெக்கமில்லாம எதிர் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா இலவசங்களுக்கு ஆதரவு கொடுப்பவரில்லை. இந்த சமயத்தில் தி மு க கொடுங்காலாட்சிய முடிவுக்கு கொண்டுவரவேண்டிய சூழ்நிலை, இப்படி ஆய்டுச்சு. அம்மா சரியா தா செய்யறாங்க. ///////////


தமிழ் மக்கள் இலவசங்களை தான் விரும்புகிறார்கள் என்றால் இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது . மக்கள் நல்ல நிர்வாகத்தை தான் விரும்புகிறார்கள்

jagadeesh said...

@suresh
இதெல்லாம் ஒரு சாக்கு. எல்லாம் ராமதாசோட சேர்ந்த ஆளுங்க தான். வேணும்னா நீங்க அரசியில்ல நில்லுங்க நாங்க ஆதரவு தர்றோம்.

jagadeesh said...

இப்பவும் வாய்ப்பு கிடச்சா,, தி மு க வுல இணைவார். நீங்களும் எத்தன காலத்துக்கு தான் கட்சியையும் காப்பாத்தனும்னு சொல்லுவீங்களோ. உங்க பதில், ராமதாசுக்கு சரி. கட்சிய வளர்க்கணும். அதுக்காக கெட்டவங்க கூட கூட்டணி வச்சுக்கலாம். பின் கட்சி வளர்ந்த பிறகு, மக்களுக்காக அந்த கூட்டனிய விட்டு விலகுவாங்க்ன்னு நினைகரீன்களா,, செய்யவே மாட்டாங்க. இல்லவே இல்லை.

Suresh Kumar said...

@Jagadeesh //////

இரண்டு சட்ட மன்ற தேர்தலில் மதிமுக தனியாக தான் போட்டியிட்டது அது உங்களுக்கு தெரியுமா? ராமதாஸ் போல் சீட் பேரத்திற்காக காலியில் ஒரு கட்சியுடனும் மாலையில் ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்க வில்லை. கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. கூட்டணி தர்மத்துடன் உண்மையான கூட்டணி கட்சியாக செயல் பட்டது. ஆனால் என்ன செய்வது அதிமுகவும் திமுகவும் மதிமுகவை அழிக்க வேண்டும் என்பதில் ஒரே கருத்தில் இருந்தார்கள்.

இப்போது தான் மக்களுக்கும் புரிந்து கொள்வதற்கு சரியான நேரம். இந்த தேர்தல் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் வாக்களிக்க வில்லை. திமுக தோற்கடிக்க பட வேண்டும் என்று தான் வாக்களித்தார்கள்.

மக்கள் ஓரளவிற்கு தெளிவு பெற்று வருகிறார்கள் இனி நேர்மையானவர்கள் தான் ஆட்சி பொறுப்பில் வர முடியும்.

மதிமுகவை பொறுத்த வரையில் இனி எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. மதிமுக தலைமையை ஏற்று வருகிற கட்சிகளோடு கூட்டணி அமைக்கும்.

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைத்த போதும் தன் கொள்கையிலிருந்து இம்மியளவும் விலகாமலும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது மதிமுக.

அது ஈழத்தில் தமிழர்களின் உரிமையாக இருந்தாலும் சரி தமிழக தமிழர்களுடைய உரிமையாக இருந்தாலும் சரி.

மதிமுக மீது இளைஞர்களும் மாணவர்களும் நம்பிக்கை வைத்து கொண்டதன் விளைவு தான் தங்களை மதிமுகவில் இணைத்து கொள்கிறார்கள்.

மேலும் தெரிந்து கொள்ள
உங்கள் மேல் எதற்கு இத்தனை கரிசனை என்கிறீர்களா இந்த பதிவை படியுங்கள். நன்றி

கண்ணன் பக்கங்கள் said...

இப்பவும் வாய்ப்பு கிடச்சா,, தி மு க வுல இணைவார். நீங்களும் எத்தன காலத்துக்கு தான் கட்சியையும் காப்பாத்தனும்னு சொல்லுவீங்களோ. உங்க பதில், ராமதாசுக்கு சரி. கட்சிய வளர்க்கணும். அதுக்காக கெட்டவங்க கூட கூட்டணி வச்சுக்கலாம். பின் கட்சி வளர்ந்த பிறகு, மக்களுக்காக அந்த கூட்டனிய விட்டு விலகுவாங்க்ன்னு நினைகரீன்களா,, செய்யவே மாட்டாங்க. இல்லவே இல்லை.
//
உங்கள் நோக்கம் என்ன ? இப்போது உங்கள் முன் இருப்பது நான்கு .
ஜெயலலிதா
கருணாநிதி
வைகோ
ஸ்டாலின்

இவர்களில் யாருக்கு உங்கள் ஆதரவை தர போகிறீர்கள்? அது மட்டுமே கேள்வி. நீங்கள் எதிர்பார்க்கும் ரட்சகர் வானில் இருந்து வர மாட்டார். நீங்கள் கூட்டணி அமைத்ததை விமர்சித்தீர்கள் அதை நாங்கள் கொள்ளை அடிக்கவா பயன்படுத்தி கொண்டோம் ? கூட்டணியில் இருந்தாலும் முல்லை பெரியாரை பேசினோம், பாலாற்றை பேசினோம், கூட்டணியில் இருந்து கொண்டேதான் நாங்கள் நெய்வேலி அனல் மின்சாரத்தை காப்பாற்றினோம், ஈழ போராட்டங்கள் பல செய்தோம். எங்கே இருந்தாலும் நாங்கள் என்ன செய்தோம் என்று பாருங்கள்.

நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க விரும்பவில்லை . தனியாக வே நிற்கிறோம் . நீங்கள் ஆதரவு தாருங்கள் முதலில். முதல் மூன்று தேர்தலில், எட்டு வருடம் நாங்கள் கூட்டணி இல்லாமல் தனியாகத்தான் போட்டி இட்டோம். அப்போது உங்களை போல உள்ள கண்ணியவான்கள் என்ன செய்தார்கள்.

உங்களை போன்றவர்களின் நோக்கம் எப்படியாவது மதிமுக என்ற இயக்கம் இயங்கக்கூடாது என்பதுதானே ? ஹா ஹா

jagadeesh said...

@ suresh,
ம தி மு க கட்சி, கூட்டணியால் தான் அதன் மரியாதையை இழந்து நிற்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி இருவரையும் குறை சொல்கரீர், அடுத்து அவர்களோடு தானே சேரப் போறீங்க. அப்புறம் எப்படி இருக்கும் மரியாதை. வேணும்னா தனிச்சு நின்னு போட்டியிடுங்க, அப்படியாவது இழந்த கவுரவத்தை மீளுங்க பாப்போம். வைகோ அவர்கள், தமிழக முதல்வர் ஆவது என்பது அத்தி மரம் பூத்த கதை தான். அப்படி ஒரு காட்சியை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. யாரவது கூட்டணியில ஓட்டிக்கிட்டுத் தா இருப்பாரு.
யாரும் இங்கு யோக்கியர்கள் இல்லை, அதில் அம்மா கொஞ்சம் பரவாயில்லை என நினைக்கிறேன், வேறு வழியும் இல்லை.

Suresh Kumar said...

ஜெயலலிதா, கருணாநிதி இருவரையும் குறை சொல்கரீர், அடுத்து அவர்களோடு தானே சேரப் போறீங்க. அப்புறம் எப்படி இருக்கும் மரியாதை. வேணும்னா தனிச்சு நின்னு போட்டியிடுங்க, ///////////

நான் இதை தான் சொன்னேன் . மதிமுக இனி அதிமுக திமுக ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமையாது தனித்து களம காணும் . அப்போது உங்களை போன்றோர் ஆதரவு கொடுங்கள் . இன்னொரு தலைமையின் கீழ் தமிழகத்தில் மதிமுக கூட்டணி அமைத்தால் நான் கூட ஆதரித்து எழுதுவதை நிறுத்தி விடுவேன் .

இன்றைய சூழ் நிலையில் நல்ல தலைவர் வேண்டும் தமிழகத்திற்கு. அந்த வகையில் வைகோ ஒருவர் தான் நல்ல தலைவர்.

மாறி மாறி இரண்டு கட்சிகளும் தமிழகத்தை ஆட்சி செய்தால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. மாற்றம் வேண்டும் . இது ஒவ்வெரு தமிழர்களின் மனதில் உருவாக வேண்டும் .

Suresh Kumar said...

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு நற்செய்தி. இன்று நடைபெற்ற வைகோவுடனான கலந்துரையாடல் மிகவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றிருக்கிறது. எதிர் பார்த்ததை விட அதிகமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். புதிய மாற்றம் உருவாக்கும் வகையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதே போல் தொடர்ந்து நடைபெறும் என தீர்மானிக்க பட்டுள்ளது. அடுத்த நிகழ்வு திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அடுத்த நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள் .

மாற்றம் உருவாக்குவோம்

jagadeesh said...

தேர்தலில் மண்ணை கவ்வுவது உறுதி. நீங்க ஆட்சி கட்டிலில் ஏறுறப்போ உலகம் அழிஞ்சுடும். ஹா ஹா ஹா!

jagadeesh said...

அடேய், வெக்கங்கெட்ட வைகோ, இனியும் கூட்டணி தா வெக்கப் போறேன்னு(உள்ளாட்சி தேர்தல்ல) தெரிஞ்சு போச்சு. எதுக்குடா உனக்கு எல்லாம் வீராப்பு. உன்னோட குணத்த மறுபடியும் நிரூபிச்சிட்ட.

Suresh Kumar said...

jagadeesh said...

அடேய், வெக்கங்கெட்ட வைகோ, இனியும் கூட்டணி தா வெக்கப் போறேன்னு(உள்ளாட்சி தேர்தல்ல) தெரிஞ்சு போச்சு. எதுக்குடா உனக்கு எல்லாம் வீராப்பு. உன்னோட குணத்த மறுபடியும் நிரூபிச்சிட்ட.
/////////////

தம்பி ஜெகதீஷ் வார்த்தையை மரியாதையாக பேசி பழகு . நாகரிகம் தமிழ் பண்பாட்டிற்கு முக்கியம் . உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிடும் என்று நாஞ்சில் சம்பத் அறிக்கை விட்டிருக்கிறார் . அதை படித்து பார்த்து பேசு . மதிமுக தலைமையில் வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் . அதுவும் மாற்றத்தை விரும்பும் கொள்கையில் தவறாத கட்சியுடன் மட்டுமே .......

jagadeesh said...

உங்களது இந்த வீண் நம்பிக்கைகள் எனக்கு ஆச்சர்யமாகவும் நகைப்பாகவும் உள்ளது. ம தி மு க கட்சியை எல்லாம் எப்படி நம்புகறீர்கள். அது ஒரு நிறம் மாறும் கட்சி. வீராப்பா பேசுவாங்க தவிர அவங்களுக்கு ஒன்னும் தெரியாது. இவங்ககிட்ட நாட்டை ஒப்படைக்க எங்ககிட்ட ஆதரவு கேக்கறீங்க. கொடுமை. திரும்பவும் சொல்றேன், எத்தனை யுகம் கழிந்தாலும் , ம தி மு க ஆட்சி கனவு பலிக்க போவதில்லை....
உங்களைப்போன்ற வினோதமான சில மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

jagadeesh said...

//மதிமுக தலைமையில் வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் . அதுவும் மாற்றத்தை விரும்பும் கொள்கையில் தவறாத கட்சியுடன் மட்டுமே .......// நீங்க கூட்டணி சேர்த்துக்க இப்படி ஒரு பிலிமா. :))))
//அதுவும் மாற்றத்தை விரும்பும் கொள்கையில் தவறாத கட்சியுடன் மட்டுமே// அப்படி எந்தக் கட்சி இருக்கு. ஒரே கட்சி தான் இருக்கு, அதுவும் ஆட்சி செஞ்சுட்டு இருக்கு. பேசாமா "பா மா க" வோட கூட்டணி வச்சுக்குங்க.

Suresh Kumar said...

@Jagadheesh ////////

ஒரு பதிவுக்கு 14 நாட்கள் தான் எந்தவிதமான தணிக்கையும் இல்லாமல் கருத்துக்கள் வெளியிடும் படியாக என் பதிவுகள் அமைந்துள்ளது . உங்கள் கருத்துக்கள் அதையும் தாண்டி வந்து கொண்டிருக்கிறது . அதை நான் எந்தவித மாற்றமும் செய்யாமல் வெளியிட்டிருக்கிறேன். ஆனால் அந்த கருத்துக்களில் உங்கள் பதட்டம் தெரிகிறது . எங்கே மதிமுக ஆட்சிக்கு வந்து விடுமோ என்று ? இதுவே மிக பெரிய வெற்றி தானே ... இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்து ஏமாந்து விட்டார்கள் இனி மக்களுக்கு தேவை நல்ல நேர்மையான ஆட்சி நேர்மையான தலைவன் . அதற்கு தகுதியுள்ள ஒரே தலைவன் வைகோ மட்டும் தான் ......... நீங்கள் நினைப்பது போல் மக்கள எப்போதும் ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள் ........

jagadeesh said...

எவ்வளவு நாள் போனா என்னங்க, அப்படியாவது நம்ம நட்பு தொடரட்டுமே!!!
அப்புறம் இந்தப் பதிவுக்கு நா இடற கடைசி கருத்துரை இது தாங்க.
"பேராசை பெரு நஷ்டம்"

jagadeesh said...

Vaiko writes to CM, seeking her appointment 22/8/11
தன்மானமிழந்த வை.கோ. அவர்களே, நீங்கள் எதற்காக அம்மையாரை பார்க்க போகிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்காவது சீட்டுகேட்டு காலில் விழபோகிறீர்கள். இதற்கு ஏன் இத்தனை பந்தா.

jagadeesh said...

இது தினமலரில் 27aug வைகோ ஜெயலலிதாவை சந்திக்கத் தயார் என்கிற செய்தியில் ஒருவர் இட்டுள்ள கமெண்ட் இது. K .vijayaragavan
உன்னை பத்தொன்பது மாசங்கள் உள்ளே போட்டு குமுக்கிய போதே வெளியில் வந்ததும் அந்த பொம்பளை காலில் போய் விழுந்தவன் நீ. உனக்கு மானம், சூடு, சொரணை எதுவும் கிடையாது. நீ ஒரு வெட்கம் கெட்டவன். சட்டங்கள் இருப்பதே மக்களுக்கு தவறு செய்வதில் பயம் ஏற்படுத்தவும், சமுதாயத்தில் அமைதி ஏற்படுத்தவும் தான். உன்னை போன்ற சுய நல படுபாவிகள் தவறுகளை நியாயப்படுத்தவும், தண்டனைகளை ரத்து செய்யவும் கூறுவதை கேட்டு ஜெயலலிதா ஒரு தவறான முடிவை எடுத்து விடக்கூடாது. ஈழத்தில் பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் தான் இன்று அப்பாவி தமிழ் மக்கள் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி, அலைகிறார்கள். இவனை போன்ற பாவிகள் போடும் வெத்து கூச்சலுக்கு ஜெயா சற்றும் செவி சாய்க்க கூடாது. இவனுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ள அவசரம். அதற்கு இந்த பிரச்சினையை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறான். ஜெயாவிடம் நான் காணும் ஒரே குறை ஊழல். கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சசி குடும்பத்தோடு சேர்ந்து அடித்த கொள்ளை. அதை தவிர்த்தால், ஜெயாவை போல் திறமையான, வேகமான ஒரு அரசியல்வாதி கிடையாது. ஜெயாவின் தேசபக்தியும், தெய்வபக்தியும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. இந்த வெற்று சோறின் வெறும் கூச்சலுக்கு ஜெயா செவி சாய்க்க கூடாது. ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் இவன் என்னவோ அதாரிட்டி போல் பேசுவதற்கு மயங்கி விடக்கூடாது. ராஜீவ் காந்தி விடுதலை புலிகளுக்கு கருணை காட்டியதால் தான் அவருக்கு மரணம் ஏற்பட்டது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் பாவிகள் இவர்கள். இடம் கொடுத்து ஆதரித்த தமிழ்நாட்டிலேயே, குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்கள் இவர்கள். நன்றி, விசுவாசம் என்பதெல்லாம் விடுதலைபுலிகளுக்கு என்றுமே கிடையாது. இந்தியா இவர்களுக்காக பரிந்து பேசியபோது, இது சிங்களவர்களுக்கும், எங்களுக்குமான பிரச்சினை.நாங்கள் அண்ணன்- தம்பிகள் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறியது இவனின் தலைவன் பிரபாகரன் தான். இவனுக்கு ஒரே லட்சியம் தமிழ்நாட்டை முழுவதுமாக மகாராஜா போல் ஆளவேண்டும் என்பது, பிரபாகரனுக்கும் அதுவே கனவு. நல்ல வேளை. அது நிறைவேறவில்லை.ஜெயா இவனை இறுதி வரை தள்ளியே வைத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு, தவறு செய்தவர்களை தண்டிப்பதில் தயக்கம் காட்டாத ஜெயலலிதா அதே போக்கை இது விஷயத்திலும் கடைபிடிக்க வேண்டும்.ஜெயா எதற்காகவும் தயங்க வேண்டியதில்லை. உங்களுக்கு முழு பலம் இருக்கிறது. அடுத்த ஐந்து வருஷங்கள் உங்களை யாரும் அசைக்க முடியாது. தயக்கமில்லாமல் இவர்களை ஓரம் கட்டுங்கள். தேச விரோத வைகோவையும், வைகோவைப்போல் பிதற்றிக்கொண்டு திரியும் அல்லக்கைகளையும் துரத்தி அடியுங்கள். மக்கள் உங்கள் பக்கம். எதற்கும் கவலைப்படவேண்டாம். மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கோ, ஒரேயடியாக மரண தண்டனையை ஒழிப்பதற்கோ, ஒரு போதும் வக்காலத்து வாங்காதீர்கள். ஏற்கனவே தவறு செய்வதற்கு எவனும் அஞ்சுவதில்லை. பிறகு சட்டம் செல்லாக்காசாகி விடும். கொலை அன்றாட வழக்காகி விடும். நாட்டில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நிம்மதியும் போய் விடும். அதற்கு துணை போகாதீர்கள். சுய நல வைகோவை அலட்சியப்படுத்துங்கள். தூக்கு தண்டனையை ரத்து செய்யாதீர்கள். உங்களின் கடந்த கால அரசியல் தவறுகளுக்கு ஒரு பிராயச்சித்தமாக கருதி, இந்த விவகாரத்தில் ஒதுங்கி இருங்கள். அதுவே மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி.

jagadeesh said...

மொதல்ல எல்லாரும் இதப் படிங்க. அப்புறம் பேசுங்க.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295

Suresh Kumar said...

jagadeesh said...
Vaiko writes to CM, seeking her appointment 22/8/11
தன்மானமிழந்த வை.கோ. அவர்களே, நீங்கள் எதற்காக அம்மையாரை பார்க்க போகிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்காவது சீட்டுகேட்டு காலில் விழபோகிறீர்கள். இதற்கு ஏன் இத்தனை பந்தா./////////////


ஜெகதீஷ் உங்களை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது . அது உங்கள் தவறு அல்ல அரசியல் நாகரிகம் அற்ற தமிழ் நாட்டில் நீங்கள் இருப்பதால் தான் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள் . என்றுமே வைகோ தனிப்பட்ட விரோதங்களை அரசியலில் காட்டுவது இல்லை . மூன்று உயிர்களை காக்க கடந்த தேர்தலில் அவமான படுத்திய ஜெயாவை சந்திக்க வைகோ நினைக்கிறார் என்றால் அவரை போல் நல்ல ஒரு தலைவரை நாம் பார்க்க முடியுமா ? மாற்றம் வேண்டும்

Post a Comment

Send your Status to your Facebook