மாற்று அரசியலின் துவக்கம் குறித்தும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் தமிழருவி மணியன் அவர்களின் சிறப்பு காணொளி .
இன்றைய அரசியல் சூழலில் என் கண் முன்னால் நெறி சார்ந்த ஒரு நேர்மையாளராக லட்சிய பிடிப்பு மிக்க கொள்கை வீரராக தன்னலமுற்று தமிழ் சமுதாயத்திற்கு இனப்பற்றும், மொழிப்பற்றும், கொண்டு போராடும் போராளியாக, இருப்பவர் வைகோ என் மிக மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் நம்புகிறேன் .எனவே வைகோ.
அவர்கள் இன்றைக்கு களத்தில் தனியாக நிற்கிறார் . அவர் தனியாக நிற்கிறார் என்று நாம் நினைக்காமல் தமிழர்கள் தம் துணையோடு நிற்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் .இனப்பற்று உடைய மக்கள், மொழிப்பற்று உடைய மக்கள், தமிழகத்தின் உரிமைகளை போராடி பெற வேண்டும் என தாகத்தோடு தவிக்க கூடிய மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண் முன்னால் இயற்கையாக வந்து நிற்க கூடிய மனிதனாக தான் இன்றைக்கு வைகோவை என்னால் பார்க்க முடிகிறது.
எனவே ஒவ்வெரு இடத்திலும் மதிமுக நிறுத்தியிருக்கிற வேட்பாளரை அவரின் தகுதியறிந்து அந்த வேட்பாளரை நிறுத்தியிருக்க கூடிய தலைவர் வைகோ அவர்களுடைய வாழ்வின் திறன் அறிந்து நீங்கள் வாக்களிக்கக் வேண்டும். இன்றைக்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது ஆட்சி மாற்றம் என்பது வெறும் காட்சி மாற்றமாக முடிந்து விடல் ஆகாது.
அடுத்தது நாம் அரசியல் மாற்றம் நோக்கி நகர்ந்தாக வேண்டும் . அரசியல் மாற்றம் நோக்கி நகர வேண்டும் என்றால் லட்சியம் சார்ந்த ஒரு தலைவர் வேண்டும் அதற்கு ஒரு கூட்டு சூழல் வேண்டும் என்பது தான் இன்றைக்கு முக்கியம் . இன்று இடது சாரி இயக்கங்கள் வெவ்வேறு திசையில் பிரிந்து கிடந்தாலும் கூட இன்னும் வரும் ஐந்து ஆண்டுகளில் மிக பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்க கூடிய மிக பெரிய அணி உருவாக கூடும் என நான் நம்புகிறேன் . அந்த அணியில் மிக முக்கியமான இடத்தை மதிமுகவும் அதன் தலைமை பொறுப்பில் இருக்கும் வைகோ அவர்களும் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
எனவே நல்ல அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காகவே சமூக பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருக்கும் காந்திய இயக்கம் அரசியல் மாற்றம் நிகழும் என்றும் நம்புகிறது . இன்றைக்கு திமுகழகம் அண்ணா திமுகழகம் இரண்டுக்கும் மாற்றாக இருக்க கூடிய வேட்பாளர்களை மனதில் நிறுத்துங்கள் மாற்று அரசியலை உருவாகக் முயலுங்கள் . அப்படி மாற்று அரசியலை உருவாக்க முனைகிற போது மதிமுகவில் நிற்க கூடியவர்களுக்கு வைகோவை நெஞ்சில் நிறுத்தி முன்னுரிமை வழங்குங்கள் என்று என்னுடைய காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் கேட்டு கொள்கிறேன் .
-- தமிழருவி மணியன்
நன்றி இமயம் தொலைக்காட்சி |
0 கருத்துக்கள்:
Post a Comment