• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Thursday

மே தினமும் தல பிறந்த நாளும்

1மே தினம் என்னும் உலக தொழிலாளர் தினமாக மே முதலாம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .

18 ம் நூற்றாண்டு மற்றும் 19 ம் நூற்றாண்டு துவக்கத்தில் தொழில் துறை வளர்ச்சியடைந்த கால பகுதியில் தொழிலாளர்கள் பன்னிரண்டு மணி நேரம் முதல் பதினெட்டு மணி நேரம் வரை வேலை செய்ய கட்டாய படுத்தப்பட்டனர் . அதற்கு எதிராக தொழிலாளர் இயக்கங்கள் குரல் கொடுத்தன மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் .

உலகம் முழுவதும் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.   அந்த அறைகூவல் விடுத்த மே முதல் நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .  

அனைத்து தொழிலாளர் பெரு மக்களுக்கும் மே தின வாழ்த்துக்கள் . அப்புறம் முக்கியமா இன்று தான் உழைப்பின் சிகரம் தன்னம்பிக்கையால் வாழ்க்கையில் சாதித்து காட்டிய ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் இன்று தான் பிறந்த நாள் . மே  தினத்தில் பிறந்த அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

எத்தனை துன்பங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும், எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் அல்ல. ஆயிரம் முறை தோற்றவன்

ஈழ தமிழர்களுக்காக தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டு கோள் விடுத்திருக்கிறார் அஜித் . சிங்கள அரசின் இனவெறிக்கு உள்ளான தமிழினம் படும் வேதனையை இந்த நாளில் நினைத்து பாப்போம் . போர் நிறுத்தம் ஏற்பட்டு மிக விரைவில் சகஜ வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பட்டும்
Read More

Send your Status to your Facebook