Wednesday

தமிழர்களுக்காக எந்த இழிவையும் ஏற்க தயாரா ? இந்தியா

இன்றைய இந்தியாவை பொருத்தவரையில் தமிழர் நலனை விட சிங்களர்களின் நலன் பெரிதாக படுகிறது . அதற்காக சிங்களனிடமிருந்து வரும் எந்த இழிவையும் பொறுத்து கொள்ள தயாராக இருக்கிறது மத்திய அரசு . ஏனெனில் சிங்கள இராணுவம் ஈழ தமிழர்களை கனரக ஆயுதங்களின் மூலம் கொலை செய்கிறதாம் .

நார்வே நாட்டின் மூலம் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை ஒருதலை பட்சமாக முறித்து கொண்ட சிங்கள அரசானது தமிழர் பூமியன் மீது காட்டுமிராண்டி தனமான போரை நடத்தி தினம் தினம் தமிழர்களை கொன்று வருகிறது . சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழர்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். பங்காள தேசத்திலிருந்து அகதிகள் இந்தியாவுக்கு வந்த நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து வங்காள மொழி பேசும் மக்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கி கொடுத்தது வரலாறு .

ஆனால் இன்று அந்த வரலாறு மாறி நூறு கோடி மக்கள் கொண்ட , அணுசக்தி வல்லமை கொண்ட, வல்லரசாக தகுதி உள்ள இந்தியா, இலங்கைக்கு உளவுபார்க்கும் ஒரு ஒற்றன் போல மாறியது . அப்படி உளவு சொன்னாலும் நமக்கு ஏதாவது மரியாதையை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை . மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி .ஆர் . பாலு அவர்கள் தன்னுடைய பேட்டியிலே இந்தியாவை ஒரு சிறிய நாடான இலங்கையே மதிக்க வில்லை என உண்மையை ஒத்து கொண்டார் .

இந்த நிலையில் நாம் எப்படி இந்தியன் என பெருமை கொள்ள முடியும் ? அடுத்த நாட்டினர் காறி துப்பும் நிலையில் ஒவ்வெரு இந்தியனும் இருக்கிறானா ? நாம் அங்கு சென்றாலும் அவர்கள் நம்மை வரவேற்க தயாரில்லை . அதுவும் ஒரு வெளியுறவு துறை அமைச்சரை . இலங்கை தமிழ் எம்பி சொன்னார் பிரணாப் முகர்ஜி அவர்கள் அங்கே போக வேண்டியதில்லை. மகிந்தா ராஜபக்ஷேவை (இலங்கை ஜனாதிபதி ) இங்கே அழைத்து கண்டித்தால் போதும் . அதற்குரிய தகுதியும் பலமும் இந்தியாவிடம் இருக்கிறது என்றார் .

இலங்கை தமிழ் எம்பிக்கு தெரிந்த பலம் காங்கிரஸ் அரசுக்கு தெரியவில்லையா ? ஏன் இந்தியர்களுக்கு பலம் இல்லையா ? இந்தியா சொல்லுவதை இலங்கை கேட்கவேண்டுமா ? இல்லை இலங்கை சொல்வதை இந்தியா கைகட்டி நின்று கேட்க வேண்டுமா ? இலங்கை ஈழ தமிழர்களை தான் கொலை செய்கிறது சரி அதே நேரம் இந்தியாவின் குடியுரிமை பெற்ற தமிழக மீனவர்களை சுட்டு கொல்கிறதே அதற்கு என்ன நடவடிக்கை . எல்லை மீறும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்காக பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று நினைத்த இந்தியாவே ? ( அதெல்லாம் சும்மா படம் தான் நம்மளால போர் தொடுக்க முடியாது) இந்தியா கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து தமிழர்களை கொலை செய்த இலங்கைகையின் அழைப்புக்காக காத்திருக்கிறாயா?

ஒட்டு மொத்த தமிழர்களும் பொங்கி எழுந்த பின்னரும் உணர்வில்லாத காங்கிரஸ் அரசே ! தமிழர்கள் சாகிறார்கள் என்ற மகிழ்ச்சியில் இலங்கையின் இழிவையும் ஏற்று கொள்ள தயாராக இருக்கும் மத்திய அரசே ! இத்தனை நாளும் தமிழர்களை தண்டித்த உனக்கு தமிழர்கள் தண்டனை தர தயாராக உள்ளனர் .

தமிழன் உயிரைவிட மானத்தை பெரிதென நினைப்பவன் . ஆனால் இலங்கையிடம் மானமிளந்தது இந்தியாதான் என்று ஒதுங்கி விடமுடியாது தமிழ் நாடு இந்தியாவின் மாநிலமாக இருப்பதால் .

14 கருத்துக்கள்:

RAJ said...

I FEEL SHAME TO BE AINDIAN CITIZEN,

I HATE INDIA

ஜோதிபாரதி said...

நம்முடைய ஆதங்கம் அரசியல் செய்யும் ஒப்பனைத் தமிழனுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காய் அல்லவா உரத்து ஒலிக்கிறது.

Anonymous said...

இந்திய உடலில் இத்தாலி இரத்தம் ஓடினால், எப்படி வரும் தமிழ் உணர்வு?

Anonymous said...

gud 1

winner said...

காங்கிரஸ் கட்சி தோற்கும் பட்சத்தில் தான் இதற்கு விடிவு வரும்

Suresh Kumar said...

நம்முடைய ஆதங்கம் அரசியல் செய்யும் ஒப்பனைத் தமிழனுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காய் அல்லவா உரத்து ஒலிக்கிறது./////////

நாமும் சங்கை ஊதி தான் பார்க்கிறோம் . ஆனால் கடைசியில் நீங்கள் சொன்னது போல் தான் இருக்கிறது .

வருகைக்கு நன்றி ஜோதி பாரதி

Suresh Kumar said...

I HATE INDIA ////

தமிழன் இறப்பதை பற்றி இந்தியா கவலை படாத பட்சத்தில் ஒவ்வெரு தமிழனுக்கும் வரும் உணர்வு தான்

நன்றி ராஜ்

Suresh Kumar said...

காங்கிரஸ் கட்சி தோற்கும் பட்சத்தில் தான் இதற்கு விடிவு வரும்///////


தமிழ் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

Anonymous said...

தமிழ்நாட்டில் காங்கிரசு செத்தொழிந்து விட்டது.
இந்தியாவில் செத்துக் கொண்டிருக்கிறது.
சரியான எதிர்க் கட்சியில்லாததால் உயிர் வாழ்கின்றது.அதுவும் வரும் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சிதான் அமையும்.
அதுவரை புலிகள் கட்டாயம் தாக்குப் பிடிப்பார்கள்,பின்னர் அலறும் சிங்களம் இந்த்யாவின் கால்களிலே விழும்.

மெல்போர்ன் கமல் said...

நிஜாயமான கேள்விகள் சுரேஸ்.. ஆட்சியாளர்களுக்கு எப்படி மக்களின் அவலம் புரியும்????

Suresh Kumar said...

ஆட்சியாளர்களுக்கு எப்படி மக்களின் அவலம் புரியும்????///////


ஒருநாள் மக்கள் புரிய வைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை .

நன்றி கமல்

Thooya said...

வேதனையை தவிர எதை கண்டோம்..

தளபதி said...

CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !

Suresh Kumar said...

@Thooya
வேதனையை தவிர எதை கண்டோம்////////

ஒருநாள் வேதனை மாறும் தமிழ் ஈழம் பிறக்கும்

Post a Comment

Send your Status to your Facebook