Saturday

பணம் பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது பணத்திற்கு முன்னால் தமிழனின் இன மானம் தூசு

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழினத்திற்கே ஆச்சரிய படுத்திய முடிவாக அமைந்தள்ளது . இந்தியாவே எதிர்பார்த்த தமிழக தேர்தலில் தமிழன் பணத்திற்காக இன மானத்தை விலை பேசியதன் விளைவு தான் இந்த தேர்தல் முடிவுகள் .

திருமங்கலம் தொகுதியில் துவங்கிய பண விநியோகம் இன்று நாடாளுமன்றம் வரை வந்திருக்கிறது என்றால் இது ஒரு தவறான முன்னுதாரணமே . எட்டி கால் வைக்கும் தூரத்தில் சிங்கள இனவெறியர்களால் தினம் தினம் தமிழர்கள் இன படுகொலை செய்து கொண்டிருக்கிறேன் . அதற்கு மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் உதவி செய்கிறது . சிங்கள ராணுவத்தால் நம் மீனவர்கள் சுட்டு கொள்ள பட்ட போதும் இந்த ஆட்சிகள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வில்லை . இதற்கு மாற்று அணி வந்தால் தான் தமிழன் மானம் ரோசம் கொண்டவனாக இருக்க முடியும் . அந்த வகையில் தமிழன் மானம் ரோசம் உள்ளவனாக இருப்பான் என்றால் அதையும் தாண்டி சில தொகுதிகளை தவிர பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் வர்க்கத்தின் பணத்திற்கு தமிழினம் அடிமையாகி விட்டது .

தேர்தல் வருகிறது அதற்காகவாவது சிறிய அளவிலாவது போர் நிறுத்தம் செய்ய முயற்சிப்பார்கள் என்றால் அதுவும் இல்லாமல் தன பணத்தையே நம்பி தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது என்றால் இது ஒரு மோசமான முன்னுதாரணமே .

தமிழக வாக்காளர்கள் கொடுத்த வெற்றியின் நோக்கம் என்ன தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் சொல்லுகிறார்கள் தமிழகத்தில் அதிசயம் நடந்ததாக  .  அந்த அளவிற்கு உலகமே எதிர் பார்த்த தமிழக முடிவுகள் மாறியிருக்கிறது என்றால் இனி வரும் காலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இல்லை சிறு வாய்ப்பு கிடைத்தாலும் கொள்ளை அடிப்பதை விட வேறு என்ன எண்ணம் வரும் . இந்த தீர்ப்பு மக்கள் தீர்ப்பு அல்ல பணத்திற்கு கிடைத்த வெற்றி . இந்த நேரத்திலும்  பணத்திற்கு விலை போகாமல் தன்மானத்தை காத்து தமிழினத்திற்கு ஓரளவாவது இன மானம் இருக்கு என்று நிரூபித்த வாக்காளர்களுக்கு தலை வணங்குகிறோம்

12 கருத்துக்கள்:

Mangai said...

பார்ப்பனர்களை தமிழின திரோகி என்றும், தமிழன் மாநஸ்தன். தமிழன் இன்னொரு தமிழனுக்காக எது வேண்டுமானாலும் செய்வான் என்று எல்லாம் கொக்காரித்தவர்களை இப்போது தமிழன் சில சில்லரை நோட்டுக்கள் பெற்றுக் கொண்டு ஒரு குடும்பத்துக்கு தமிழ்நாட்டை எழுதி வைத்து விட்டு சன் தொலைக்காட்சியில் அந்நியன் பார்த்து கொண்டு இருக்கிறான்.

புரிந்து கொள்ளுங்கள் தமிழனுக்கு திரோகி யார் என்று

S Senthilvelan said...

தங்களுக்கு நல்ல "சீஸ்" கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும் இலங்கை தமிழர்களும் சாமான்ய மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்று தோன்றுகிறது..

paulos raja said...

காங்கிரசுக்கு இறங்குமுகம் என்பதை கவனித்தீரா ? தமிழனின் இன மானம் முழுவதும் ஒழியவில்லை என்று நினைக்கிறேன். ! சீமானுக்கு நன்றி ந்!

Anonymous said...

i am happy to see that main congress leaders are defeated in election. because they deserved it. but your abusement about tamil people is utter crap.

Anonymous said...

சும்மா நெனைச்சதெல்லாம் எழுதாதிங்க... என்னதான் பணம் கொடுத்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது...
அவர்களின் சரியான முடிவே இந்த தி.மு.க வெற்றி..
...
ஈழ தமிழர்களுக்கு எங்களை விட்டால் ஆளில்லை என்று, இலங்கை பிரச்சனையை அரசியல் ஆக்கிய ப.ம.க. விற்கும, ம.தி.மு.க விற்கும் மக்கள் அளித்த சம்மட்டி அடிதான் இந்த தீர்ப்பு...

கேவலமான அரசியல் வியாபாரி ராமதாஸ் இனிமேலாவது திருந்த வேண்டும்.. ஈழ பிரச்சனையை வைத்து மக்களை ஏமாற்றிய இவர்கள் இனிமேலாவது திருந்த வேண்டும்..

Anonymous said...

ஈழத்தில் சாகிரவர்களுக்காக , இன்கிருப்பவர்களையும் கொல்லத்துணிந்த கூட்டத்தை தூக்கி எறிந்திருக்கிறார்கள் . பிரபாகரனை மாவீரன் என்று தூக்கி பிடித்தவர்கள் மூஞ்சியில் கரி பூசியிருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு செய்திருந்தாலும் இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று ...ஆஹா

Anonymous said...

Hi,
We dnot know the real fact.. the elam issue is not reached to the villages. we are only talking in the blogs and thought that people of TN will go against Cong and DMK. So there is no point in arguing the blogs. it is waste of time.
People voted for money. if you give money they will vote for u also. there would not be any change in the elam issue hereafter. the elam people ..please donot depend on us (TN).. Try to fight on ur own with the international community support..

oru varuthapadum tamilan

Anonymous said...

This is the first time in my life i m feeling why i born in this tamil community.

yours,

a guy born in the community of tamils.

Anonymous said...

பணக்கார அரசியல்வாதிகள் சீட்டுக்காக கொள்கைகளை விட்டு நேற்று ஒன்று இன்று ஒன்று பேசுவதை விட ஏழைகள் காசு வாங்கி விசுவாசம் காட்டுவது கேவலமில்லை

Suresh Kumar said...

பெயரில்லா கூறியது...

பணக்கார அரசியல்வாதிகள் சீட்டுக்காக கொள்கைகளை விட்டு நேற்று ஒன்று இன்று ஒன்று பேசுவதை விட ஏழைகள் காசு வாங்கி விசுவாசம் காட்டுவது கேவலமில்லை ////////////

இங்கே பதிவிட்ட அனானிகள் பெரும்பாலும் காசு வாங்கி மக்கள் விசுவாசம் காட்டுவது தவறில்லை என்று தான் பேசியிருக்கிறீர்கள் . இந்த நேரத்தில் ஈழத்திலே பிச்சைகாரனையே கண்டிராத மக்கள் இன்று யாரை கண்டாலும் கையேந்தும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று ஸ்ரீ ராமாக்ரிசணன் ஜி சொன்னதை நினைவு படுத்துகிறேன் . அங்கெ மக்களை பிச்சைகாரகள் ஆக்கியது ராஜ பக்ஷே குரூப் இங்கே வாக்குகளுக்காக பிச்சைகாரகளாக்கியது கருணாநிதி குரூப் ...................

மொத்ததில மக்களுக்கு பண்பாடு கலாசாரம் எல்லாமே மாறி போச்சு யாரை கண்டாலும் கையேந்துவது அந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் . இது தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் நான் என்ன செய்ய முடியும் .

Anonymous said...

பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து தேயிலை தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்ற தமிழனை இலங்கை தமிழர்கள் எவ்வாறு நடத்தினார்கள் என்பதை காலம் கடந்தும் யாரும் மறக்கவில்லை

கார்க்கி said...

கிகிகி.. தாமதமா வந்துட்டேன்..

வைகோ என்ன செய்து கொண்டிருக்கிறார் சகா?

Post a Comment

Send your Status to your Facebook