18 ம் நூற்றாண்டு மற்றும் 19 ம் நூற்றாண்டு துவக்கத்தில் தொழில் துறை வளர்ச்சியடைந்த கால பகுதியில் தொழிலாளர்கள் பன்னிரண்டு மணி நேரம் முதல் பதினெட்டு மணி நேரம் வரை வேலை செய்ய கட்டாய படுத்தப்பட்டனர் . அதற்கு எதிராக தொழிலாளர் இயக்கங்கள் குரல் கொடுத்தன மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் .
உலகம் முழுவதும் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. அந்த அறைகூவல் விடுத்த மே முதல் நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .
அனைத்து தொழிலாளர் பெரு மக்களுக்கும் மே தின வாழ்த்துக்கள் . அப்புறம் முக்கியமா இன்று தான் உழைப்பின் சிகரம் தன்னம்பிக்கையால் வாழ்க்கையில் சாதித்து காட்டிய ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் இன்று தான் பிறந்த நாள் . மே தினத்தில் பிறந்த அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
எத்தனை துன்பங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும், எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் அல்ல. ஆயிரம் முறை தோற்றவன்
ஈழ தமிழர்களுக்காக தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டு கோள் விடுத்திருக்கிறார் அஜித் . சிங்கள அரசின் இனவெறிக்கு உள்ளான தமிழினம் படும் வேதனையை இந்த நாளில் நினைத்து பாப்போம் . போர் நிறுத்தம் ஏற்பட்டு மிக விரைவில் சகஜ வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பட்டும்
0 கருத்துக்கள்:
Post a Comment