இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label ஒபாமா. Show all posts

Tuesday
உலக தமிழர்களே ஈழ தமிழர்களுக்காக ஒரு கையெழுத்து
அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹிலாரி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. தமிழர்களின் சார்பில் அனுப்பப்படவுள்ள இந்த மனுவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இணையம் ஊடாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும் இக்கடிதத்தின் இணைப்பு
http://www.tamilsforobama.com/sign/usersign.html
கடிதத்தின் தமிழாக்கம்:
மாண்புமிகு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா அவர்களுக்கும் மற்றும் மரியாதைக்குரிய அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹில்லாறி கிளிண்டன் அவர்களுக்கும்!
இக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கும் நாங்கள், இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏனெனில் -
1. இந்தப் போரானது தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வட-கிழக்கு பகுதி மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும் அழிப்வை ஏற்படுத்தி, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் இருந்து அவர்களை அகற்றி இனச்சுத்திகரிப்பச் செய்வதே இந்தப் போரின் நோக்கமாகும். முதலாம் நூற்றாண்டு காலத்தில், றோமன் இராச்சியத்தில் பலஸ்தீனத்திலிருந்து யூதர்களைத் துரத்தியது போன்ற பெரும் மக்கள் இடப் பெயர்வு அங்கு இப்போது நிகழ்கின்றது.
2. ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலேயே இந்த தமிழின அழிப்பு ஆரம்பித்து விட்டது. தமிழர் நிலங்களைப் பறித்து, அவற்றுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி, அவற்றில் சிங்களக் குற்றவாளிகளைக் குடியேற்றி, அவற்றில் இராணுவ முகாம்களை நிறுவுதல் என இந்த இனச் சுத்திகரிப்பு ஆரம்பித்தது. தொடர்ந்து, தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழர்களது பொருளாதார வாழ்வு சீரழிக்கப்பட்டது. மேலும், கடந்த 25 வருட காலமாக தமிழர் படுகொலைகளும், கைதுகளும், காணாமல் போதலும், மட்டுமன்றி தமிழர் வாழ்விடங்கள் மீது வான், தரை, மற்றும் கடல் வழியான தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
3. சிறிலங்கா அரசாங்கமானது புத்த மதத்தை நாட்டின் அரச மதமாக்கி, இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை குண்டு வீசி அழித்து விட்டு, பின்னர் அந்த இடங்களில் புத்த விகாரைகளைக் கட்டுகின்றது.
4. அனைத்து சமாதான முயற்சிகளையும் நிராகரித்து, சமரச உடன்பாடுகளையும் கிழித்தெறிந்த சிறிலங்கா அரசாங்கங்கள், இப்படியான முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளையும் போடுகின்றன.
5. தமிழ் மக்களுக்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்தியதோடு, சிறிலங்கா அரசாங்கமானது, அந்த நிறுவனங்களை நாட்டை விட்டும் துரத்தியது. சில சந்தர்ப்பங்களில், அவர்களைக் கொலைகளும் செய்துள்ளது.
இந்த இனப்படுகொலைப் போரை நிறுத்துவதற்கு, புதிய ஒபாமா அரசாங்கம் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை எடுக்குமென்றும், தமிழர்களுக்கு நல்ல வழி ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.
எங்களது இந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்தமைக்கு எமது நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.
நன்றி.

Read More

Subscribe to:
Posts (Atom)