• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label கம்யூனிஸ்ட். Show all posts
Showing posts with label கம்யூனிஸ்ட். Show all posts

Sunday

ஒபாமா வருகையை எதிர்ப்பதா? இடதுசாரிகளுக்கு வைகோ கேள்வி!

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நவம்பர் 8 ஆம் தேதியன்று, நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகச் செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சியையும், மிக்க வேதனையையும் தருகிறது.

பலநுhறு ஆண்டுகளாக ஆப்பிரிக்கக் கண்டத்துக் கருப்பு இன மக்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு, அமெரிக்க நாட்டிலும், உலகின் வேறு சில பகுதிகளிலும் கொடூரமாக வதைக்கப்பட்டதை ஆய்வு செய்தால் ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.

அமெரிக்க நாட்டில் கொடும் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு, மனிதர்கள் என்ற பட்டியலிலேயே இடம் பெறாமல் இருநத கருப்பர்கள், போராடிப்போராடி, சிறுகச்சிறுக உரிமைகள் பெற்று, 1863 ஜனவரி 1 இல் ஆப்ரகாம் லிங்கன் கருப்பர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, அதைத்தொடர்ந்தும் அவர்கள் போராடி, மகத்தான தியாகங்களைச் செய்து, 1963 இல் பல லட்சம் மக்களிடையே மார்ட்டின் லுhதர் கிங்நான் கனவு காணும் உலகம்என அறிவித்து, அவரும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டு, கருப்பர்கள் நடத்திய போராட்டப் பயணத்தில் உலகம் போற்றும் திருப்புமுனையாக ஒரு கருப்பு இனத்துத் தந்தையின் மகனாகப் பிறந்த பாரக் ஒபாமா அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகி உள்ளார்.

இந்திய தேசப்பிதா என்று போற்றப்படும் அண்ணல் காந்தியாரை மனிதகுலத்தின் ஒளிவிளக்காகப் போற்றுகின்ற பாரக் ஒபாமா, தன் அலுவலக அறையில் காந்தியாரின் படத்தையும் வைத்து உள்ளார்.

ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்துள்ள பாரக் ஒபாமாவை, இந்திய மக்கள் வாழ்த்தி வரவேற்கக் கடமைப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்காவின் கொள்கைகள் இந்திய மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதால், பாரக் ஒபாமாவை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் எனக் கூறி உள்ளன.

பாரக் ஒபாமா, தனது தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஈராக்கில் இருந்து பெருமளவு அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற ஆணை பிறப்பித்து உள்ளார். மீதம் உள்ள ஐம்பதாயிரம் பேரும், அடுத்த ஆண்டு இறுதிக்கு உள்ளாகத் திரும்ப அழைக்கப்படுவர் என்று உறுதி அளித்து உள்ளார்.

குவான்டனமோ வளைகுடா சிறைச்சாலையில் சித்திரவதை நிறுத்தப்பட்டு, அந்தச் சிறைச்சாலையையும் மூடுவதற்கு ஒபாமா உத்தரவிட்டார்.

அமெரிக்க நாட்டின் பொருளாதாரம், ஜார்ஜ் புஷ்ஷின் எட்டு ஆண்டுக்கால தவறான நிர்வாகத்தாலும், ஈராக் மீதான படையெடுப்பாலும் நொறுங்கிப் போய், மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் ஏற்பட்டு, பதினைந்து சதவீதம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய், பல லட்சம் அமெரிக்க மக்கள் மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் இன்றிப் பட்டினியோடு போராட வேண்டிய அவலமும் ஏற்பட்டு, அனைத்து பாரங்களையும் சுமக்க வேண்டிய நெருக்கடிக்கு ஒபாமா ஆளாகி உள்ளார்.

உலகம் போற்றும் புரட்சியாளரான கியூபாவின் ஃபிடல் கேஸ்ட்ரோ அவர்கள், ‘பாரக் ஒபாமாவை, குறிக்கோளில் நேர்மையாளராகவே பார்க்கிறேன்என்று பாராட்டி உள்ளார்.

அமெரிக்காவையும், அதன் அதிபரையும் கடுமையாகச் சாடுகின்ற வெனிசூலா அதிபர் ஊஹோ சாவேஸ் அவர்கள்கூட, பாரக் ஒபாமா மீது கடுமையாக சவுக்கை வீசவில்லை.

அமெரிக்க அதிபருக்கு ஆவேசமான எதிர்ப்பைக் காட்டும் இடதுசாரிகளுக்கு ஒரு கேள்வி.

போபால் விஷவாயுக் கசிவால் எண்ணற்ற மக்கள் உயிர் இழந்தபின், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிறப்பு விமானம் மூலம் போபாலில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அமெரிக்காவுக்கே பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட உண்மை அண்மையில் வெளியானதே, அதற்குக் காரணமான காங்கிரஸ் அரசைக் கண்டித்து, இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினார்களா? இல்லை.

ஆப்கானிஸ்தானத்தில் அங்கிருந்த அரசுகளைக் கவிழ்த்து, ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானத்தில் கொண்டு போய் சோவியத் ரஷ்யா நிறுத்தியதற்கு, இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்தது உண்டா?

இந்தியாவின் ஒரு பகுதியான அருணாசலப் பிரதேசத்தை, இந்தியப் பகுதியாக ஏற்றுக் கொள்ளாமல், தங்கள் பகுதி என்று வரைபடம் வெளியிடுகின்ற சீன அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியது உண்டா?

ஜம்மு காஷ்மீரில் இருந்து சீனாவுக்கு வருகின்றவர்களுக்கு, கடவுச்சீட்டில் முத்திரை இடாமல், தனித்தாளில் விசா கொடுப்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்தியப் பகுதியை, பாகிஸ்தானுக்கு உரியது என்றும் சீனா அதிகாரபூர்வமாகச் சொல்லி வருவது குறித்து சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, சீனப் பிரதமர் வென்ஜியாபோ, அடுத்து இந்தியா வருகின்றபோது, அவரை எதிர்த்து இடதுசாரிகள் நாடெங்கும் கண்டனப் போராட்டம் நடத்த முன்வருவார்களா?

இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு செய்ததைப் போல, சீன அரசும் ஆயுதங்கள் வழங்கியதே, அதை இடதுசாரிகள் கண்டித்தார்களா?

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் கொடூரப் படுகொலைக்கு ஆளானபோது, தனது நாடு விடுதலைப்புலிகளைத் தடை செய்து இருந்தபோதிலும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, போரை நிறுத்தச் சொல்லி மூன்று முறை குரல் கொடுத்தார்.

முள்ளிவாய்க்கால் கொடூரம் நிகழ இருந்த நேரத்தில், 2009 மே 13 ஆம் தேதி, வெள்ளை மாளிகையில் ஒரு அவசர பத்திரிகையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் வேறு பிரச்சினைகளில் பலர் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும்போது, இலங்கைத் தீவில் தமிழர்களுக்குப் பெரும் அவலம் நேருகிறது என்று வேதனையோடு ஒபாமா அறிவித்ததையும், தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

கருப்பு இனத்தில் இருந்து, வெள்ளை மாளிகை அதிபராகி உள்ள பாரக் ஒபாமா அவர்களை, இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களும் கட்சி, மத எல்லைகளைக் கடந்து வாழ்த்தி வரவேற்க வேண்டுகிறேன்.

இடதுசாரிகள், தங்கள் போராட்ட அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்

தாயகம், வைகோ,
சென்னை -8 பொதுச் செயலாளர்,
31.10.2010 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
Read More

Monday

விடுதலை புலிகள் வேறு ஈழ தமிழர்கள் வேறு


மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரந்தா காரத் அவர்கள் சொல்லுகிறார்கள் விடுதலை புலிகள் வேறு ஈழ தமிழர்கள் வேறு .

அப்படியென்றால் விடுதலை புலிகள் வேற்று கிரகத்திலிருந்து வந்திருப்பார்களோ? இருந்தாலும் இருக்கும் ஏனெனில் சொன்னது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் .

கம்யூனிஸ்ட் கட்சி இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் . கம்யூனிஸ்ட் காட்சியில் வலது இடது என இரண்டு கட்சிகள் இருக்கிறது. முதலில் இந்திய கம்யூனிஸ்ட் என்று ஒரு கட்சி தான் இருந்தது. பின்னர் இந்தியாவுக்கும் சைனாவுக்கும் போர் ஏற்பட்ட காலத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த கட்சி தான் மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் .

இந்த மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் அதாவது இடது கம்யூனிஸ்ட் இந்தியாவில் கட்சி நடத்தினாலும் உலக கம்யூனிஸ்ட் கட்சி என்றே நினைத்து இந்தியாவில் கட்சி நடத்துவார்கள் . உலகத்தில் உள்ள எந்த ஒரு கம்யூனிஸ்ட் நாடுகளோ மற்ற நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளோ தவறு செய்தாலும் . இது கட்சியின் கொள்கை என்றே வாதிடுவார்கள்.

இந்தியாவுக்கு எதிராக இந்த கம்யூனிஸ்ட் நாடுகள் செயல் பட்டால் கூட அதையும் நியாயபடுத்துபவர்கள் தான் இடது கம்யூனிஸ்டுகள் .

இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் தமிழ் நாட்டில் இடது கம்யூனிஸ்ட் செயல்பாட்டை பார்த்தாலே போதும் தெரிந்து விடும். தோழர் ஜீவா அவர்கள் தமிழ் நாட்டின் மாநில செயலாளராக இருந்த போது தமிழகத்து உரிமைக்கு எதிராக குரல் கொடுத்த கேரளா மாநில கம்யூனிஸ்ட்க்கு எதிராக தீர்மானம் போட்டது வரலாறு. அந்த ஜீவாவின் வழியில் வந்த தோழர்கள் தான் இன்றும் இந்திய கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இருக்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள் துவக்கம் முதலே நாட்டு பற்று மொழி பற்று கொண்டவர்கள். ஆனால் இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்போதும் இந்திய அளவில் எடுத்து கொண்டால் சைனாவுக்கு ஆதரவாக பேசுவார்கள் . மாநில அளவில் எடுத்து கொண்டால் கேரளாவுக்கு ஆதரவாக பேசுவார்கள். அந்த நிலையில் தான் விடுதலை புலிகள் வேறு ஈழ தமிழர்கள் வேறு என பேசியிருக்கிறார்.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தை மக்கள் ஆதரித்த போது அந்த இயக்கமும் மக்களுக்காக போராடும் இயக்கம் என்றார்கள். இதை தான் தமிழ் ஈழ மக்கள் எத்தனை முறை நிரூபித்து விட்டார்கள். எத்தனை தேர்தல்களில் எங்களையும் விடுதலை புலிகளையும் பிரிக்க முடியாது. என கூறி விட்டார்கள் மீண்டும் ஏன் தமிழனின் சுதந்திரத்தை தடுக்க பார்க்கிறீர்கள்.

உங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும் பிராபாகரன் ஏன் நான் ஒரு கம்யூனிஸ்ட் என சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் நீங்கள் ஆதரித்திருப்பீர்கள். ஆனால் மக்கள் ஆதரித்திருக்க மாட்டார்கள். அதை தான் புரட்சி மூலம் வென்ற க்யுபா அதிபர் பெடல் காஸ்ட்ரோ உலகத்திற்கு காட்டினார். பிடல் காஸ்ட்ரோ தான் புரட்சியை மேற்கொண்ட போது அவர் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே புரட்சியை வேக படுத்தாது மாறாக புரட்சியை மந்த படுத்தும் என்பதை உணர்ந்து கம்யூனிஸ்ட் இல்லாதா ஒரு தலைவனாக புரட்சியை முன்னெடுத்து வென்றார் என்பது வரலாறு . ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தான் கம்யூனிஸ்ட் காட்சியில் இணைந்தார்.

அன்பார்ந்த கம்யூனிஸ்ட் (இடது ) தோழர்களே தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் முப்பது ஆண்டுகளாக மக்கள் ஆதரவோடு ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் அந்த போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இனவிரோத கொள்கைக்கு தான் துணை நிர்பீர்களே என்றால் உங்களை காலம் மன்னிக்காது.



உங்கள் ஓட்டுகளை மறக்காமல் தமிழ்மணத்திலும் தமிளிஷிலும் குத்துங்கோ
Read More

Send your Status to your Facebook