இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label கேடி பிரதர்ஸ். Show all posts

Wednesday
கேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா
எழுதியது
Suresh Kumar
Labels:
கேடி பிரதர்ஸ்,
சமூகம்,
சன் டிவி,
நித்தியானந்தா,
ரஞ்சிதா
எழுதிய நேரம்
Wednesday, July 13, 2011
கடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேச பட்ட ஒரு சில சம்பவங்களில் நித்தியானத்தா ரஞ்சிதா படுக்கையறை காட்சிகளும் அடங்கும். மீண்டும் அதே சம்பவம் பரபரப்பை உருவாக்கி கொண்டிருக்கின்றன. பிரமச்சாரத்தை குறித்தும் மனிதனின் காமத்தை குறைக்கும் வழிகள் குறித்து தன்னுடைய போதனை மூலம் பக்தர்களுக்கு வெளி படுத்தி வந்தார் நித்தியானந்தா.
சிறு வயதிலேயே தெய்வீக பணியை துவங்கியதாலும் அறிவாற்றலோடு போதனைகள் செய்ததாலும் நித்தியானந்தாவிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று ஏமாந்து உலகம் முழுவதிலிருந்தும் நித்தியானந்தாவின் ஆசிரம பீடத்தில் பக்தர்கள் குவிய துவங்கினர். இதன் மூலம் கோடி கணக்கான வருவாய் வர துவங்கியது. மிகவும் பிரபலமான அதிக வருவாய் வர கூடிய சாமியார்களில் ஒருவராக இவரும் இருந்து வந்தார். கடவுளை தங்களுக்குள்ளே தேடுவதை விட்டு விட்டு ஏமாந்த மக்களும் இவருக்குள்ளே கடவுளை தேட துவங்கினர்.
இவ்வாறு ஏமாந்த பக்தர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது ஒரு வகையிலும் சீடர்கள் என்ற முறையில் பெண்களை துணைக்கு வைத்து கொள்வதும் இவரை போன்ற சாமியார்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் நடிகை ரஞ்சிதாவும் நித்தியானந்தாவும் படுக்கையறையில் ஒன்றாக இருந்த ஆபாச படத்தை வீடியோவாக கேடி பிரதர்ஸின் சன் டிவி வெளியிட்டது. வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க கூடியதாக இருந்த அந்த காட்சியை சின்ன திரையில் ஒளிபரப்பி அதன் மூலம் கோடி கணக்கான பணத்தை சம்பாதித்தது சன் டிவி நிர்வாகம். குடும்பத்தோடு பார்க்க கூடாத காட்சிகளை எல்லாம் வீட்டு திரையில் கொண்டு வந்து குடும்பத்தினரை சங்கடத்திற்கு உள்ளாக்கியது.
அதன் மூலம் நித்தியானந்தாவின் போலி முகம் வெளி பட்டு நித்தியானந்தாவிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். கர்நாடக காவல் துறையும் வழக்கு பதிவு செய்து நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த காட்சியின் மூலம் நித்தியானந்தாவின் இரட்டை முகம் வெளி பட்டு பக்தர்களே அவருக்கு எதிராக மாறினார்கள்.
ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறுவது போல் உண்மையாக வீடியோ என்று நிரூபிக்க பட்ட காட்சியை போலியானது என்று புகார் கொடுத்திருக்கிறார்கள் சாமியார் தரப்பு. இதுவரை மறைந்திருந்த ரஞ்சிதா வெளியில் வந்து கேடி சகோதர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். அந்த ஆபாச காட்சியை வைத்து கேடி சகோதரர்கள் மிரட்டி இருக்கிறார்கள் என்று. கேடி சகோதரர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. பணம் ஒன்றை குறிக்கோளாக கொண்ட இந்த மாறன் கும்பல் இதையும் செய்திருக்கலாம். இதே புகாரை நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் மீதும் சொல்லியிருக்கிறார்கள். நக்கீரன் பத்திரிக்கையின் நடுநிலை 2G ஊழலின் போதே தெரிந்து விட்டது.
நித்தியானந்தா, ரஞ்சிதா இவர்களால் கொடுக்க பட்ட புகார்கள் மீதான நடவடிக்கை என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வாய்ப்பு இருக்கிறது.
மாறன் கும்பல் கேடிகள் என்பது உலகம் அறிந்தது தான். அதே நேரம் மாறன் கும்பல் மீது குற்றம் சுமத்துவதால் நீங்கள் சுத்தமானவர்கள் அல்ல என்பதை நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாற்று கருத்து இல்லை அதே நேரம் நீங்களும் குற்றத்தை ஓப்பு கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு இனி மேலும் சாமியார் என்று மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்ய கூடாது.

Subscribe to:
Posts (Atom)