Wednesday

கேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா

கடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேச பட்ட ஒரு சில சம்பவங்களில் நித்தியானத்தா ரஞ்சிதா படுக்கையறை காட்சிகளும் அடங்கும். மீண்டும் அதே சம்பவம் பரபரப்பை உருவாக்கி கொண்டிருக்கின்றன. பிரமச்சாரத்தை குறித்தும் மனிதனின் காமத்தை குறைக்கும் வழிகள் குறித்து தன்னுடைய போதனை மூலம் பக்தர்களுக்கு வெளி படுத்தி வந்தார் நித்தியானந்தா. 

சிறு வயதிலேயே தெய்வீக பணியை துவங்கியதாலும் அறிவாற்றலோடு போதனைகள் செய்ததாலும் நித்தியானந்தாவிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று ஏமாந்து உலகம் முழுவதிலிருந்தும் நித்தியானந்தாவின் ஆசிரம பீடத்தில் பக்தர்கள் குவிய துவங்கினர். இதன் மூலம் கோடி கணக்கான வருவாய் வர துவங்கியது.   மிகவும் பிரபலமான அதிக வருவாய் வர கூடிய சாமியார்களில் ஒருவராக இவரும் இருந்து வந்தார். கடவுளை தங்களுக்குள்ளே தேடுவதை விட்டு விட்டு ஏமாந்த மக்களும் இவருக்குள்ளே கடவுளை தேட துவங்கினர்.
இவ்வாறு ஏமாந்த பக்தர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது ஒரு வகையிலும் சீடர்கள் என்ற முறையில் பெண்களை துணைக்கு வைத்து கொள்வதும் இவரை போன்ற சாமியார்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் நடிகை ரஞ்சிதாவும் நித்தியானந்தாவும் படுக்கையறையில் ஒன்றாக இருந்த ஆபாச படத்தை வீடியோவாக கேடி பிரதர்ஸின் சன் டிவி வெளியிட்டது. வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க கூடியதாக இருந்த அந்த காட்சியை சின்ன திரையில் ஒளிபரப்பி அதன் மூலம் கோடி கணக்கான பணத்தை சம்பாதித்தது சன் டிவி நிர்வாகம். குடும்பத்தோடு பார்க்க கூடாத காட்சிகளை எல்லாம் வீட்டு திரையில் கொண்டு வந்து குடும்பத்தினரை சங்கடத்திற்கு உள்ளாக்கியது.
அதன் மூலம் நித்தியானந்தாவின் போலி முகம் வெளி பட்டு நித்தியானந்தாவிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். கர்நாடக காவல் துறையும் வழக்கு பதிவு செய்து நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த காட்சியின் மூலம் நித்தியானந்தாவின் இரட்டை முகம் வெளி பட்டு பக்தர்களே அவருக்கு எதிராக மாறினார்கள்.

ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறுவது போல் உண்மையாக வீடியோ என்று நிரூபிக்க பட்ட காட்சியை போலியானது என்று புகார் கொடுத்திருக்கிறார்கள் சாமியார் தரப்பு. இதுவரை மறைந்திருந்த ரஞ்சிதா வெளியில் வந்து கேடி சகோதர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். அந்த ஆபாச காட்சியை வைத்து கேடி சகோதரர்கள் மிரட்டி இருக்கிறார்கள் என்று. கேடி சகோதரர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. பணம் ஒன்றை குறிக்கோளாக கொண்ட இந்த மாறன் கும்பல் இதையும் செய்திருக்கலாம். இதே புகாரை நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் மீதும் சொல்லியிருக்கிறார்கள். நக்கீரன் பத்திரிக்கையின் நடுநிலை 2G ஊழலின் போதே தெரிந்து விட்டது.நித்தியானந்தா,  ரஞ்சிதா  இவர்களால் கொடுக்க பட்ட புகார்கள் மீதான நடவடிக்கை என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வாய்ப்பு இருக்கிறது.

மாறன் கும்பல் கேடிகள் என்பது உலகம் அறிந்தது தான். அதே நேரம் மாறன் கும்பல் மீது குற்றம் சுமத்துவதால் நீங்கள் சுத்தமானவர்கள் அல்ல என்பதை நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாற்று கருத்து இல்லை அதே நேரம் நீங்களும் குற்றத்தை ஓப்பு கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு இனி மேலும் சாமியார் என்று மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்ய கூடாது.                 

11 கருத்துக்கள்:

kugan said...

<< Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.

ஜெகதீஸ்வரன். said...

கொய்யா...

இனி ராஜபட்சே வந்து நான் தமிழர்களை கொல்லல அது எல்லாம் மார்ப்பிங்ன்னு சொன்னாலும் சொல்வான் போல!..

well-wisher said...

என்னய்யா இது அநியாயம்
எல்லாவனும் நித்யாநந்தாவுக்கு விளக்கு பிடிச்சதுபோல எழுதுறீங்க.
அரசு ஆதரவோட விபச்சாரம் ஓஹோன்னு நடக்குது சினிமான்ற பேரில. அதை தட்டிக் கேட்க வக்கில்ல...
மனைவி, துணைவியெல்லாம் வச்சிருக்கான். அதை தட்டிக் கேட்க வக்கில்ல...
நாலு கட்டுறான் முக்காலு. அதை தட்டிக் கேட்க வக்கில்ல...
வந்துட்டானுங்க. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்கோவில் ஆண்டின்னுட்டு...

Suresh Kumar said...

kugan said...
நீங்க bug இல்லாம game செய்வீங்களா? //////

குகன் யார்கிட்ட கேட்குறீங்க ? நித்தியானந்தாகிட்டயா ? இல்ல மாறன்களிடமா ? இல்ல கடைசியா ரஞ்சிதாவிடமா ?சரியா சொன்னா தானே வாசகர்களுக்கு புரியும்

Suresh Kumar said...

ஜெகதீஸ்வரன். said...
கொய்யா...

இனி ராஜபட்சே வந்து நான் தமிழர்களை கொல்லல அது எல்லாம் மார்ப்பிங்ன்னு சொன்னாலும் சொல்வான் போல!.. ////////

இதையெல்லாம் நாம கேட்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.

Suresh Kumar said...

well-wisher ////////

விளக்கு பிடிச்சாங்களோ இல்லையோ ஆனால் கேமராவில பிடிச்சிட்டாங்க.

>>>>
அரசு ஆதரவோட விபச்சாரம் ஓஹோன்னு நடக்குது சினிமான்ற பேரில. அதை தட்டிக் கேட்க வக்கில்ல...///////

கேக்கலன்னு எதை வச்சி சொல்றீங்க? நீங்க கேட்காததற்கு எல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது

>>>>
மனைவி, துணைவியெல்லாம் வச்சிருக்கான். அதை தட்டிக் கேட்க வக்கில்ல...
நாலு கட்டுறான் முக்காலு. அதை தட்டிக் கேட்க வக்கில்ல...
வந்துட்டானுங்க. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்கோவில் ஆண்டின்னுட்டு.../////////

அய்யா ஒன்னு மட்டும் சரியா புரிஞ்சிடுங்க அல்லது இன்னும் ஒரு வாட்டி சரியா படியுங்க. யாரையும் நல்லவன் என்று சொல்ல வில்லை. கலைஞர் குடும்பம் கேடி தான் அதே போல் நித்தியானந்தாவும் ஒரு கேடி தான்.இப்போ புரியுதா ?

Jayadev Das said...

\\அதன் மூலம் நித்தியானந்தாவின் போலி முகம் வெளி பட்டு நித்தியானந்தாவிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். கர்நாடக காவல் துறையும் வழக்கு பதிவு செய்து நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது.\\ இங்க தான் எல்லோரும் ஒரு தப்பை செய்கிறோம். நித்தி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் ஒருத்தரும் இது வரையிலும் காவல் துறையில் வழக்கு கொடுக்க வில்லை. சாமியார் நடிகையுடன் சல்சா செய்ததற்காக காவல் துறை அவர் மீது எந்த வழக்கையும் போட வில்லை. ஏனென்றால் வயதுக்கு வந்த இருவர் பரஸ்பரம் சம்மதத்துடன் சந்தோஷமாக இருப்பது சட்டப் படி தப்பும் இல்லை. சாமியார் பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பது குற்றம் என்று எந்த சட்டமும் சொல்ல வில்லை. தற்போது சாமியார் மீது போடப் பட்டுள்ள வழக்குகள் எல்லாம், அவர் ஆசிரமத்தில் சந்தனக் கட்டை இருந்தது, மான் தோல் இருந்தது, ரே ஷன் கடையில் இருந்து வாங்கப் பட்ட மண்ணெண்ணெய் இருந்தது என்பது மாதிரியான உப்பு பெறாத வழக்குகளே. நீதி மன்றத்தில், சாமியாரின் வக்கீல் எசமான், என் கட்சி காரர் அந்தம்மாவோட சந்தோஷமா இருந்தார், அம்ந்தம்மாவுக்கும் சம்மதம் தான் என்று சொல்வார். ரஞ்சிதாவும் ஆமாம் சாமி என்பார். அப்படியே வெளியே வந்து மக்களை ஏமாற்ற , அந்த விடியோ மார்பிங் என்று புருடா விடுவார்கள். இவங்க அந்தரங்கத்தில் தலையிட்டது குற்றம் என்று சொல்லி லினின் கறுப்பனைப் பிடித்து உள்ளே தள்ளி விடுவார்கள். ஹா....ஹா....ஹா....

Suresh Kumar said...

இருவர் பரஸ்பரம் சந்தோசமாக இருப்பதில் தவறு சொல்ல வில்லை. ஆனால் இதே சாமியார் தான் காமத்தை அடக்க வேண்டும் என்று தன்னுடைய போதனைகளில் சொல்லி வந்தார். அது கூட இருக்கட்டும் அவர்கள் விருப்ப படை சந்தோசமாக இருந்ததை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டியது தானே. இல்லை என்று சொல்லி மீண்டும் மீண்டும் ஏன் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.

உண்மையை சொல்லி சாதாரண மனிதனாக மாற வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். மக்களை முட்டாள் ஆக்குவதை பற்றி தான் பேச வேண்டியது இருக்கிறது

Tamilpadaipugal said...

Nice Blog....
please Read this also
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html

Anonymous said...

நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

saleem said...

ஒருவன் சாமியார் வேசம் போட்டு உல்லாசம் இருந்து இர்குன்றான் அவனக்கு வக்காலத்து வாங்கி ஒருவன் எழுதுகின்றான் அதையும் ஒரு இணைய தளம் வெளிடுகின்றது

Post a Comment

Send your Status to your Facebook