இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label திராவிட இயக்கம். Show all posts
Showing posts with label திராவிட இயக்கம். Show all posts
Monday
திராவிட இயக்கத்தை காக்க வைகோ பின்னால் அணி திரள வேண்டும்
எழுதியது
Suresh Kumar
Labels:
திமுக,
திராவிட இயக்கம்,
மதிமுக,
வைகோ
எழுதிய நேரம்
Monday, June 20, 2011
திராவிட இயக்கம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உருவாக்க பட்ட இயக்கம். அடிமை தனம் ஒழியவும் சுயமரியாதையை காக்கவும் உருவான இயக்கம். இன்று மீண்டும் ஆதிக்க சக்திகளுக்கு இரையாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட துவங்கியிருக்கிறது. பெரியார் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்பதிலும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதிலும் மக்கள் மத்தியில் மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சாதி ஒழிப்பின் மூலம் மேல் சாதி கீழ் சாதி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையை உருவாக்கவும் மேல் சாதியினரால் அடிமையாக்க படும் கீழ் சாதி மக்களின் விடுதலைக்காவும் திராவிட இயக்கம் வாயிலாக போராடினார்.
அடிமை தனமும் ஆதிக்க சக்திகளும் காங்கிரஸ் கட்சியின் மூலதனமே காங்கிரஸ் கட்சி தான் என்பதால் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக எதிர்த்தார் பெரியார். காங்கிரஸ் கட்சியை தமிழகத் திலிருந்தே ஒழிக்க வேண்டும். திராவிடர்கள் கையில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகம் துவங்கினார் அண்ணா. இடையறாத பிரச்சாரம் விழிப்புணர்வு மூலம் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றது அண்ணா முதல்வரானார். இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்தது முதலில் தமிழகத்தில் தான். இந்த வரலாற்று பெருமைக்கு காரணம் தமிழக மக்கள் மத்தியில் உருவாகியிருந்த திராவிட இயக்க உணர்வுகள். திராவிட இயக்கத்தின் விடுதலை வேட்கை பல காலமாக அடங்கியிருந்த உணர்வுகள் வெளிப்பட்டது. இந்தி மொழியை கட்டாய படுத்தி தமிழ் நாட்டில் திணிக்க நினைத்த போது மாணவர்கள் கிளர்ந்தெழுந்தது இந்திய வரலாற்றிலேயே மிக பெரிய கிளர்ச்சியாக அமைந்தது.
இப்படி பலரின் தியாகத்தோடு வளர்ந்த திராவிட இயக்கம் காலத்தின் கோலத்தால் மிக விரைவிலேயே இயற்கை அண்ணாவை எடுத்து விட்டதால் திராவிட இயக்க தலைவர்கள் வரிசையில் 17 வது இடத்தில் இருந்த கருணாநிதி கட்சியை சூழ்ச்சியின் மூலம் கைப்பற்றினார். ஆட்சியை கைப்பற்றிய அன்றிலிருந்தே தமிழகத்தை பற்றியோ திராவிட இயக்கத்தை பற்றியோ சிந்திக்காத கருணாநிதி தன் குடும்பம் பற்றியே சிந்தித்தார். தன் குடும்ப வளர்ச்சிக்காக திராவிட இயக்கத்தையும் தமிழியை பயன் படுத்த துவங்கினார். அதன் விளைவாக தன் மகனுக்கு போட்டியாக எம்ஜிஆர் வந்து விடுவார் என கருதி எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினார். முதல் முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற போதே ஊழல் செய்து சர்க்காரிய கமிசனால் விஞ்ஞான கள்ளன் என்று அழைக்க பட்டார்.
எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை எம்ஜிஆரின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. எந்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என அண்ணா கருதி திமுகவை தோற்றுவித்தாரோ அந்த நோக்கத்தை அடியோடு குப்பையில் போட்டு விட்டு பதவி ஆசைக்காக இரு கழகங்களும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தன.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் திராவிட யக்கம் திராவிட கொள்கைகள் அடிபட்டு போயின. எந்த ஆதிக்க சக்தியை எதிர்த்து திராவிட இயக்கம் செயல் பட்டதோ அதே திராவிட இயக்கத்தின் வழியாக ஆதிக்க சக்திகள் புகுந்தன. அன்று முதல் இன்றுவரை தமிழக அரசியலை ஆதிக்க சக்திகள் ஆட்டி படைக்கின்றன. தமிழ் திராவிடம் என்று எந்நேரமும் சொல்லும் கருணாநிதி மீண்டும் குடும்ப கட்டுபாட்டுக்குள் கட்சியை கொண்டு வர வைகோவை இல்லாத ஒரு பழியை சொல்லி கட்சியை விட்டு நீக்கினார்.
அந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க ஆதிக்க சக்திகளின் உதவியை நாடியும் காங்கிரஸ் கட்சி தலைவர் மூப்பனாரால் துவங்க பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை பிடித்தார். ஒவ்வெரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சியை வளர்த்து விட்டும் தானும் பலனடைந்து கொண்டன இரண்டு கழகங்களும். கருனாநிதியாலோ ஜெயலளிதாவாலோ திராவிட இயக்க கொள்கைகளை தூக்கி பிடிக்க முடியவில்லை . அண்ணா துவங்கிய திமுகவை இந்திய அளவில் கெட்ட பெயரை உருவாக்கும் விதமாக தன் பிள்ளைகள் மூலம் ஊழல் செய்தார். திமுகவின் ஐம்பெரும் தலைவர்களாக கருணாநிதி , கருணாநிதியின் பிள்ளைகள் , பேரன் ஆகியோர் விஸ்வரூபம் எடுத்தனர். அதன் விளைவாக இன்று இரண்டு லட்சம் கோடி ஊழல் ஊழலுக்கு பரியாகரமாக ஈழ தமிழர்களை கொல்ல காங்கிரஸ் கட்சிக்கு செய்த உதவிகள் ஏராளம். ஆனால் இன்று தமிழகத்தில் யாருமே அனுதாப பட முடியாத அளவிற்கு கனிமொழி ஜெயிலில் இருக்கிறார்.
இந்த நிலையில் கருணாநிதி மற்றும் குடும்ப உறுப்பினர்களால் லட்சோப லட்சம் உறுதி மிக்க தொண்டர்கள் கொண்ட திராவிட இயக்கத்தையும் திமுகவையும் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றும் திமுக என்ற பெயருக்காக உறுதிமிக்க தொண்டர்கள் திமுகவில் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களின் ஒரே கவலை திமுக அழிந்து விடுமோ என்பது தான். இந்த நிலையில் திராவிட இயக்கத்தில் மாற்றம் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையில் அண்ணாவின் வழியில் இன்றுவரை பயணித்து வரும் வைகோ பின்னால் ஒவ்வெருவரும் அணி திரள வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. திமுகவின் தற்போதைய தலைவரால் தன் மகளை எப்படி வெளியே எடுப்பது என்ற கவலை தானே தவிர தமிழகம் பற்றியோ திராவிட இயக்கம் பற்றா எந்த கவலையும் இல்லை. இந்த நிலையில் அதிமுகவிற்கு மாற்று சக்தியாக செயல்படும் தகுதியை திமுக இழந்ததால் அந்த பணியை வைகோ தலைமையில் மதிமுக செய்யும். சுயரியாதையை இழந்து கருணாநிதி இருக்கும் வேளையில் சுயமரியாதை தான் முக்கியம் என்று தேர்தலையை துணிந்து புறக்கணித்த தலைவன் வைகோ தலைமையில் கீழ் திராவிட இயக்கத்தை காக்கவும் தமிழினத்தை காக்கவும் திராவிட இயக்கம் பயணிக்க வேண்டும்! செயல் படுவோம்.
Subscribe to:
Posts (Atom)

