• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label தேர்தல் முடிவுகள் பற்றிய ஆய்வு. Show all posts
Showing posts with label தேர்தல் முடிவுகள் பற்றிய ஆய்வு. Show all posts

Saturday

பணம் பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது பணத்திற்கு முன்னால் தமிழனின் இன மானம் தூசு

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழினத்திற்கே ஆச்சரிய படுத்திய முடிவாக அமைந்தள்ளது . இந்தியாவே எதிர்பார்த்த தமிழக தேர்தலில் தமிழன் பணத்திற்காக இன மானத்தை விலை பேசியதன் விளைவு தான் இந்த தேர்தல் முடிவுகள் .

திருமங்கலம் தொகுதியில் துவங்கிய பண விநியோகம் இன்று நாடாளுமன்றம் வரை வந்திருக்கிறது என்றால் இது ஒரு தவறான முன்னுதாரணமே . எட்டி கால் வைக்கும் தூரத்தில் சிங்கள இனவெறியர்களால் தினம் தினம் தமிழர்கள் இன படுகொலை செய்து கொண்டிருக்கிறேன் . அதற்கு மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் உதவி செய்கிறது . சிங்கள ராணுவத்தால் நம் மீனவர்கள் சுட்டு கொள்ள பட்ட போதும் இந்த ஆட்சிகள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வில்லை . இதற்கு மாற்று அணி வந்தால் தான் தமிழன் மானம் ரோசம் கொண்டவனாக இருக்க முடியும் . அந்த வகையில் தமிழன் மானம் ரோசம் உள்ளவனாக இருப்பான் என்றால் அதையும் தாண்டி சில தொகுதிகளை தவிர பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் வர்க்கத்தின் பணத்திற்கு தமிழினம் அடிமையாகி விட்டது .

தேர்தல் வருகிறது அதற்காகவாவது சிறிய அளவிலாவது போர் நிறுத்தம் செய்ய முயற்சிப்பார்கள் என்றால் அதுவும் இல்லாமல் தன பணத்தையே நம்பி தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது என்றால் இது ஒரு மோசமான முன்னுதாரணமே .

தமிழக வாக்காளர்கள் கொடுத்த வெற்றியின் நோக்கம் என்ன தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் சொல்லுகிறார்கள் தமிழகத்தில் அதிசயம் நடந்ததாக  .  அந்த அளவிற்கு உலகமே எதிர் பார்த்த தமிழக முடிவுகள் மாறியிருக்கிறது என்றால் இனி வரும் காலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இல்லை சிறு வாய்ப்பு கிடைத்தாலும் கொள்ளை அடிப்பதை விட வேறு என்ன எண்ணம் வரும் . இந்த தீர்ப்பு மக்கள் தீர்ப்பு அல்ல பணத்திற்கு கிடைத்த வெற்றி . இந்த நேரத்திலும்  பணத்திற்கு விலை போகாமல் தன்மானத்தை காத்து தமிழினத்திற்கு ஓரளவாவது இன மானம் இருக்கு என்று நிரூபித்த வாக்காளர்களுக்கு தலை வணங்குகிறோம்
Read More

Send your Status to your Facebook