• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label ராஜாவின் பினாமி. Show all posts
Showing posts with label ராஜாவின் பினாமி. Show all posts

Thursday

இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால் அவர்களே

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே சங்க கால புலவரின் வரிகளோடும் பெயரோடும் தமிழகத்தில் வீறு நடை போட்டு கொண்டிருக்கிறது நக்கீரன் . ஆனால் இந்த நக்கீரனின் உண்மை முகம் பலருக்கு தெரிவதில்லை. பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க பொய் செய்திகளை போடுவதில் கில்லாடி பத்திரிகை தான் இந்த நக்கீரன் . 
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நானும் ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழருமாக  பேசி கொண்டிருந்த பொது நக்கீரன் பற்றிய பேச்சு வந்தது . தோழர் சொன்னார் நக்கீரன் நடுநிலை தவறாத பத்திரிகை உண்மை செய்திகளை போடுவதில் நக்கீரன் மட்டுமே இன்று முன்னோக்கி நிற்கிறது, அரசியல் விமர்சனங்கள் மிகவும் நாடு நிலையோடு இருக்கும் என்று என்னோடு சொன்னார் . நான் அவரோடு விவாதம் செய்தேன் நக்கீரன் தன்னுடைய நடுநிலையை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது .இருந்தாலும் அவர் வாதத்தில் விட்டு கொடுக்காமல் நக்கீரனை புகழ்ந்து பேசி கொண்டிருந்தார் . நான் அந்த நிலையில் ஒரு நாள் நீங்களும் புரிந்து கொள்வீர்கள் தோழரே என்று சொல்லி விட்டு அத்தோடு அந்த விவாதங்களை முடித்து கொண்டோம் . 

 பின்னர் சில ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் ஒரு நாள் பேசி கொண்டிருக்கும் போது நக்கீரன் இப்போது வாங்குகிறீர்களா என்றேன் . இல்லை அதன்   விமர்சனங்கள் இப்போது ஒரு பக்க சார்பாக இருக்கிறது . நடுநிலை என்பதே இல்லை என்றார் . உடனே நான் சொன்னேன் நீங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் நக்கீரனின் லட்சணம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது . நக்கீரன் பல ஆண்டுகளுக்கு முன்னரே நடுநிலை இழந்து விட்டது .நீங்கள் திமுக கூட்டணியில் இருந்ததால் சில நேரங்களில் உங்களை புகழ்ந்து எழுதிய நக்கீரன் நீங்கள் கூட்டணியை விட்டு வெளியே வந்தவுடன் நேர்மாறாக உங்களை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )பற்றி தவறாக எழுதியது  அது தான் உண்மை. 
எப்போது அரசு பணம் திமுக சார்பாக நக்கீரனுக்கு கைமாறியதோ அப்போதிலிருந்தே நக்கீரன் தடம் மாறி விட்டடது .  கூட்டணி மாறும் அரசியல் தலைவர்களை பற்றி தவறான செய்திகளை போடுவதில் மிக முக்கியமான இடத்தில் இருப்பது இந்த பத்திரிகை . பொய்யான தகவல்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் செய்தி வெளியிடுவதில் வல்லவர் தான் இந்த கோபால் . திமுக கூட்டணியை விட்டு யார் வெளியே வந்தாலும் பல கொடிகள் கைமாறியதாக செய்திகள் போட்டு மக்களை குழப்புவதில் முதலிடம் நக்கீரனுக்கு தான் . 

ஒவ்வெரு தேர்தலிலும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புகை படம் இந்த பத்திரிகைகளில் வரும் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து நின்று ஒரு எஸ்டேட் பார்த்து கை காட்டுவது போல் அதில் இருக்கும் . கீழே செய்தி இப்போது ஜெயா வாங்கிய எஸ்டேட் . நான் மூன்று தேர்தலுக்கு இதே புகை படத்தை நக்கீரன் பத்திரிகையில் பார்த்திருக்கிறேன் .  அடுத்த சட்ட மன்ற தேர்தலில் கூட அந்த புகைப்படம் வரலாம் .புலானாய்வு என்ற பெயரில் தலைவர்களை மிகவும் கீழ் தரமாக விமர்சிப்பதில் முதலிடம் வகிக்கும் அதே பத்திரிகை இப்போது 2G  அலை வரிசை ஒதுக்கீட்டில்  ஊழல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் பினாமி தான் இந்த  நக்கீரன் இணை ஆசிரியர் காம ராஜ். பல நாட்களுக்கு முன்னரே பலருக்கு தெரிந்த இந்த பினாமி கதை சி பி ஐ நடத்திய சோதனை மூலமாக இப்போது தமிழகம் முழுவதும் தெரிந்து விட்டடது . நூறு கோடி ரூபாய்க்கு மேல் காமராஜிடம் ராஜா ஊழல் செய்த பணம் கைமாறியதாக தெரிகிறது .

ஒரு பத்திரிகை வைத்திருந்தால் போதும் அதன் மூலமாக கூட கொள்ளையடிக்கலாம் என்பதை செய்து காட்டியது நக்கீரன். இதன் விளைவாக தான் ராஜாவை அனைத்து பத்திரிக்கைகளும் ஊழல் நாயகன் என்று சொல்லி வந்த போதும் நக்கீரன் மட்டும் ராஜா நல்லவர் என்று திரும்ப திரும்ப சொல்லி வந்தது . மிக வேகமாக செய்திகளை கொடுக்கும் நக்கீரன் நேற்று நடைபெற்ற சோதனையை பற்றி தங்கள் இணைய தளத்தில் எந்த செய்தியும் போடவில்லை .   பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என சொல்வார்கள் இவ்வளவு நாளும் வேறு யாரையெல்லாமோ திருடன் என்று சொன்னவனே இன்று மிக பெரிய திருடனாக பிடி பட்டிருக்கிறான் . 



இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால் அவர்களே. ஜனநாயகத்தின் நான்காவது பெரிய தூண் பத்திரிகைகள் ஆனால் இன்று பத்திரிகைகள் ஆளும் கட்சிகள் போடு எச்சிலையை பொறுக்கி தின்று ஜால்ரா அடிப்பதாகவே இருக்கிறது . ஏற்கனவே அனைத்து மீடியாக்களும் ஒரு குடும்பத்தின் கையில் இருக்கும் போது நம்பி இருந்த நக்கீரன் பத்திரிக்கையும் இப்படி ஆகி விட்டதே என மக்கள் நக்கீரன் முகத்தில் காரி துப்புகிறார்கள் . 
Read More

Send your Status to your Facebook