• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label விவசாயிகள். Show all posts
Showing posts with label விவசாயிகள். Show all posts

Sunday

தமிழக விவசாயிகளை காப்பாற்றிய தென் மேற்கு பருவ மழை

கடந்த 25 ஆண்டுகளாக கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக பிரச்சனை . ஒவ்வெரு கட்சியும் ஆட்சிக்கு வரும் போது தங்களின் சுயநலத்திற்காக காவிரியையும் தமிழக விவசாயிகளின் வால்வாதாரதிலும் அரசியல் செய்வார்கள் . இதுவே கடந்த காலமாக நடந்து வருகிறது . இந்திய பாகிஸ்தான் சண்டையை விட இது மிக பெரிய சண்டையாக இருந்து வருகிறது . உச்ச நீதி மன்றம் , காவிரி நதி நீர் ஆணையம் போன்ற அமைப்புகள் தமிழர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தாலும் கர்நாடக அரசு கொடுப்பதாக இல்லை . இதனால் ஒவ்வெரு ஆண்டும் காவிரி பிரச்சனை எழும்பி கொண்டிருக்கும் .

தமிழகத்திற்கு கர்நாடக மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா , ஆந்திர வாலும் தண்ணீரால் பிரச்சனைகள் தான் . ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே ஆணை கட்ட முயற்சிக்கிறது . கேரளா காலம் காலமாக பயன் படுத்தி வந்த முல்லை பெரியாறு அணையை பலமிளந்ததாக புரளியை கிளப்பி புதிய அணை கட்ட போகிறதாம் .

அனைத்து அண்டை மாநிலத்து தண்ணீர் பிரச்சனையிலும் உச்சநீதி மன்றம் தமிழ் நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலும் அந்ததந்த மாநிலங்கள் நீதிமன்ற தீர்ப்பையே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை . ஏதோ எப்போதும் அரசியல் பண்ண அரசியல் வாதிகளுக்கு மேட்டர் கிடைக்குது . என்னவோ தெரியவில்லை மத்திய அரசை மிரட்டி தங்கள் தேவைகளை முடிக்கும் ஆட்சியாளர்களால் மக்கள் பிரச்சனை முடிக்க முடியவில்லை .

இந்த ஆண்டில் தென் மேற்கு பருவ மழை கேரளா மற்றும் கர்நாடகத்தில் கடந்த பத்து நாட்களாக பெய்து வருகிறது . பொதுவாகவே ஒவ்வெரு ஆண்டும் கர்நாடக அரசு உபரி தண்ணீரை மட்டுமே அனுப்பி வந்தது .கடும் மழையின் காரணமாக கர்நாடக காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறது . இதையடுத்து மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது . இன்னும் சில தினங்களில் மேட்டூர் அணை விவசாயத்திற்கு திறந்து விட படும் என அறிவிக்க பட்டுள்ளது .

ஆண்டு தோறும் பருவமழை தவறாது பெய்தால் தண்ணீருக்கும் பஞ்சம் வராது மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சனை வராது . அரசியல் வாதிகளும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வைத்து அரசியல் செய்ய மாட்டார்கள் .

Read More

Send your Status to your Facebook