• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label First Rank. Show all posts
Showing posts with label First Rank. Show all posts

Saturday

S.S.L.C தேர்வில் முதலிடம் பிடித்த குமரி மாவட்ட மாணவர்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை மணிக்கு வெளி வந்தது . தக்கலை கல்வி மாவட்டத்தை செந்த புனித மேரி கொரற்றி மேல்நிலை பள்ளி  மாணவன் ஜோஸ் ரிஜான் தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார் .

இவர் 500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் . குமரி மாவட்ட மாணவன் என்றவுடன் எந்த பள்ளி என்று பார்த்த எனக்கு அதில் மிக பெரிய மகிழ்ச்சி என்ன வென்றால் நானும் பத்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் தான் படித்தேன் . நம்ம தான் முதலிடம் வர முடியவில்லை என்றாலும் நம்ம படித்த பள்ளி மாணவன் முதலிடம் வந்திருக்கிறான் என்றால் அவனை நாம் வாழ்த்தாமல் இருக்க முடியாது .
முதலிடம் பெற்ற மாணவன் ஜோஸ் ரிஜானுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் . மற்றும் கற்று கொடுத்த ஆசிரியர்கள் , தலைமையாசிரியர்கள் உற்சாகமளித்த மாணவனின் பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று மேல்நிலை கல்விக்கு செல்லும் மற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் . தோல்வியடைந்த மாணவர்கள் தோல்வியை கண்டு துவளாமல் அடுத்த தேர்வில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

தேர்வு முடிவுகளை காண  http://www.pallikalvi.in
Read More

Send your Status to your Facebook