Friday

பயம் நம்மை துரத்துகிறதா

தினம் ஒரு தன்னம்பிக்கை தொடரில் பயம் உங்களை துரத்துகிறதா ?
  • ஒவ்வெரு மனிதனின் வாழ்க்கையிலும் பயம் சில நேரங்களில் துரத்துகிறது
எதனால் பயம் ஏற்படுகிறது ,ஏன் பயம் என்னை துரத்துகிறது ,பயம் என்பது சில நேரங்களில் என்னால் எதையும் சாதிக்க முடியாமல் ஆக்கிவிடுகிறதே ,என்று சில சூழ்நிலைகளில் நாம் சிந்திப்போம் ,இனி இந்த பயம் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும் பயத்தின் விளிம்பிலிருந்து எப்படி நழுவுவது என்பதை பற்றிய ஆய்வு கட்டுரை ..........................
  • எந்த சூழ்நிலையில் பயம் ஏற்படுகிறது
இதனுடைய சூழ்நிலையும் மனதில் ஏற்படும் மாற்றங்களே .பொதுவாக நாம் எந்த காரியத்தில் பயப்படுகிறோமோ அதை பற்றி நம் எண்ணும் சில தவறுகள் ,நாம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது அந்த தீங்கு அவனை எட்டும் முன்னால் ஏற்படும் ஒரு பயம் ,நாம் நம்முடைய வேலையிலாக இருந்தாலும் ,நம்முடைய கடமையிலாக இருந்தாலும் நாம் எப்போது தவறுகிறோமோ அப்போது ஏற்படுகிற பயம் ,நாம் பழைய நிலையிலிருந்து மாறும் போது ,போக கூடாத இடங்களுக்கு போகிறபோது ,பார்க்க கூடாததை பார்க்கும் போதும் , நாம் இருக்கிற சூழ்நிலைகள் ,நாம் செல்லவேண்டிய இடங்களுக்கு போகிற நேரங்கள் இப்படி பல சூழ்நிலைகளில் பயம் நம்மை துரத்துகிறது .
  • பயத்தினால் ஏற்படும் மாற்றங்கள்
பயம் என்பது நாம் பயணிக்கின்ற பாதையை மாற்றி விடுகிறது ,நம்முடைய குறிக்கோளை மாற்றி விடுகிறது ,நம்மில் இருக்கும் துணிச்சலை மாற்றி விடுகிறது ,நம்முடைய திறமையை இந்த உலகம் காணாமல் ஆக்கி விடுகிறது ,நம்முடைய சுறுசுறுப்பை நிறுத்தி விடுகிறது ,நமக்கு உடல் ரீதியாக சில மாற்றங்களை உருவாக்கி விடுகிறது இதில் ஒன்று தான் நரம்பு தளர்ச்சி ,அதிகமான வியர்வை ,நாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் நம் அறிவு மழுங்கிவிடுகிறது ,அந்த நேரத்தில் நாம் செயல் படுகிற விதமே மற்றவர்களுக்கு நகைப்புக்குரியதாகிவிடுகிறது .இந்த அளவுக்கு நம் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துகிற இந்த பயத்தின் செயலை கட்டுபடுத்தியாக வேண்டாமா? நல்லவை செய்யும் போது பயம் நம்மில் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் .
  • பயத்தை துரத்த வழிகள் இருக்கிறதா ?
ஆம் இருக்கிறது பயத்தை துரத்தும் வழியை பார்போம் . முதலில் நாம் செய்கிற செயலின் குறிக்கோள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும் . நாம் செய்கிற செயலினால் நமக்கு ஏற்படுகிற இழப்புகள் ,நமக்கு கிடைக்கிற சன்மானங்கள் , நாம் அதனால் போகிற உயரங்கள் , நாம் அடைகிற லட்சியங்கள் ,நம்மால் மற்றவர்கள் அடையும் பயன்கள் , இவற்றை பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு இருக்க வேண்டும் . உதாரணமாக சிலர் சிறு வயது முதல் சில லட்சியங்களோடு இருப்பார்கள் அதாவது இந்த தூரத்தை அடையவிடாமல் பயம் தடுத்து விடுகிறது . எந்த சூழ்நிலையானாலும் நம்மால் பயமின்றி நம் குறிக்கோளை அடைய முடியும்
நம் லட்சியங்களை எட்ட முடியும் . எப்போதுமே நாம் பயணிக்கின்ற பாதை நல்ல பாதையாயிருந்தால் அதில் இழப்பை பற்றிய கவலையை விட்டு விடுங்கள் , நீங்கள் பயணிக்கின்ற பாதை தவறானால் அதை மறு பரிசீலனை செய்து விடுங்கள் . நீங்கள் பயணிக்கின்ற பாதை , உங்கள் லட்சியம் , நீங்கள் எடுக்கிற முடிவுகள் , உங்கள் நிலையில் பயனுள்ளதென்றால் அதை எதற்காகவும் விடவேண்டாம் (மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மை பயக்கும் போது ) நம்முடைய லட்சியம் உயர்ந்ததாய் இருக்கட்டும் . இந்த வழிகளை நாம் பின்பற்றும் போது நம் வாழ்வில் பயம் நம்மை துரத்தாது .பயத்தை நாம் துரத்திவிடலாம் .நீங்க தயாரா பயத்தை விரட்ட ! தன்னம்பிக்கை உங்களுக்கு இருந்தால் வாழ்க்கை நம் கையில் .
என்னங்க எப்படி இருக்கு உங்க கருத்துக்களை நீங்க பதிவு செய்தா கொஞ்சம் உற்சாகம் எனக்கும் இருக்கும்


தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா......




6 கருத்துக்கள்:

Unknown said...

ilaiya sakothara unnudaiya varthaikal eettikal pol ullathai thattiyathu

Anonymous said...

Neenga innum niraiya ezhutha vazhthukal

Anonymous said...

hai suresh kumar your story very nice this is attrac my heart

Anonymous said...

hello thamizhaa un aayivukal nenchai pilakkirathu aduththa aayivu katturai eppo varum

செங்கதிர் said...

தாங்கள் எழுத்தின் நோக்கம் என்னைக்கவர்ந்தது. ஆனால் இளைஞன் இன்றைய சமுதாய கட்டமைப்பில் எப்படி கையாளப்படுகிறான், எப்படிச்சிந்திக்கிறான், இதில் உள்ள குறைகளை எப்படிக்களைவது, யார் களைவது என்று பாரபட்சமின்றி அலசி ஆராயும் போது நம் அரசியலமைப்பின் வடிவமும் அதன் செயல்பாடும் மறைமுகமாக நமது அறியாமையே இவர்களுக்கு சாதகமாய் இருப்பதும் தெரியவரும். நமது நாட்டில் அரசியல் இடைதலையீடு இல்லாத செயல்படும் எந்த துறையும் இல்லை. நோக்கம் சரியில்லை என்பதாலேயே ஆக்கமும் இல்லை. கடைசியில் வருத்தப்படுவதில் அர்த்தமும் இல்லை. இதனை நன்கறிந்து ஆக்கப்பூர்வமாய் சிந்தித்து செயல்பட வேண்டும்.

Anonymous said...

:)

Post a Comment

Send your Status to your Facebook