Wednesday

இலங்கை உள்ளாட்சி தேர்தலும் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியும்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் ஈழ மக்கள் சிங்கள இனவெறியன் ராஜ பக்ஷேவுக்கும் , தமிழின துரோகிகள் டக்லஸ் , கருணா போன்றவர்களுக்கும் , சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்த வரையில் அந்த செய்தி தமிழக மார்க்சிஸ்ட்களுக்கும் தமிழ் ஈழ மக்களால் சொல்ல பட்ட செய்தி. 

 பொதுவுடைமை கட்சி என்று தங்களை அடையாளம் காட்டி கொள்வதும் , புரட்சி மூலம் தான் நல்லாட்சி கொடுக்க முடியும் போராட்டத்தின் மூலமாக தான் உரிமைகளை பெற முடியும் என்று சொல்லும் மார்க்சிஸ்ட் தோழர்கள் ஏனோ தெரியவில்லை தமிழ் ஈழ மக்கள் விசயத்தில் நேர் எதிராக  இருக்கிறார்கள்.


சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராட வேண்டும் என்று இங்கே சொல்லும் மார்க்சிஸ்ட்கள் இலங்கையில் மட்டும் பெரும்பான்மையினரோடு ஒத்து போங்கள் என்று சொல்லுகிறார்கள்.  கியூபா, ரசியா , சைனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆயுத புரட்சியை ஆதரிப்பார்கள். அதே போல் பாலஸ்தீனத்தில் நடைபெறுகிற ஆயுத புரட்சியை ஆதரித்து இங்கே போராட்டம் செய்வார்கள். ஆனால் தொப்பிள் கோடி உறவு கொண்ட தமிழ் ஈழ மக்கள் போராடினால் மட்டும் கொச்சை படுத்துவார்கள்.

மிக தீவிரமாக ஈழ போர் நடைபெற்ற நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் குரல் ஓங்கி ஒலித்த பொது மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் சொல்வார் மக்கள் வேறு புலிகள் வேறு என்று . நாம் கேட்டதோ போரை நிறுத்த வேண்டும் என்று அதை தானே அவர்களும் வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். துருக்கியில் இருவர் கொல்ல பட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தும் இவர்கள் தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் மக்கள் கொல்ல பட்ட போது பெயருக்காவது போராட்டம் நடத்தினார்களா ? 

ஐக்கிய நாடுகள் மூவர் குழு அறிக்கை வந்தவுடன் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதலில் போர்குற்றம் விளைவைத்தவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும் என்பதாக. அவர்களின் தீர்மானத்தில் இனபடுகொலை என்றோ சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தி போராடுபவர்கள் என்றோ குறிப்பிடவில்லை.  அதே விட ஓன்று பட்ட இலங்கை என்று ராஜ பக்ஷே போட வேண்டிய தீர்மானத்தை இவர்கள் போட்டார்கள். 

ஓன்று பட்ட இலங்கையா இல்லையா என்பதை அங்கு வாழும் தமிழ் மக்கள் முடிவு செய்வார்கள் அதை முடிவு செய்ய இவர்கள் யார் ? இது தான் நமது கேள்வி .....  

தமிழக சட்டமன்றத்தில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் போசும் போது கூட அங்கு வாழும் தமிழ் மக்கள் பாதிக்க படுவார்கள் என்று பேசிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு தமிழ் ஈழ மக்கள் சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள். மாக்சிஸ்ட் கட்சியினரோ தமிழர்கள் சிங்களர்களோடு கையேந்தி வாழ வேண்டும் என்று சொல்லுகிறார்கள் . வர்க்க போராட்டம் கூட ஒரு உரிமைக்கான போராட்டம் தான் அந்த போராட்டங்களை நடத்தும் மார்க்சிஸ்ட்களுக்கு ஏனோ தமிழர்களின் உரிமை போராட்டம் கசக்கிறது. 

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தமிழர்களின் உரிமை முக்கியமா இல்லை தமிழர்களின் பொறாதார முன்னேற்றம் முக்கியமா என்ற நிலையில் தான் தேர்தல் நடைபெற்றது. விடுதலை புலிகளால் ஒன்றிணைக்க பட்ட பல்வேறு கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைக்கான குரலாகவும், மகிந்தா அணியோ  தமிழின துரோகிகளின் ஆதரவோடு பல ஆசைகளை காட்டி தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து போட்டியிட்டது. ஆனால் தமிழ் மக்களோ தங்களுக்கு உரிமை சுதந்திரம் தான் முக்கியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெற செய்துள்ளனர்.     
       
இந்த தேர்தல் முடிவில் நாம் ஒன்றை முக்கியமாக பார்க்க வேண்டும் . சிங்களர்கள் பகுதியில் மகிந்தா ராஜ பக்ஷேவின் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது ஏன் ? சிங்களர்கள் தமிழர்கள் அடிமையாவதை விரும்புகிறார்கள் அடிமை படுத்த வேண்டும் என்று துடிக்கிறார்கள். ........ இது ஒன்றே போதும் தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழ முடியாது என்று.

கடைசியாக ஓன்று பட்ட இலங்கை என்று சொல்லும் அனைவருக்கும் ஒன்றை சொல்லி கொள்கிறேன் தமிழ் ஈழ மக்களுக்கு தேவை சுதந்திரம். அது கிடைத்தால் அவர்களின் அடிப்படை தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்து விடுவார்கள்.    இனியாவது மார்சிஸ்ட்கள் திருந்துவார்களா? 

புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல தமிழர்கள் அனைவரும் புலிகள் தான் , எங்களுக்கு தேவை சுதந்திரம் என்று உலகிற்கு காட்டிய தமிழ் ஈழ மக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ......  

4 கருத்துக்கள்:

தமிழன் said...

மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் தமிழ் ஈழ மக்கள் விசயத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் அண்டை மாநிலத்தோடு உள்ள உரிமை என்றாலும் தமிழகத்திற்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். குறிப்பாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவிற்கு ஆதரவாக தான் தமிழக மார்க்சிஸ்ட் குழு செயல் படுகிறது.

Justin said...

சின்ன சின்ன நாடுகளாக பிரிப்பதை எப்போதும் நாங்கள் விரும்ப மாட்டோம் ...... உங்கள் பதிவுகளில் காங்கிரஸ் கட்சியை பற்றி எழுதவேயில்லை. தமிழகத்தில் மார்க்சிஸ்ட்கள் அரசியலுக்காக மற்ற கட்சிகளை போல் தமிழர்களின் உயிரோடு விளையாடவில்லை

CPIM.MARXIST said...

SURESHKUMAR மார்க்கிஸ்ட் கட்சி ஒருபோதும் மக்களுக்கு எதிரானது அல்ல...... போரை நிறுத்த சொல்லி நாங்கள் பலமுறை போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் நடத்தி இருக்கிறோம்..... மத்திய அரசு போரை நிறுத்த சொல்ல வேண்டும் என்று பலமுறை வழியுருதினோம்.
மார்க்கிஸ்ட் கட்சி பற்றி பொய்யான தகவலை பரப்பி மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்த நீனைகாதே.. அது ஒருபோதும் நடக்காது....

Suresh Kumar said...

CPIM.MARXIST /////////

நானும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறேன் எப்போது போரை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள் சரியாக சொல்ல முடியுமா ? அது மட்டுமல்லாது மதிமுக , இந்திய கம்யூனிஸ்ட் , போன்ற கட்சிகள் முழு அடைப்பு நடத்திய நேரம் கூட உங்கள் கட்சி நாங்கள் இந்த முழு அடைப்பில் பங்கு பெற மாட்டோம் என்று சொன்னார்கள் அதை பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

உண்மையான தகவலை தான் நான் சொல்லுகிறேன். போர் நின்று இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தான் நீங்கள் ஈழ தமிழர்களுக்காக போராட்டம் நடத்துநீர்கள் . அப்போது கூட அந்த மக்கள் எதற்காக போராடினார்கள் என்பதை பற்றி நீங்கள் எங்கேயும் தெரிவிக்க வில்லை.

Post a Comment

Send your Status to your Facebook