Tuesday

திருமங்கலம் இடை தேர்தல் ஒரு கலக்கல் ஆய்வு

தேர்தல் என்றாலே அரசியல் காட்சிகளுக்கு கொண்டாட்டம் தான் இப்போது அந்த கொண்டாட்டம் திருமங்கலம் இடைதேர்தலில் இருக்கிறது. பொது தேர்தல் என்பது சிறு கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தன் பலத்தை நிரூபிக்க போராடுவது. ஆனால் இடைதேர்தல் என்றால் ஆட்சியில் இருக்கும் கட்சியானது தன் ஆட்சிக்கு மக்கள் எத்தனை சதவீதம் மதிப்பெண் போட்டிருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் ஒரு சோதனை களம். எதிர் கட்சிக்கு அடுத்த தேர்தலில் மக்கள் நம்மை ஆட்சியில் அமர்த்துவார்களா என்பதை சோதிக்கும் சோதனை களம்.



ஆனால் இப்படி எத்தனை சோதனை களங்கள் வந்தாலும் சில காலங்களாக ஆளுங்கட்சி இடை தேர்தலில் வெற்றி பெறுவதும் தொடர்ந்து வருகிற பொது தேர்தலில் தோல்வி பெறுவது தான் இப்போதைய வாடிக்கையாக இருக்கிறது.



நாம் முதலில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பற்றி சிறிது பார்த்து விட்டு இடை தேர்தலுக்கு செல்வது நல்லது என நினைக்கிறேன். ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியானது வருகின்ற மே மாதத்துடன் முடிவிற்கு வருகிறது. எனவே அடுத்த மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் . கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகாவுடன் கூட்டணி வைத்த பொதுவுடமை கட்சிகள் அதிமுகவுடன் தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது. திமுகவுடன் காங்கிரஸ் கட்சி இருக்கிறது, பாமக எந்த கூட்டணியில் இருக்கிறது என்பது இன்னும் முடிவாக வில்லை .



எப்படியும் திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் ஒரு அணியும் போட்டியிடும். இந்த நிலையில் தான் எந்த அணி பலம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ள ஒரு இடை தேர்தல். இந்த நிலையில் தான் இரு தலைமைகளும் நேருக்கு நேர் மோதட்டும் என வைகோ மதிமுக வெற்றி பெற்ற தொகுதியை விட்டு கொடுத்திருக்கிறாரோ ? எப்படியும் அதிமுக, திமுக நேரடியாக மோதுவது தான் இந்த நேரத்தில் சரியானதாக இருக்கும்.



இந்த தொகுதியை பொருத்தவரையில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எப்படி பலபரிட்சையோ அதேபோல் தேமுதிக, அஇசமக ஆகிய கட்சிக்கும் ஒரு பல பரீட்சை தான். சரத்குமார் கட்சி ஆரம்பித்து இப்போது தான் முதன் முதலில் தேர்தலை சந்திக்கிறார். அவருடைய கட்சியின் செல்வாக்கை சோதிக்கும் சோதனை களம். விஜயகாந்த் கடந்த தேர்தலை விட ஓட்டுகள் கூடுதலாக கிடைக்குமா என பார்ப்பார். இந்த இரண்டு கட்சிகளும் வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு கட்சியின் தோல்விக்கு காரணமாக இருந்து விடுவார்கள்.



தேர்தல் என்றால் பணத்தை வீசும் பழக்கம் கடந்த காலங்களில் அதிமுகவிடம் இருந்தது. இப்போது திமுக தன் பங்கிற்கு பணத்தை வீசி விளையாடுகிறது. பொதுவாகவே இடைதேர்தல் என்றால் பணம் அதிகாரம் இருந்தால் வென்று விடலாம் என்ற நிலை தான் பழக்கத்தில் இருக்கிறது.



திமுகவிற்கு எப்படியும் இந்த தேர்தல் கம்பியில் நடப்பதை போன்றது தான். மின்வெட்டு தமிழகம் முழுவதும் மக்களை வாட்டி விட்டது. விலை வாசி உயர்வு, பண புழக்கம் குறைவு போன்ற அன்றாட மக்கள் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக மாறி விட்டது. இந்த கோபம் மக்களிடம் காணப்படும். கடந்த தேர்தலில் இருந்த கூட்டணி இப்போது கிடையாது. பக்க பலமாக காங்கிரஸ் கட்சி மட்டும் தான் இருக்கிறது. காங்கிரஸ் காட்சியில் இருக்கும் கோஸ்டி பிரச்சனையை சரிசெய்வதே மிக பெரிய வேலை. திமுக நம்பியிருக்கும் ஒரே நபர் முக. அழகிரி மதுரையை சுற்றியுள்ள இடங்கள் அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.



அதிமுகவை பொருத்தவரையில் திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் புதிதாக வந்த கூட்டணி பலம். மற்றும் அதிமுக மதிமுக கூட்டணியிலே வெற்றி பெற்ற தொகுதி. என்று பல தகுதிகளோடு தேர்தலில் நிற்கிறது. மக்களுக்கு திமுக மீது ஏற்பட்ட வெறுப்பை தன் கட்சிக்கு சாதகமாக நினைத்து களத்தில் நிற்கிறது.



திமுக தன்னுடைய பத்திற்கும் மேற்பட்ட அமைச்சர்களை களத்தில் இறக்கி விட்டு பிரச்சாரம் செய்கிறது. அதிமுக சார்பில் மதிமுக பொது செயலாளர் முழு மூச்சில் பிரசாரத்தில் உள்ளார். வலது கம்யூனிஸ்ட் , இடது கம்யூனிஸ்ட், பார்வார்டு பிளாக் போன்ற கட்சி தலைவர்களும் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடு பட்டு வருகிறார்கள். விஜயகாந்த் கட்சி சார்பாக மனைவி பிரேமலதாவும், சரத் குமார் கட்சி சார்பாக மனைவியும் கட்சியும் துணை தலைவி ராதிகாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இரு கட்சிகளுமே ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பை ஒட்டுகளாக்க தான் பார்க்கின்றன.



ஒவ்வெரு கட்சிகளும் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி களத்தில் நிற்கின்றனர். இந்த சூழ்நிலையில் அரசின் மீதான வெறுப்பை மாற்ற கட்சிகள் பிரிக்காமல் பார்த்தல் அதிமுக வெற்றி மகுடம் சூடும் என்பதில் சந்தேகமில்லை. ஓட்டுகள் பிரியும் சதவீதம் அதிகமானால் திமுக தொகுதியை கைப்பற்றும்.



இந்த சூழ்நிலையில் இரண்டு கட்சிகளின் ஆதிக்கமும் அதிகமாகி மற்ற கட்சிகளை புறந்தள்ளியிருகின்றன. பெரும்பாலான மக்கள் மனதில் திமுகவா? அதிமுகவா? என்ற நிலையே காணப்படுவது தெரிகிறது .


யார் வெற்றி பெறுவார்கள் என்பதைவிட அதிகாரம், ஆள்பலம், பணபலம், போன்றவை தான் வெற்றியை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை, பொறுத்திருப்போம் சட்டம் ஒழுங்கு சீர்குலையாத தேர்தல் நடைபெற அரசியல் கட்சிகள் ஒத்துழைத்தால் மக்கள் பயமின்றி வாக்களிப்பார்கள்.


2 கருத்துக்கள்:

Anonymous said...

//திமுகவிற்கு எப்படியும் இந்த தேர்தல் கம்பியில் நடப்பதை போன்றது தான். மின்வெட்டு தமிழகம் முழுவதும் மக்களை வாட்டி விட்டது.//
kalakkal

வின்னர் said...

பெரும்பாலான மக்கள் மனதில் திமுகவா? அதிமுகவா? என்ற நிலையே காணப்படுவது தெரிகிறது ./////////////

இது ஏற்று கொள்ள முடியாதது விஜய காந்த கணிசமான ஓட்டுக்களை பிடிப்பார். விஜய காந்த கட்சியும் ஆதிக்க நிலையில் (வெற்றி பெரும் ) உள்ளது

Post a Comment

Send your Status to your Facebook