Wednesday

அதெல்லாம் வருசந்தோறும் வாறது தான் நீ உன் வேலைய பாரு

கிராமத்தில் குடிகார கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் உரையாடல்.

மனைவி : ஏங்க... ஏங்க ... ஏங்க .. ஞான் விளிசிட்டே இருக்கேன் செவி கேக்கலையா ? விளிச்சி விளிச்சி தொண்ட தண்ணி வத்துது . (தனக்குள்ளே ) இந்த மனுசனுக்க வேலையே இப்படியான்) .

கணவன் : ஏண்டி உனக்கு சும்மா இருக்க முடியலியா ? எப்ப பாத்தாலும் நச் நச் பேசிட்டே இருக்க.

மனைவி : நான் செல்லியாத என்னனு கொஞ்சம் கேக்கவேண்டியது தானே. கேட்டா எல்லாம் கொறஞ்சா பேயிடம் . ஏங்க நாள வருசபெரப்பாம் .

கணவன் : அதுக்கென்னா ?

மனைவி : இல்ல, சரசு வீட்டில எறச்சி எடுப்பினம் . நமக்கம் பிள்ளேளுக்கு எறச்சி எடுத்து குடுக்கலாமே. அண்ணைக்கு ஒரு நாளாது அதுவா எறச்சி தின்னட்டுமே.

கணவன் : கொப்பன் பைசா வச்சிருக்க தரஞ்சான். நானே அவனுட்டேயம் இவனுட்டே கேட்டு ஒரு குவாட்டருக்கு பைசா வங்கி வச்சிருக்கேன்.

மனைவி : (கோபத்துடன் ) அட பாவி மனுசா நீ இன்னிக்காது குடிசாம இருக்க மாட்டியா? உன் தலையில இடி விழட்டும் நம்ம பிள்ளேழ பாரு (ஒரு குழந்தையை கையில் எடுத்து கணவன் முன் கொண்டு வருகிறாள் ) இதுக்கு என்ன சொல்ல போற. காலத்த ஒரு சாய குடுக்க பால் வேண்ட கூட பைசா இல்ல. நீ மட்டம் குடிச்சி கும்மாளம் போடிய. எனக்கம் எனக்க பிள்ளேளுக்கும் சேர்த்து விஷம் வேண்டி தா. இந்த வருசத்தோட எல்லா கஷ்டம் ஒளிஞ்சி போட்டும்.

கணவன் : ஒனக்கு என்னட்டி கிறுக்கா பிடிச்சிருக்கு விட்டில போட்டி (தன் கையால் அடிக்கிறான். கையில் இருந்த குழந்தை அழுகிறது ).
கணவன் திரும்பி விட்டான் டாஸ்மாக் கடையை நோக்கி

மனைவி : (கணவனின் கைகளை பிடித்து ) ஏங்க இன்னைக்கு குடிக்காதீங்க வாருங்க நான் சோறு போடுறேன். தின்னுட்டு தூங்குவோம். இந்த ஒரு வருசமும் குடிச்சி குடிச்சே நம்ம வீடு நாசமா போச்சி. எல்லா சநியனையம் இந்த வருசதொடே நிறுத்துங்க.
( மனைவியின் கைகளை தட்டி விட்டு தன் லட்சிய பயணத்தில் தொடர்ந்தான். இது இன்று மட்டுமல்ல இந்த ஒரு வருடமாக தினமும் நடைபெறும் காட்சிகள் )

மனைவியின் ஏக்கம் வருகின்ற ஆண்டாவது நல்லா இருக்குமா ? இல்லை இதே நிலை தொடருமா ?.......... விடை தெரியாத வினாக்கள்...

வரும் ஆண்டு அனைவரின் வாழ்விலும் இந்த ஆண்டு சோதனைகளை முறியடிக்கும் புத்தாண்டாக வாழ்த்துகிறேன். வாருங்கள் எல்லோரும் வாழ்த்துவோம் .
புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்

குறிப்பு : இது என்ன மொழி என்று நினைக்காதீர்கள் இதுவும் தமிழ் தான் .எங்களூர் வழக்கு மொழி

5 கருத்துக்கள்:

winner said...

புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

ennappa onnume puriyala

Any way Happy New year

ஆளவந்தான் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

//
இது என்ன மொழி என்று நினைக்காதீர்கள் இதுவும் தமிழ் தான்
//
சரி ..ஒகே.

//
எங்களூர் வழக்கு மொழி
//
உங்களுக்கு எந்த ஊர்?

Suresh Kumar said...

//
உங்களுக்கு எந்த ஊர்?/////////////


என்னுடைய சுய விபரத்தில் கொடுத்திருக்கிறேன். குமரி மாவட்டம் .

மீண்டும் ஒரு முறை புத்தாண்டு வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

Post a Comment

Send your Status to your Facebook