திருமங்கலம் தொகுதிக்கான இடைதேர்தல் பிரச்சாரமானது கடைசி கட்டத்தை எட்டி வருகிறது. இதில் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் என்ன விலை கொடுத்தாவது தொகுதியை கைப்பற்ற வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.இதன் ஒரு பகுதியாக பல இடங்களில் அடிதடிகளும் நடக்கிறது. ஒவ்வெரு கட்சியும் போட்டி போட்டு கொண்டு பணம் கொடுத்து வருகின்றன.
திமுகவினர் வாக்காளர்களுக்கு அல்வா பொட்டலம் கொடுத்து அசத்துகின்றனர். தமிழகத்தில் அல்வா என்றாலே அல்வா .... தான். இது அனைத்து மக்களுக்கும் தெரியும். இந்த நிலையில் திமுகவினர் கொடுக்கும் அல்வாவை மாற்ற கட்சியினர் கிண்டல் அடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
இலவசங்களை கொடுத்து பழகி போன அரசியல் வாதிகளும் இலவசங்களை நெரிசலில் நின்று வாங்கி பழகி போன மக்களும் , ஓட்டுக்கு பணம், அல்வா என்றால் சொல்லவா வேணும் . ஆனால் ஓன்று மட்டும் உறுதி இந்த தேர்தலில் யாரோ ஒருவர் அல்வா நிச்சயமாக கொடுப்பார்கள்.
தேர்தல் முடிவு எண்ணும் போது தெரியும் திமுக மக்களுக்கு அல்வா கொடுத்ததா இல்லை மக்கள் திமுகவிற்கு அல்வா கொடுகிறார்களா?
எப்படியும் அல்வாவும் நல்லா விற்பனை ஆகுது. மக்களும் நல்லா அல்வா சாப்பிடுறாங்க.
நன்றி :தட்ஸ் தமிழ்
Tweet
3 கருத்துக்கள்:
தேர்தல் முடிவு எண்ணும் போது தெரியும் திமுக மக்களுக்கு அல்வா கொடுத்ததா இல்லை மக்கள் திமுகவிற்கு அல்வா கொடுகிறார்களா?///////////
makkal alvaa koduppathu uruthi
எப்படியும் அல்வாவும் நல்லா விற்பனை ஆகுது. மக்களும் நல்லா அல்வா சாப்பிடுறாங்க.////////
என் இனம் திருந்துவது எப்பவோ ? அட கடவுளே .............
இலவசங்களை கொடுத்து பழகி போன அரசியல் வாதிகளும் இலவசங்களை நெரிசலில் நின்று வாங்கி பழகி போன மக்களும்/////////
மக்கள் திருந்த மாட்டார்கள் . யார் அதிக இலவசங்களை கொடுக்கிறார்களோ (கொடுப்பதாக சொல்பவர்களும் அடங்கும் )அவர்களுக்கு வாக்களிப்பார்கள் .
Post a Comment