Saturday

தமிழ் ஈழ இன பிரச்சனையில் சர்வதேச நாடகம்

நாடகம் என்பது சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனை எதிர்த்து போராட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமங்களில் நாடக நடிகர்கள் அரங்கேற்றினார்கள் என்பது நமக்கு தெரிந்தது. ஆனால் இருபதொன்றாம் நூற்றாண்டில் அரசியல் வாதிகள் நாடகமாடுகின்றனர்.

ஒரு இனத்தை கருவறுக்கும் நிலையில் நாட்கமாடிவருகின்றனர் . இத்தனை நாளும் நம்முடைய தமிழக அரசியல் வாதிகள் நாடகத்தை கண்டு அலுத்து போன நமக்கு இப்போது தெரிவது சர்வதேச நாடகம். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்க முடியாத இனபிரச்சனையில் மக்களின் வாழ்வோடு விளையாடும் நாடகங்கள் அங்கங்கே அரங்கேறிவருகின்றது.
சர்வதேச நாடுகளிடம் உதவி கேட்டு போராடும் தமிழ் மக்களை திருப்தி படுத்த, இந்த நிலையை இந்த நாடுகள் எடுத்து வருகின்றன. இதன் காரணம் இலங்கை அரசின் தவறான பிரசாரங்கள் . நாங்கள் விடுதலை புலிகளை ஒழித்துவிட்டோம் . இன்னும் சில எண்ணிக்கை விடுதலை புலிகளே இருக்கிறார்கள் அவர்களையும் இன்னும் சிறிது காலத்தில் ஒழித்து அங்கே ஜனநாயகத்தை ஏற்படுத்துவோம் (அதாவது தமிழ் மக்களை அடிமை படுத்துவோம்) . என்பன போன்ற பொய் பிரசாரங்களை சர்வதேச நாடுகள் நம்பிவிட்டன. இதன் விளைவுதான் இந்த நாடகம். இதற்கு உதாரணமாக இங்க்லாந்து நாடளுமன்றத்தில் அமைச்சர் பேசுகிறார் இனபிரச்சனை பேச்சுவார்த்தைமூலமே தீர்க்க வேண்டும் . அதே நேரம் ராணுவ தளபதி இலங்கைக்கு சென்று சிங்கள ராணுவத்துக்கு ஆலோசனை வழங்குகிறார். என்ன கொடுமைடா இது .
இதே நிலையில் தான் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அமைதி தான் தீர்வு என்று போர் நிறுத்தத்தை வலியுறுத்த வெளியுறவு துறை அமைச்சரை அனுப்புவேன் என உறுதியளித்தார் தமிழக அரசியல் வாதிகளிடம். ஆனால் அவர் அனுப்பியது அமைச்சரை அல்ல ராணுவ தளபதியை .
அதே நேரம் ஆலோசனை வழங்கிவிட்டு போன அடுத்த நாளில் சிங்கள ராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்பின் மூலம் நாங்களும் ராணுவ வலு சமநிலையில் இருக்கிறோம் என்பதை நிரூபித்தார்கள். இந்த இங்க்லாந்து நடத்தும் நாடகத்தை போல் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் நடத்துகின்றனர். அவர்கள் நடத்தும் நாடகத்துக்கு முடிவு வரவேண்டுமென்றால். தமிழ் ஈழ விடுதலை புலிகள் பல வலிந்த தாக்குதல்களை நடத்த வேண்டும் .அப்போது தான் சர்வதேச சமூகம் தலையிட்டு சமாதானம் பிறக்க வழிவகுக்கும் .
சர்வதேச நாடக நடிகர்களே உங்கள் நாடகத்தால் பாதிக்க படுவது தமிழ் இனம். ஏமாறுவது நீங்கள் . நாடகம் ஒரு நாள் முடியும் நியாயம் ஒரு நாள் வெல்லும் . எத்தனை நாள் தான் ஏமாற்ற முடியும் உங்களால் .....................

1 கருத்துக்கள்:

Anonymous said...

ஏமாறுவது நீங்கள் . நாடகம் ஒரு நாள் முடியும் நியாயம் ஒரு நாள் வெல்லும் . எத்தனை நாள் தான் ஏமாற்ற முடியும் உங்களால் .....................

சர்வதேசம் கனவுகண்டு நாடமாடுகிறது உண்மை தான்

Post a Comment

Send your Status to your Facebook