Sunday

மீண்டும் ஒரு கொரில்லா போரின் துவக்கமா?

அமைதி வழியில் நடந்து வந்த போராட்டத்தை சிங்கள ஆதிக்கம் அதிகாரம் கொண்டு முடக்கி, நசுக்கி வந்த நேரத்தில் தான் ஆயுத போராட்டமே சரி என முடிவெடுத்து துவங்க பட்டது தான் விடுதலை புலிகள் இயக்கம்.

விடுதலை புலிகள் இயக்கமானது துவங்கிய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய ராணுவ பலம் இல்லாமல் தான் இருந்தது. முதல் கட்டத்தில் கொரில்லா தாக்குதல்களை தொடுத்து ராணுவத்தினருக்கு எதிராக போராடி வந்தனர். இந்த இயக்கமானது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு பெரிய நாட்டின் ராணுவ பலத்தை போன்று அனைத்து ராணுவ வசதிகளோடு சிங்கள ராணுவத்தை எதிர்த்து நின்றது.

விமான படை , கடற் படை , தரை படை என முப்படைகளையும் கொண்ட ஒரு நாட்டின் ராணுவத்தை போல் வீறு கொண்டு நின்றது . ஆனால் இப்போது அந்த படைகளுக்கு மிக பெரிய சோதனையாக சிங்கள படைகள் இருக்கின்றன . சிங்கள படை என்பது ஏழு நாடுகளின் உதவியோடு இருக்கும் படை . சிங்கள அரசானது விடுதலை புலிகளோடு கொண்டிருந்த போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக முறித்து கொண்டு விடுதலை புலிகளுக்கு பயங்கர வாதம் என்ற பட்டம் சூட்டி போரை மீண்டும் துவங்கியது . ஏனெனில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கிழக்கு மாகாண தளபதி கருணா விலகியதும் ஒரு காரணம் .

கிழக்கு மாகாணத்திலிருந்து துவங்கிய போர் இப்போது வடக்கில் கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளது . இது விடுதலை புலிகளின் தலை நகராக கருத பட்டது . இந்த வெற்றியை சிங்கள மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர் . தமிழர்களோ மௌனம் காத்து விடுதலை புலிகள் மீண்டும் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி இழந்த பகுதிகளை மீட்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் .

விடுதலை புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எப்படி இருக்கும் என்பது தான இன்றைய கேள்வியாக இருக்கிறது . கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல் கிளிநொச்சியை இராணுவம் பிடித்திருக்கிறது. ஆனால் குறைந்த கால அளவுகளில் மீண்டும் விடுதலை புலிகள் மீட்டுள்ளனர் என்பது கடந்த கால வரலாறு . ஆனால் இப்போது உள்ள சூழ்நிலைகளில் அது சாத்திய படுமா? இல்லை மீண்டும் துவக்க காலத்தில் இருந்த நிலையை போல் கொரில்லா போரை நடத்துவார்களா ?

இன்று சிங்கள அரசானது கிழக்கை விடுதலை புலிகளிடமிருந்து மீட்டு விட்டோம் என்று சொல்வது எத்தனை உண்மை . கிழக்கிலும் போராளிகள் இருக்கிறார்கள் . கடந்த ஆண்டில் மட்டும் இருநூறு அதிரடி படை , ஊர்காவல் படை போன்றோரை கொரில்லா தாக்குதல் மூலம் கொலை செய்திருக்கிறார்கள் . மேலும் முன்னூறுக்கு மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து அரும் செய்திகள் சொல்கிறது. அப்படியென்றால் அங்கே இப்போதும் விடுதலை புலிகள் இருக்கிறார்கள் . கொரில்லா தாக்குதலின் மூலம் தங்களுடைய விடுதலை போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மை .

கிழக்கை போன்று இராணுவம் வடக்கையும் கைப்பற்றினால் இங்கேயும் கொரில்லா போர் துவங்கும் என்பதில் சந்தேகமில்லை . இதை தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறப்பினர் தெரிவிக்கையில் இது கொரில்லா போரின் ஆரம்பம் என்றார் . ஆனால் இப்படியே கொரில்லா போர் செய்தால் எப்போது தான் இதற்கு முடிவு வரும் . "புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்"என்ற வெற்றி எப்போது வரும் . அப்படி கொரில்லா போர் துவங்கினால் சிங்கள ராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியுமா ?

கொரில்லா போர் நிலைக்கு புலிகள் செல்லும் பட்சத்தில் சர்வதேசத்தில் புலிகள் ஒளிந்து விட்டார்கள் என்பதே மேலோங்கி காணப்படும் . அப்படியே ராணுவத்திற்கு நெருக்கடி கொடுத்தாலும் அங்கங்கே சில குழுக்கள் இருப்பதை போல் தான் அமையும் . மாறாக ஒரு விடுதலை போராட்டத்தை நசுக்கியதாகவே சிங்கள அரசு வெளியுலகத்திற்கு சொல்லும். எனவே கொரில்லா நிலைக்கு போகமாட்டார்கள் புலிகள் . தேவைக்கு கொரில்லாவை பயன்படுத்துவார்களே தவிர கிளிநொச்சி வந்த ராணுவத்தை தன் ராணுவ பலத்தால் விரட்டுவார்கள் . மீண்டும் ஒரு ஓயாத அலைகள் துவங்கலாம் .

2 கருத்துக்கள்:

வின்னர் said...

மீண்டும் ஒரு ஓயாத அலைகள் துவங்கலாம் ///

:)

Suresh Kumar said...

துவங்கட்டும் வெற்றி பெற வாழ்த்துவோம் . நன்றி வின்னர்

Post a Comment

Send your Status to your Facebook