Tuesday

சிதம்பரத்தின் மீது செருப்பு வீச்சு. இதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்

இந்திரா காந்தி மறைவின்போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.

அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.
ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.
இதை கேட்டு  ஆத்திரமடைந்த அந்த நிருபர் சிதம்பரம் மீது செருப்பை வீசினார் . சில மாதங்களுக்கு முன்பு இராக்கில் ஒரு நிருபர் புஷ் மீது செருப்பு வீசியது குறிப்பிடத்தக்கது .

காங்கிரஸ் கட்சியே சோனியாவே இனியாவது இனபடுகொலைகளை நிறுத்து .இதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும் இது ஒவ்வெரு அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும் .



1 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

என்ன நடக்குது

Post a Comment

Send your Status to your Facebook