Wednesday

தமிழை பள்ளிகளில் ஏன் கட்டாய பாடமாக்ககூடாது ?

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற என்ற ஒரு சங்கிலி தொடர் பதிவு சென்று கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே . அந்த சங்கிலி தொடருக்கு என்னை அழைத்த நம்ம அத்திவெட்டி அலசல் ஜோதி பாரதிக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் .

ஒவ்வெரு காலகட்டத்திலும் தமிழ் வழக்கு சொற்கள் மாறி கொண்டே இருக்கிறது . வழக்கு சொற்கள் என்பது தூய்மையான தமிழ் சொற்களா என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை . அவரவர் பேசும் சொற்கள் அவர்களுக்கு தூய்மையான சொற்களாக தான் காணப்படுகிறது . ஆனால் இப்போது கல்விவளர்ச்சி  நாகரிக வளர்ச்சி போன்ற காரணங்களால் பலரும் தங்கள் வழக்கு சொற்களை பயன் படுத்துவதை இழிவாக நினைக்கிறார்கள் .

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வெரு மாவட்டத்திற்கும் வழக்கு சொற்கள் மாறுபடுகிறது . வழக்கு சொல் என்பது தூய்மையான தமிழாக இருக்க வேண்டிய அவசியமில்லை . ஆனால் நமக்கு தூய்மையான தமிழ் தெரிய வேண்டிய அவசியமிருக்கிறது

தூய்மையான தமிழாக இருந்தாலும் சரி பொதுவான தமிழாக இருந்தாலும் சரி அனைவரையும் ஒரே தமிழுக்குள் இணைக்கும் துறை கல்வி துறை தான் . இந்த கல்வி துறையில் தான் தமிழகம் முழுவதும் ஒரே தமிழாக காணப்படுகிறது . தன் மொழியை காக்கவும் அந்நிய மொழி நம்மில் வராமலிருக்க போராட்டம் நடத்தியவர்கள் தமிழர்களும் தமிழகமும் . அதனால் நாம் இந்தியை தமிழ் நாட்டில் வராமல் செய்தோம் . ஆனால் நம் தமிழை தமிழர்களாகிய தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் படி செய்தோமா என்றால் இல்லை .  இன்று படித்த பலருக்கு தமிழ் எழுதபடிக்க தெரியவில்லை பேச மட்டுமே செய்கிறார்கள் .

 ஆங்கிலம் முதல் மொழியாகவும் தமிழ் இரண்டாம் மொழியாகவே இருக்கிறது தமிழக கல்வி துறையில் . ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆங்கில வழி கல்வி கூடங்களிலே பயிற்றுவிக்க வைப்பதிலே பெருமையடைகிறார்கள் .  ஆங்கில வழி கல்வியில் பிள்ளைகளை  படிக்க வைப்பதில் ஒன்றும் தவறில்லை . அதில் என்ன கொடுமையென்றால் தமிழ் இரண்டாம் மொழியாக இருக்கிற காரணத்தாலும் தமிழ் நமக்கு தெரிந்த மொழி தானே என்ற காரணத்தாலும் பலர் தமிழுக்கு பதில் மற்ற ஏதாவது மொழியை கற்கிறார்கள் . இதனால் பலருக்கு தமிழகத்திலே இருந்து கொண்டு தமிழ் எழுத படிக்க தெரியவில்லை .

சமீபத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கர்நாடகத்தில் கன்னடம் கட்டாய மொழி பாடம் என அறிவித்திருந்தார் . ஆனால்  மொழிக்காக போராடிய தமிழகத்தில் தமிழ் கட்டாய மொழி பாடமாக இல்லாதது வருத்தமளிக்கிறது .  தமிழகத்தில் தமிழை அனைவரும் கற்க தமிழை கட்டாய மொழி பாடமாக்க வேண்டும் . ஆங்கிலத்தை போல் தமிழையும்  கட்டாய மொழியாக்க வேண்டும் . வேண்டுமென்றால் மூன்றாவதாக இன்னொரு மொழியையும் கற்று கொடுக்கலாம்  அது படிப்பவர்களின் விருப்பத்தை பொறுத்தது .


அனைத்து ஆங்கில பள்ளிகளிலும் இதுவே நடைமுறையாக இருக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் . அப்படி ஒரு உத்தரவை அரசு பிறப்பித்து அதை நடைமுறை படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் அனைவரும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்க முடியும் .


எத்தனை மொழிகள் நமக்கு தெரிந்தாலும் நம் தாய்மொழி நமக்கு முழுமையாக தெரிய வேண்டும் . அடுத்த கல்வியாண்டில் இதை தமிழக அரசு அமுல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தமிழனாய் கேட்டு கொள்கிறேன் . இதே போல் இந்த வலைப்பதிவை வாசிக்கிற அனைவரும் உங்கள் மூலமான வலியுறுத்தலையும் பதியும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் . அது பின்னூட்டம் மூலமாகவும் இருக்கலாம் வலைப்பதிவு மூலமாகவும் இருக்கலாம் .

2 கருத்துக்கள்:

mvalarpirai said...

அய்யா தமிழை கட்டாய பாடமாக்கி ஒரு வருசம் ஆச்சு ! முதலில் முதல் வகுப்பு அடுத்த ஆண்டு இரண்டாம் வகுப்பு வரை அப்படியே அது தொடரும்..என்று நடைமுறை சிக்கல் இல்லாம் அதை செயல்படுத்திறாங்க..தங்கம் தென்னரசுக்கு ஒரு நன்றி சொல்லுங்க..நம்ம எல்லாரும் அரசியல்வாதிகளை திட்றதில தான் குறியா இருக்கிறோம்..அவங்க செய்ற ஒன்றிரண்டு நல்லத பாரட்டுறதில்லை...

vanathy said...

தமிழ் நாட்டில் பிறந்த தமிழர் பலருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்று கேள்விப் பட்டு மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
பல மொழிகளையும் படியுங்கள் ,வேண்டாம் என்று சொல்லவில்லை.,ஆங்கில அறிவு வேலை வாய்ப்புக்கும் வெளியுலகைத் தொடர்பு கொள்வதற்கும் ,மருத்துவ விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் முன்னேறுவதற்கும் நிச்சயம் தேவைதான்.
ஆனால் அதற்காக எமது தாய்மொழியை புறக்கணிக்க வேண்டுமா?
சிறுவயதில் குழந்தைகள் நான்கு மொழிகளை கற்க கூடிய திறமை உள்ளவர்கள் என்று ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள்
அப்படி இருக்கும்போது தமிழ் நாட்டில் தமது குழந்தைகளை தமிழ் படிக்கவிடாமல் தடுப்பது மிகவும் வருந்தத்தக்கது.
தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை கட்டாய பாடங்களாகவும் அதைத் தவிர்ந்த இன்னும் ஒன்று அல்லது இரண்டு மொழிகளை விருப்ப மொழிகளாகவும் நிச்சயம் கற்பிக்கலாம் .
முன்பு நான் படித்த செய்தி ஞாபகம் வருகிறது.--இளையராஜாவின் மகள் பவதாரிணி சினிமா பாட்டு ஒன்றைப் பாடும்போது ,தமிழ் படிக்கத் தெரியாததால் ஆங்கிலத்தில் எழுதிப் படித்தாராம்.
எப்படி இருக்கிறது?
தமிழ் கிராம மக்களின் ஆன்மாவை எங்களுக்கு இசைவடிவில் கொண்டு சேர்த்த ஒரு இசைஞானியின் மகளுக்கு அவரின் தாய்மொழியில் படிக்கத்தெரியாது என்பது மிக வேதனை தருவது.
நான் சில வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த பொழுது அங்கிருந்த கடை ஊழியர்கள் நான் தமிழில் பேசியபோது என்னை ஒரு புதுமையான ஜந்துமாதிரி பார்த்தார்கள்.
ஒருவேளை வெட்டப்பட்ட எனது தலைமுடிக்கும் கனேடிய உச்சரிப்புடன் பேசிய எனது அக்கா மகளின் பேச்சுக்கும் நான் தமிழில் பேசுவது பொருந்தவில்லை என்று நினைத்தார்கள் போலிருக்கிறது.
-வானதி

Post a Comment

Send your Status to your Facebook