Tuesday

தமிழகம் ஏன் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறது


சிறிலங்காவின் இனவெறி போரானது எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது  மூன்று லட்சம் மக்கள் சாவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள் தமிழகம் தூங்கி கொண்டிருக்கிறது .

ஸ்ரீலங்கா ராணுவம் உலகத்தில் தடை செய்யப்பட ஆயுதமாக இருந்தாலும் சரி நச்சு குண்டுகளாக இருந்தாலும் சரி ஏறி குண்டுகளாக இருந்தாலும் சரி எப்படியாவது தமிழினத்தை கூண்டோடு அழிக்க முடிவு கட்டி களமுனையில் தயாராக நிற்கிறார்கள் கொடுங்கோலன் நவீன ஹிட்லர் மஹிந்தாவின் படைகள் .

நேற்று முன்தினம் இந்தியா கொடுத்த நச்சு குண்டுகளை பயன் படுத்தி பல நூறு தமிழர்களை கொலை செய்தது சிங்கள ராணுவம் . அடுத்த கட்டமாக பாதுகாப்பு வளையன்களே மிஞ்சி இருக்கின்றன . இந்த குறுகிய நிலப்பரப்பில் மொன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் . ஆறு முனைகள் வழியாக சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறது . இதுவரை தினம் நூறு பேர் வீதம் மடிந்த தமிழினம் இனி ............... 


இந்த நிலையில் புலம்பெயர் வாழ் தமிழர்கள் உலகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . ஆனால் ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட நம் தமிழகமோ இப்போதும் உறங்கி கொண்டிருக்கிறது . தொகுதிகளும் தேர்தல்களிலும் மூழ்கி போன அரசியல் தலைவர்கள் இப்போது தமிழின அழிவை பற்றி வாய் திறக்காதது வேதனையே . போரை இந்தியா தான் நடத்துகிறது என்பது தெரிந்து விட்டது . பிராசிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை இதை மேலும் உறுதிபடுத்தியது .

ஏழு கோடி தமிழனின் வரி பணத்தில் இயங்கும் இந்திய ராணுவம் நம் தோப்பில் கோடி உறவான தமிழனை கொலை செய்யவா ? ஏன் நாம் இப்படி தூங்கி கொண்டிருக்கிறோம் . தமிழன் தானே சாகிறவன் என்று தானே நாம் இருக்கிறோம் . ஏன் நாம் போராட சளைத்தவர்களா தமிழர்களுக்கு உணர்வு தீ வர வேண்டும் என்று தானே முத்துக்குமார் உட்பட பதினொன்று பேர் தன்னையே தீயால் கொளுத்தினார்கள் . இன்னுமா நாம் தூங்குகிறோம் .

இருபது ஆண்டுகளுக்கு முன்ப காங்கிரஸ் கட்சி நடத்திய சீக்கிய இன படுகொலையில் மதிய அரசு குற்றவாளியை தப்பிக்க விட்டது என்று உள்துறை அமைச்சர் மீது செருப்பு வீசிய ஒரு சீகியனுக்கு உள்ள உணர்வு ஏன் தமிழனுக்கு இல்லை .  சிங்கள ராணுவம் இன்னும் இரண்டு நாட்களில் ஒட்டு மொத்த தமிழினத்தை அழிக்க திட்டமிட்டு இருக்கிறது இனியும்வேண்டாம் தமிழா தூக்கம் . 

தொடர் போராட்டம் நடந்தால் மட்டுமே தமிழினத்தை காக்க முடியும் தமிழினம் கூண்டோடு அழிந்த பின்னர் நாம் இருந்து என்ன பயன் .

1 கருத்துக்கள்:

Anonymous said...

ம்ம்ம்ம்ம் :(

Post a Comment

Send your Status to your Facebook