Saturday

போகாத ஊருக்கு வழி காட்டும் தேர்தல் புறக்கணிப்பு

தேர்தல் நெருங்கி விட்டால் கட்சிகள் மாறி மாறி வாதங்களை முன் வைக்கும் அதே போல் தேர்தலுக்கு தேர்தல் சில அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்போம் என்ற ஒரு கருத்தை பிரச்சாரம் செய்வார்கள் . அதற்கு இந்த தேர்தல் ஒன்றும் விதி விலக்கு அல்ல இந்த தேர்தலிலும் தேர்தல் புறக்கணிப்பு பற்றிய பரப்புரையை செய்து வருகிறார்கள் .

அதில் என்ன பெரிய விஷயம் என்றால் ஏதோ இந்த தேர்தலில் மட்டும் தான் தேர்தல் புறக்கணிப்பை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்பது போல் வலியுறுத்துகிறார்கள் . ஈழ தமிழர்கள் விடுதலை புலிகள் ஆதரவு போல பரப்புரையை வெளியிருகிறார்கள் . இந்த தேர்தல் ஈழ தமிழர்களுக்கு கொடுமை இழைத்தவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராகி விட்ட தேர்தல் .

அவர்கள் நோக்கம் எந்த தேர்தல் வந்தாலும் ஏதாவது ஒரு பிரச்னையை மையமாக கொண்டு தேர்தலை புறக்கணிக்க சொல்வது . அது போகாத ஊருக்கு காட்ட கூடிய வழி போன்றது என்பது தெரிந்தும் பரப்புரை செய்து கொண்டே இருக்கிறார்கள் . இப்போதைய சூழ்நிலையில் தமிழுணர்வாளர்கள் ஒட்டு மொத்தமாக திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அதிமுக கூட்டணியை ஆதரிக்க தயாராகி விட்டனர் .

இயக்குனர் சீமான் முதல் நல்லெண்ணம் கொண்ட தமிழுணர்வாளர்கள் இதற்கு விதி விலக்கு அல்ல . சரியான நேரத்தில் சீமானால் எடுக்கப்பட்ட சரியான முடிவு தான் திமுக காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வாக்குகள் சிந்தாமல் அதிமுக கூட்டணிக்கு போட வேண்டும்  . ஒரு தமிழன்    வாக்கு போடாமல் இருந்தாலும் சிதறினாலும் அது தமிழர் விரோத கூட்டணக்கு தான் சாதகமாகி விடும் என்பது சீமானுக்கு தெரியாமலில்லை .

இந்த நேரத்தில் இவர்கள் கையில் எடுத்திருப்பது அதிமுக முன்னர் விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்தவர்கள் இப்போது தேர்தலுக்காக தான் விடுதலை புலிகளின் லட்சியமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு வழங்கியிருக்கிறார் என்பன போன்று பல தகவல்களை சொல்கின்றனர்  . அதில் என்ன கொடுமை என்றால் இதே கதைகளை சொல்லி உடன் பிறப்புகள் கூட தேர்தல் புறக்கணிப்போம் என சொல்கிறார்கள் . ஜெயலலிதா தேர்தலுக்காகவாது தமிழ் ஈழம் தான் தீர்வு என்று சொல்லியிருக்கிறார்கள் மற்ற தலைவர்கள் ?

இங்கே நாம் முக்கியமாக ஓன்று கவனிக்க வேண்டியது இருக்கிறது விடுதலை புலிகளுக்கு எதிராக ஜெயலலிதா இருந்தார் சரி . ஆனால் தேர்தல் புறக்கணிப்பு செய்ய சொல்லும் நண்பர்கள் பகிரங்கமாக விடுதலை புலிகளை ஆதரிப்பார்களா என்றால் இல்லை . ஆண்டில் இருநூறு நாட்கள் விடுதலை புலிகளுக்கு எதிராகவும் எழுதி வருபவர்கள் தான் ஈழத்திற்காக தேர்தலை புறக்கணிக்க சொல்கிறார்கள் .

மொத்தத்தில் அவர்களுக்கு ஆண்டு தோறும் புறக்கணிப்பை விளக்க ஒரு காரணம் வேண்டும் இப்போ அது தமிழ் ஈழம் . சரி விடுங்க தேர்தல் வந்தால் இதெல்லாம் இருக்க தான் செய்யும் .

7 கருத்துக்கள்:

வின்னர் said...

உண்மை தான் இவங்க ovveru வாட்டியும் இப்படி தேர்தல் புறக்கணிக்க சொல்லுவாங்க இப்போ ஈழத்தை சொல்லியாவது oru irandu சதவீதம் கிடைக்குதா என்று தான் பார்கிறாங்க அவ்வளவு தான் .

Anonymous said...

சீமான் ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்றால் அதை யோசித்து தான் செய்வார் . அதை விட்டு விட்டு இப்படி பேசுவது சிலருக்கு அழகல்ல .

ஜெயலலிதா தமிழ் ஈழம் தான் தீர்வு என்று துணிச்சலாக சொல்லியிருக்கிறார் . அவர் சொன்னதே காங்கிரஸ் கட்சிக்கு கரி பூசுவது போல் ஆகி விட்டடது . இத்தனை நாளும் கருணாநிதியால துணிச்சலா சொல்ல முடியவில்லையே . தேர்தல் புறக்கணிப்பு என்பது நீங்கள் சொல்வதை போல் போகாத ஊருக்கு வலி காட்டுவது தான் . தேர்தலுக்கு தேர்தல் புறகணிப்பு என்று சொல்வார்கள் அதை இப்போதும் சொல்கிறார்கள் .

இந்த தேர்தலில் நமது நோக்கம் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் .
விடுதலை புலிகளை பாசிசம் என்று சொல்பவர்கள் தான் இப்போது தேர்தல் புறகணிப்பு செய்ய சொல்கிறார்கள்

மக்கன் said...

தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜெயலலிதா காங்கிரசோடு கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் கசிகிறதே? உண்மையா?

நான் said...

சுரேஷ் வரலாறை திரித்தும் மறைத்தும் பேசுவதும் வாக்குகளை பெறுவதற்காக தேவைஇல்லாமல் உண்மைகளை மறைத்து பேசுவதும் உங்களுக்கும் யாருக்கும் சரியல்ல அதற்காக கடும்கண்டனத்தை தெரிவிக்கிறேன்

Suresh Kumar said...

நான் கூறியது...

சுரேஷ் வரலாறை திரித்தும் மறைத்தும் பேசுவதும் வாக்குகளை பெறுவதற்காக தேவைஇல்லாமல் உண்மைகளை மறைத்து பேசுவதும் உங்களுக்கும் யாருக்கும் சரியல்ல அதற்காக கடும்கண்டனத்தை தெரிவிக்கிறேன் /////////

நண்பரே எந்த வரலாற்றை என்று சொன்னால் தானே தெரியும் . வரலாற்றை சொல்லி விட்டு கண்டனம் தெரிவித்தால் ஆரோக்கியமாக இருக்கும் முடிந்தால் அந்த உண்மைகளை சொல்லுங்கள் . நன்றி உங்கள் கருத்திற்கு

நான் said...

வரலாறு என்பது ஜெயலலிதாவை பத்தி சொன்னது வைகோவுக்கு எப்போதும் ஈழதமிழர் மீது பாசம் உண்டு ஆனால் ஜெயலலிதா அப்படி அல்ல எனவே இது தமிழர் ஆதரவு கூட்டணியல்ல தேர்தல் கூட்டணி நான் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு சொல்லவில்லை ஒருசில அரசியல் தலைவர்கள் மட்டும் இதில் மிகவும் ஆர்வம் உடையவர்கள் என்பதே ஆனால் இங்கே எனக்கு உங்கள் பதிவுகளை படிக்கவே நேரம் போதவில்லை என்டாலும் நான் பின்னூட்டம் போடுவது கொஞ்சம் அதிகம் தான் வரலாறுகளை நேரில் சந்திக்கும் போது விவாதிக்கலாம். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்
கருத்து சொல்லாவிட்டாலும் உங்கள் பதிவுகளை படிக்கிறேன் நன்றி

Suresh Kumar said...

வரலாறு என்பது ஜெயலலிதாவை பத்தி சொன்னது வைகோவுக்கு எப்போதும் ஈழதமிழர் மீது பாசம் உண்டு ஆனால் ஜெயலலிதா அப்படி அல்ல எனவே இது தமிழர் ஆதரவு கூட்டணியல்ல ////////////
நான் எந்த இடத்திலும் வராலற்றில் ஜெயலலிதா ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று சொல்ல வில்லையே . இதுவரை வைகோ பழ. நெடுமாறன் போன்ற தலைவர்கள் தான் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று சொல்லியிருக்கிறார்கள் . ஆனால் ஜெயலலிதா இவ்வளவு நாட்களும் எதிராக இருந்து இப்போது பேசியிருக்கிறார் என்றால் அது தேர்தலுக்காக மட்டும் தான் என்பது அனைவருக்கும் தெரியும் . ஏனெனில் இந்த தேர்தலே ஈழ பிரச்சனையே முதன்மை பெற்றுள்ளது .

கலைஞர் கருணாநிதியால் கூட துணிந்து சொல்ல முடியாத ஒன்றை ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் . அதுவே மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி தான் . இந்த தேர்தல் என்பது இத்தனை உயிர்கள் சாக காரணமான காங்கிரஸ் கட்சியும் அதற்கு துணை போன திமுகவும் தோற்க வேண்டும் . அப்படி தோற்றால் மட்டுமே தமிழனுக்கு உணர்ச்சி இருக்கிறது என்பது உலகத்திற்கு தெரியும் .

இதில் தான் கவிஞர் தாமரை சொன்னதை நினைவு படுத்துகிறேன் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க நல்லா தண்ணியா கேட்ட தண்ணியா என்று பார்க்க முடியாது . இது தான் தமிழர்களின் இன்றைய நிலை.இந்த தேர்தல் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட யார் தோற்க வேண்டும் என்பது தான் .

தான் வரலாறுகளை நேரில் சந்திக்கும் போது விவாதிக்கலாம்./////////
கட்டாயம்

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்
கருத்து சொல்லாவிட்டாலும் உங்கள் பதிவுகளை படிக்கிறேன் நன்றி//////

நன்றி உங்கள் ஊக்கமளித்தலுக்கு

Post a Comment

Send your Status to your Facebook