Friday

சோனியாவே கருணாநிதிக்கே அல்வாவா ?

தமிழின தலைவராக தன்னால் பிரகடனபடுத்திய கருணாநிதிக்கு இத்தாலியில் பிறந்த சோனியா எப்படி அல்வா கொடுக்கலாம் . இதையடுத்து கருணாநிதி என்ன செய்வது என்றே தெரியாமல் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்திருக்கிறார் . 

பொதுவாகவே கருணாநிதி தன்னுடைய சுயமரியாதையை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது .  . கடந்த முறை வாங்கிய தொகுதிகளை விட இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமே  என்று வீராப்புடன் நீண்ட விமானத்தில போனவர் ................................................? இப்போ .இத்தாலியில் பிறந்த பெண்மணியால் அவமான பட்டு திரும்பி வந்தது தான் மிச்சம்.  இலங்கை தீவிலே ஈழ தமிழர்கள் சிங்கள அரசால் இன படுகொலை செய்யப்படும் போது தடுக்க முடியாத ( முயற்சிக்காத ) கருணா . சிங்கள இனவெறி அரசு நடத்தும் இன படுகொலைக்கு துணை போகும் காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் அதை பற்றி பேச டில்லிக்கு செல்லாத கருணா .   தன்னுடைய மகனுக்கும் பேரனுக்கும் மந்திரி பதவி வேண்டுமென்று நடக்க முடியாத வயசிலும் டில்லிக்கு சென்றார் .

கடந்த முறை  ஊழலின் மூலம் கிடைத்த கோடிகணக்கான பணத்தின் மூலம் மக்களின் எண்ணங்களுக்கு மாறாக வாக்குகளை பெற்று கொண்டு மீண்டும் கொள்ளையடிக்க பதவி பேரம் பேச சென்றார் .  கடந்த முறை ஊழல் மந்திரியாக இருந்த டி ஆர . பாலு , டி . ராசா , மற்றும் மதுரை ரவுடியும் தன்னுடைய மகனுமான அழகிரிக்கும்  மந்திரி பதவி தர முடியாது என்று சொன்னவுடன் ஆடி போயிட்டாராம் . அது மட்டுமல்லாது கடந்த முறையை விட நாங்கள் (காங்கிரஸ் )அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் எனவே இந்த முறை மொத்தம் நான்கு மந்திரி பதவி தான் தர முடியும் என்றும் சொல்லி விட்டார்களாம் . அந்த வெறுப்பில் இப்போது வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவு பண்ணி விட்டாராம் . இல்லையென்றால் மாநில முதல்வர் பதவியும் பறிபோய்விடுமாம் .

ஈழ தமிழகளின் ரத்தங்களை பார்த்து மகிழ்ந்த போது கூடவே இருந்து சோனியாவுக்கு விசிறியால் வீசி கொடுத்த கருணாநிதிக்கு சோனியா கொடுத்த பரிசு தான் அல்வா .இருந்தாலும் தமிழக மக்களுக்கே அல்வா கொடுத்த கருணாநிதிக்கே சோனியா அல்வாவா ?

10 கருத்துக்கள்:

லக்கிலுக் said...

அண்ணே!

தேர்தலுக்கு முன்பாக நீங்கள் எழுதிய பதிவுகளை எல்லாம் மலரும் நினைவுகளாக படித்து மகிழவும். யார் யாருக்கு அல்வா கொடுத்தார்கள் என்று தெளிவாக தெரியும் :-)

Suresh Kumar said...

லக்கிலுக் கூறியது...

அண்ணே!

தேர்தலுக்கு முன்பாக நீங்கள் எழுதிய பதிவுகளை எல்லாம் மலரும் நினைவுகளாக படித்து மகிழவும். யார் யாருக்கு அல்வா கொடுத்தார்கள் என்று தெளிவாக தெரியும் :-) ///////////////////////////


வேற என்ன மக்களுக்கு உங்க தலைவர் அல்வா கொடுத்தாரு அவருக்கு சோனியா கொடுத்தாங்க . ஈழ தமிழர்களின் உயிருக்காக டில்லிக்கு போயிருந்தா இந்நேரம் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிழைத்திருக்கும் . அப்போது காங்கிரஸ் கட்சிக்கும் அதிக எம்பிக்கள் இல்லை கருன்னாநிதியை நம்பியே இருக்க வேண்டியது இருந்தது . ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல மொத்ததில அல்வா நல்ல சாப்பிட்டிருக்கார் .

SUBBU said...

// ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல மொத்ததில அல்வா நல்ல சாப்பிட்டிருக்கார் .//

சரியா சொன்னீங்க :)))))))))))))))))

Suresh Kumar said...

SUBBU May 22, 2009 5:20 PM

// ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல மொத்ததில அல்வா நல்ல சாப்பிட்டிருக்கார் .//

சரியா சொன்னீங்க :)))))))))))))))))


நன்றி சுப்பு

நாமக்கல் சிபி said...

தமிழ்நாட்டு மக்களை நம்பாமல் காங்கிரசை நம்பிய தலைவருக்கு இந்த அல்வா மிகுந்த சுவையுடையாதவே இருந்திருக்கும்!

Suresh Kumar said...

நாமக்கல் சிபி கூறியது...

தமிழ்நாட்டு மக்களை நம்பாமல் காங்கிரசை நம்பிய தலைவருக்கு இந்த அல்வா மிகுந்த சுவையுடையாதவே இருந்திருக்கும்! ////////////////////////

சரியாக சொன்னீங்க சிபி அண்ணே நன்றி

கலையரசன் said...

தன் அருமை மருத மகன் அஞ்சாநொஞ்சனுக்கு
ஊரையே வளைத்துப் போட்டது பத்தாதுன்னு,
இப்ப மந்திரி பதவி வேறகேக்குறாரா?
அதான் இட்லியம்மா அடிச்சாங்க..

சூரியனிக்கே...டார்ச்!

Suresh Kumar said...

கலையரசன் கூறியது...

தன் அருமை மருத மகன் அஞ்சாநொஞ்சனுக்கு
ஊரையே வளைத்துப் போட்டது பத்தாதுன்னு,
இப்ப மந்திரி பதவி வேறகேக்குறாரா?
அதான் இட்லியம்மா அடிச்சாங்க..

சூரியனிக்கே...டார்ச்! ////////////////////////////


நன்றி கலையரசன்

ஜுர்கேன் க்ருகேர்..... said...

//மகனுமான அழகிரிக்கும் மந்திரி பதவி தர முடியாது என்று சொன்னவுடன் //

டெல்லி பாராளுமன்றத்தில் மர்ம மனிதர்கள் கேபிள் வயர்களை அறுத்து அட்டகாசம் :)

Suresh Kumar said...

ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...

//மகனுமான அழகிரிக்கும் மந்திரி பதவி தர முடியாது என்று சொன்னவுடன் //

டெல்லி பாராளுமன்றத்தில் மர்ம மனிதர்கள் கேபிள் வயர்களை அறுத்து அட்டகாசம் :) /////////////////////////////////

இப்பவே இப்படியென்றால் ..........? நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு

Post a Comment

Send your Status to your Facebook