Monday

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஜனனி அதிக வாக்குகள் பெற்று சாதனை நூலிழையில் வெற்றியை தவறவிட்டார் .

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி ஜனநாயகம் லண்டன் பகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் . அவர் 50000 க்கும் அதிகமான வாக்குகள் பெற்று புதிய சாதனை படைத்தார் . ஆனால் துரதிர்ஷ்ட வசமாக வெற்றியை தவறவிட்டார் .


ஜனனிக்கு இலங்கை தமிழ் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி அருள் பிரகாசம்(MIA) ஆதரவு தெரிவித்திருந்தார் . தமிழர்களின் குரல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒழிக்க வேண்டுமானால் ஜனனி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்திருந்தார் . அவருக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியிருந்தனர் .
ஆனால் துரதிஷ்டவசமாக ஜனனி தோல்வியுற்றார். இருப்பினும் கூட, 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்து விட்டார் ஜனனி.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் இதுவரை கிடைத்ததில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஜனனி வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார்.

ஜனனிக்கு 1 இலட்சம் வாக்குகள் கிடைத்திருந்தால் அவர் எம்.பி. ஆகியிருப்பார்.

6 கருத்துக்கள்:

Suresh Kumar said...

தமிழ் மணத்தில் அனுப்பு பட்டனை சொடுக்கினால் புதிய இடுகைகள் எதுவும் இல்லை என காட்டுகிறது . மற்றும் காலையில் இணைத்த இடுகைகளுக்கு ஒட்டு நிரல் வரவில்லை ஏன் என தெரிந்தவர்கள் கொஞ்சம் ஆலோசனை தாருங்கள்

தீப்பெட்டி said...

50,000 ஓட்டுகள் வாங்கியது மகிழ்வாய் இருந்தாலும், வெற்றி வாய்ப்பை இழந்தது வருத்தமே..

இது நல்ல தொடக்கமாக அமையட்டும்..

கலையரசன் said...

கண்டிப்பாக அடுத்த தடவை வெற்றி பெறுவார்..
நம் வாழ்த்துக்கள்!!

sugumar said...

வெற்றி இல்லாவிட்டாலும் நல்ல தொடக்கம். வாழ்த்துகள் .
மு.சுகுமார் வேலூர்

ஆ.ஞானசேகரன் said...

//இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார்.///

மகிழ்ச்சியுடன் பாராட்டுகள்

Suresh Kumar said...

நன்றி தீப்பட்டி , கலையரசன் , sugumar ,ஆ.ஞானசேகரன்

Post a Comment

Send your Status to your Facebook