Tuesday

தமிழ் ஈழம் கோருவதில் என்ன தவறு? : வைகோ

இவர்கள் தோற்று விட்டனரே என்று மக்கள் நம்மைப் பார்த்து வருத்தப்படுவது தான் நமக்கு கிடைத்த முதல் வெற்றி,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார். கரூரில் நேற்று நடந்த மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில் பொதுச்செயலர் வைகோ பேசியதாவது: கடந்த 1993ல் ம.தி.மு.க., கருக்கொண்ட ஊரான கரூரில், மீண்டும் துவங்கும் சீரமைப்பு காரணமாக கட்சி மேலும் பலம் பெறும். ஜூலை 1ம் தேதியில் இருந்து கட்சி உறுப்பினர் சேர்க்கை துவங்குகிறது. விருதுநகரில் நான் வெற்றி பெறாததில் எந்த கவலையும் கொள்ளவில்லை. அன்று போல் இன்றும் இயக்கத்தின் பணியில் ஈடுபட்டுள்ளேன். "இவர்கள் தோற்று விட்டனரே' என்று மக்கள் நம்மைப் பார்த்து வருத்தப்படுவது தான் நமக்கு கிடைத்த முதல் வெற்றி. கட்சியில் இதுவரை இருந்தவர்களுக்கு நன்றி. இனி யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


நம் வாழ்நாளில், வரலாற்றில் இல்லாத அளவு தமிழினத்துக்கு இழிவும், அழிவும் ஏற்பட்டுள்ளது. உலகில் நாதியற்ற நிலையில் தமிழினம் உள்ளது. இலங்கை ஈழத்தில் உள்ள பூமி, தமிழர்களின் பூர்வீகமானது என்பதற்கு யாரும் ஆதாரமளிக்க தேவையில்லை. இலங்கையின் வடக்கிலும், தமிழர் பூர்வீக பகுதியிலும் சிங்களர் குடியிருத்தப்படுகின்றனர்.

இலங்கைத் தமிழர் துயரத்துக்கு சோனியாவை குற்றம் சொல்ல மாட்டேன். கடந்த 2004 துவக்கத்தில் போட்ட திட்டத்தில், கூட்டணி சேர முன்னர் தயங்கிய, அதே தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தார் ரகசிய ஒப்பந்தம் அடிப்படையில். இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஆயுதம் சப்ளை செய்யப்பட்டது. திட்டத்துக்கு முழு காரணம் கருணாநிதி. டில்லியுடன் நமக்கு உள்ள உறவு 200 ஆண்டு காலம் பழமையானது. ஆனால், கரிகாலன் காலம் முன்னரே இலங்கைத் தமிழர்களுடன் உள்ள உறவு, தொப்புள் கொடி உறவு. பாலஸ்தீனத்தில் தனி நாடு கோரும் போது, இலங்கையில் தமிழீழம் கோருவதில் என்ன தவறு உள்ளது? இவ்வாறு வைகோ பேசினார்.

செய்தி உபயம் : தினமலர்

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook