Friday

எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் இருக்கிறேன்

ஒவ்வெரு நாளும் சமூகத்தில் பல மாற்றங்கள் மாறி கொண்டேயிருக்கின்றன நாமும் எழுதி கொண்டேயிருக்கிறோம் . சில நேரங்களில் என்ன எழுதுவது என்ற குழப்பங்கள் ஏற்படலாம் உங்களுக்கும் அதே போல தான் எனக்கும் குழப்பங்கள் ஏற்பட்டது . எதை பற்றி எழுதுவது ..................................?

காஷ்மீர் முதலமைச்சர் மீதான பாலிய குற்றச்சாட்டை பற்றி எழுதவா ? அதனால் அவர் ஆடிய ராஜினமா நாடகத்தை பற்றி எழுதவா ? சி பி ஐ அறிக்கையை சட்டசபையில் வைத்து கிழித்தெறிந்த மெகபூபா பற்றி எழுதவா ?

இலங்கையில் நடைபெற்ற மனித பேரவலத்தை தாண்டியும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் உதவியை பற்றி எழுதவா ? சர்வதேச நாணய நிதியம் பல கட்டுப்பாடுகள் விதித்து தான் பணம் கொடுத்திருக்கிறது இது ஒரு வகையில் தமிழர்களின் வெற்றி தான் என பிரச்சாரம் செய்வதை பற்றி எழுதவா ?

கல்லூரி மாணவர்கள் சில நேரம் குண்டர்களாக மாறுவதை பற்றியா ? எழும்பூரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களை இன்னொரு பிரிவு மாணவர்கள் தாக்கியதில் எட்டு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டுகள் கல்லூரிக்கு புத்தங்களுக்கு பதிலாக அரிவாளோடு செல்வதை பற்றி எழுதவா ?

5 லட்சம் கேட்டு பள்ளி மாணவனை கடத்திய கள்ள காதல் ஜோடியினர் அந்த மாணவனை கொலை செய்து குளத்தில் வீசியதை பற்றி எழுதவா ?

பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கி தவிக்கும் போது தாங்களே தங்களுக்கு சம்பளம் உயர்த்திய சட்ட மன்ற உறுப்பினர்களை பற்றி எழுதவா ? எந்த ஒரு புகாரும் இல்லாதவாறு இடைதேர்தல் பிரசாரங்கள் நடந்து வருவதை பற்றி எழுதவா ?

ஆந்திராவில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகி ஓட்டுனர்கள் பலியானதை பற்றி எழுதவா ? புதிய கட்சி தலைமை உத்தரவிற்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்தார் அனிதா ராதா கிருஷ்ணன் இதை பற்றியா ?

குமுதம் ரிப்போட்டருக்கு புதிய பல இணையதள வாசகர்களை ஏற்படுத்தி கொடுத்த வினவு வின் ஆபாச பதிவை பற்றி எழுதவா ?

திமுகவை அக்கினி பிரயாசதிற்கு கொண்டு சென்ற விகடன் பற்றி எழுதவா ?

இப்படி தாங்க சிலநேரம் எதைப்பற்றி எழுதுவது என்றே தெரியாம குழம்பி போய்டுவேன் இப்போ எல்லாத்தையும் கொட்டிகிட்டேன் .

29 கருத்துக்கள்:

Unknown said...

எதை எழுதுவது என்று சொல்லி எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள்
டீவி செய்திகள் மாதிரி.

தேவன் மாயம் said...

இப்படியும் எழுதலாமோ!

தேவன் மாயம் said...

பலே கில்லாடி நீங்க..

லோகு said...

கதம்பம் போல் இந்த வார நிகழ்வுகளை எல்லாம் ஒரே பதிவில் தொட்டு விட்டீர்கள்.. அருமை..

கார்க்கிபவா said...

ரத்தம் கொட்டும்போதும் இந்த இளைஞனின் கண்ணில் தெறிக்கும் கோவத்தை பார்த்த்விட்டு எதையும் சொல்லத் தோணவில்லை..

இதுக்கெல்லாம் எப்ப முடிவு என்று யோசிப்பதே வீண்.. இது இப்படித்தான்..

Suresh Kumar said...

கே.ரவிஷங்கர் said...

எதை எழுதுவது என்று சொல்லி எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள்
டீவி செய்திகள் மாதிரி ///////////////////////

நன்றி ரவி சங்கர்

Suresh Kumar said...

தேவன் மாயம் said...

இப்படியும் எழுதலாமோ!////////////////////

எல்லாமே முயற்சி தானே சார்

Suresh Kumar said...

தேவன் மாயம் said...

பலே கில்லாடி நீங்க..////////////////////////

ஏன் சார் பொய் சொல்றீங்க

Suresh Kumar said...

லோகு said...

கதம்பம் போல் இந்த வார நிகழ்வுகளை எல்லாம் ஒரே பதிவில் தொட்டு விட்டீர்கள்.. அருமை..//////////////////////


நன்றி லோகு வருகைக்கும் கருத்திற்கும்

Suresh Kumar said...

கார்க்கி said...

ரத்தம் கொட்டும்போதும் இந்த இளைஞனின் கண்ணில் தெறிக்கும் கோவத்தை பார்த்த்விட்டு எதையும் சொல்லத் தோணவில்லை..

இதுக்கெல்லாம் எப்ப முடிவு என்று யோசிப்பதே வீண்.. இது இப்படித்தான்./////////////////


ரத்தம் வரும் பொது அழுகையோ கோபமோ வருவது இயற்கை தான் . ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல

vasu balaji said...

இந்த உத்தி புதுசு. கலக்கல். வாழ்த்துகள்.

. said...

அதான் எல்லாத்தையும் எழுதிட்டீங்கலேங்க!! அப்புறம் என்னத்த எழுதவான்னு கேக்கறீங்க..??

ஆனா... எல்லா செய்தியையும் ஒருங்கே இணைத்த நல்ல பதிவு...:)

சம்பத் said...

கடைசி வரை எதை பத்தி எழுத போறிங்கன்னு சொல்லவே இல்லியே... :-))

தங்க முகுந்தன் said...

super! நானும் விசரன் மாதிரி ஏதோ எல்லாம் எழுதித் தள்ளுகிறேன்! நீங்களும் அப்படிச் செய்யலாமில்லையா?

குரும்பையூர் மூர்த்தி said...

ஏதோ...!எழுதிக்கொண்டே இருந்தால் சரிதான்... சிலர் போல் விடை பெறுகிறேன் என்றும் 10 கேள்விகள் கேட்டும் எழுதாமல் இப்படி புதிது புதிதாக எழுதுவது ந்ன்று நண்ப!

sakthi said...

ஒரு வார பத்திரிக்கை ரேஞ்சுல இருக்கு இந்த பதிவு சுரேஷ் நல்ல பகிர்வு....

Suresh Kumar said...

பாலா... said...

இந்த உத்தி புதுசு. கலக்கல். வாழ்த்துகள்.///////////////////////////

நன்றி பாலா

ஆ.ஞானசேகரன் said...

ஓஓஒ இப்படியும் சொல்லலாமா நண்பா. நல்லாயிருக்கே

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு வாராந்திர நடப்புகள்...

புதிய முயற்சி!

Suresh Kumar said...

Priyanka said...

அதான் எல்லாத்தையும் எழுதிட்டீங்கலேங்க!! அப்புறம் என்னத்த எழுதவான்னு கேக்கறீங்க..??

ஆனா... எல்லா செய்தியையும் ஒருங்கே இணைத்த நல்ல பதிவு...:)//////////////////

நன்றி பிரியங்கா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

S.A. நவாஸுதீன் said...

எதைப்பற்றி எழுதன்னு கேட்டுகிட்டே நிறைய விஷயங்களை எழுதிட்டு நிறைய பேருக்கு தலைப்பும் கொடுத்துட்டீங்க போல.

Suresh Kumar said...

சம்பத் on July 31, 2009 7:04 PM said...

கடைசி வரை எதை பத்தி எழுத போறிங்கன்னு சொல்லவே இல்லியே... :-))
///////////////////////

எழுதவே இல்லையே எத பற்றி எழுதலாம் என கேட்க தானே செய்தேன் .

நன்றி சம்பத்

Suresh Kumar said...

தங்க முகுந்தன் said...

super! நானும் விசரன் மாதிரி ஏதோ எல்லாம் எழுதித் தள்ளுகிறேன்! நீங்களும் அப்படிச் செய்யலாமில்லையா?/////////////////////////


ஒவ்வெருவரும் ஒவ்வெரு பாணியை கடை பிடிப்பது நல்லது தானே நண்பா

Suresh Kumar said...

sakthi said...

ஒரு வார பத்திரிக்கை ரேஞ்சுல இருக்கு இந்த பதிவு சுரேஷ் நல்ல பகிர்வு....//////////////////

நன்றி சகோதரி உங்கள் கருத்திற்கு

Suresh Kumar said...

குரும்பையூர் மூர்த்தி said...

ஏதோ...!எழுதிக்கொண்டே இருந்தால் சரிதான்... சிலர் போல் விடை பெறுகிறேன் என்றும் 10 கேள்விகள் கேட்டும் எழுதாமல் இப்படி புதிது புதிதாக எழுதுவது ந்ன்று நண்ப!///////////////

அப்படியெல்லாம் பூச்சாண்டி காட்ட தெரியாது நண்பா

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்.. இப்படி கூட எழுதலாமா?

Anbu said...

\\\லோகு said...

கதம்பம் போல் இந்த வார நிகழ்வுகளை எல்லாம் ஒரே பதிவில் தொட்டு விட்டீர்கள்.. அருமை..\\

Repeatttt

Anbu said...

நல்லா இருக்கு அண்ணா..
செய்திக்குறிப்புகள்..

Pradeep said...

நல்ல ஒரு சிந்தனை.

:))

Post a Comment

Send your Status to your Facebook