Friday

நாடகமாடியே கல்லறைக்கு அனுப்பினாயே தமிழினத்தை


  • ஒரு புறம் இலவசங்களை கொடுத்து ஏழை மக்களை பிச்சை காரர்காளாக்கி தமிழினத்தின் தன்மானத்தை இழக்க செய்தாய் .
  • நான்கு மணிநேரம்உண்ணாவிரதமிருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொலை செய்தாய் .
  • தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே குடி கானல் நீர் திட்டமாக்கினாய்
  • நிர்வாக திறமையின்மையால் முல்லை பெரியாறில் தமிழன் உரிமையை அடகு வைத்தாய்
  • மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை அப்புறம் எதற்கு வழக்கு என்றாய் , மத்திய அமைச்சரே உன் கன்னத்தில் அறைந்தது போல் அனுமதி கொடுத்திருக்கிறோம் என்ற பின்பு உச்சநீதி மன்றம் சென்று வழக்கு நடத்த தெரியாமல் தோல்வி கொண்டாயே .
  • பதவியே வேண்டாம் என்று சமூக சீர்திருத்தங்களை உருவாகிய ஈவேரா பெரியார் வழி வந்தவன் என்று சொல்லியே பாக்கியே இல்லாமல் கட்சி முதல் ஆட்சி வரை குடும்பத்திற்கு பிரித்து கொடுத்திருக்கிறாயே .
  • தானே விருதுகள் அறிவித்து தானே வாங்கி கொள்வது என்ன நியாயமோ ?
  • அது மட்டுமா தமிழக அரசு விருது மாற்ற ஒருவருக்கு போக விடாமல் எடுத்து கொள்ள மனம் தான் எப்படி வருகிறதோ ?
எல்லாவற்றையும் பொறுத்திருக்கிறோம் ஆனால் இப்போது எம்பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வந்தவுடன் வாய் கூசாமல் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று ராஜ பக்ஷே சொல்லாத பொய்யை எப்படி சொல்ல முடிகிறது ? நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என சொன்ன பொய்யால் முப்பதாயிரம் மக்களின் உயிரை எடுத்து கொண்டது போதாதா ?

1 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என சொன்ன பொய்யால் முப்பதாயிரம் மக்களின் உயிரை எடுத்து கொண்டது போதாதா ?//

ம்ம்ம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை நண்பா

Post a Comment

Send your Status to your Facebook