Wednesday

தமிழர்களை கொன்று குவித்த இனவெறியனுக்கு பொன்னாடையா ?

இலங்கையில் தமிழ் ஈழ மக்கள் சுமார் ஒரு லட்சம் பேரை கொன்று குவிக்க உறுதுணையாக இருந்து விட்டு இப்போது சுற்றுலா சென்றிருக்கிற தமிழக திமுக கூட்டணி நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் தமிழர்களை கொன்று குவித்த நவீன கிட்லர் ராஜ பக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டியிருக்கிறார்கள் .

உலக நாடுகள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் தமிழக குழு இலங்கை சென்று பிணம் தின்னி மகிந்தாவுக்கு பொன்னாடை போர்த்தியது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது .


திமுக , காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே உருவாக்கி கொண்டு சென்ற அறிக்கையை தமிழகத்தில் சமர்பிக்க இருக்கின்றனர் . இதுவரை முகாம்களை சென்று பார்த்த அனைத்து வெளி நாட்டவர்களும் மக்களுக்கான அடிப்படி தேவைகள் இல்லை , இது ஒரு திறந்த வெளி சிறைச்சாலை என்று சொல்லியிருக்கிற வேளையில் காங்கிரஸ் எம்பி சுதர்சன நாச்சியப்பன் முகாம்கள் சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் . சர்வதேச தரம் என்பது என்ன என்று தெரியுமா என்பது தெரியவில்லை .

தங்களுடைய சொந்த நாட்டை சிங்கள அரசு ஆக்கிரமித்து சொந்த நாட்டிலேயே சிங்கள இனவெறி அரசால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் . எந்த தவறுமே செய்யாத மக்களை சிறை பிடித்து அந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இனவெறி அரசு சர்வதேச தரத்திற்கு முகாம் அமைத்திருக்கிறது என்றால் எப்படி இருக்கும் . தப்பு செய்யாத ஒருவனை சிறையில் அடைத்து சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் அது சுதந்திரமா ?

வேலியே பயிரை மேய்ந்த கதையை கேள்வி பட்டிருப்போம் . இங்கே பயிரை மேய்ந்தவனையே விட்டு பாதிப்பு எவ்வளவு என பார்க்க சொல்கிறார்கள் . அங்கெ இன்று சிறையில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழனாக இருந்தாலும் சரி சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்ட ஈழ தமிழனாக இருந்தாலும் சரி அவனின் இத்தனை நிலைமைக்கும் காரணம் மத்திய மாநில அரசுகள் தானே . சிங்கள இனவெறி தலைவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நேரத்தில் நீங்கள் பொன்னாடை அணிவித்தது நியாயமா ? நீங்கள் பொன்னாடை அணிவித்து இனபடுகொலையை அங்கீகரிக்க தான் சென்றீர்களா ?


பசில் ராஜ பக்சேவை டி ஆர் பாலு ஆற தழுவி கொண்டார்

13 கருத்துக்கள்:

டவுசர் பாண்டி... said...

போகலைன்னாலும் திட்றீங்க...போனாலும் திட்றீங்க...

Unknown said...

mr.pandi,
cerain things must be done in proper time. u told that why scolding them,think once evrybod knows india supported lanka i all he aspect thatwhyth got the victory evn tough they nver mind it.whats the use of going this peope instead of tht our govt can make them to repease from that camp.but they want to do eye wash thats why ths drama.

களப்பிரர் - jp said...

இந்திய அரசின் அத்தனை உதவிகளும் இவர்களின் ஒப்புதலுடன் தான் நடந்திருக்கும் என்பதற்கு இந்த புன்னகையே சாட்சி !!

வால்பையன் said...

பன்னாடைகளின் ஆட்சியில் வேற என்ன போடுவாங்க!

பொன்னாடை தான் போடுவாங்க!

S.A. நவாஸுதீன் said...

ஆரம்பத்திலிருந்தே அவங்க வேலையை அவர்கள் சரியாகத்தான் செய்கிறார்கள். நாமதான் இவங்க நல்லது செய்வாங்கன்னு சொல்லி தவறா எண்ணிக்கொண்டிருக்கிறோம். அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

கலையரசன் said...

பச்சோந்திகளை பேசி என்ன ஆக போகுது?
சாப்டுட்டு போயிட்டே இருக்கனும்.. ஏன்னா, நம்ம எல்லாம் தமிழன் இல்லையா?

Jeyapalan said...

shame on the DMK for the entire history of the human being.

Anonymous said...

INDHA PADATHAI POSTER ADICHU OTTANUM THAMIZHNAATIL

Sureraja said...

Raaja Pakse is the POL POT of Srilanka. Leave alone Ponnadai, that pannaadai, deserves to be brought to the International court of justice and punished for life. He is a Lankan. Leave him aside. Look at our own thanmaanaththamizhargal. Ponnaadai poduvathum, kattiththazhuvuvadhum, muppaththi irandu parkalum munnukku vara vetrichchirippu sirippadhum, ovvoru thamizhanukkum, kannaththil ongi vittaargal oru arai.

தமிழ்ப்பறை said...

தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு
எல்லா இடத்திலும் கருணாக்களுண்டு
எட்டப்பன்கள் மட்டுமல்ல
கமிஷன் அதிகமென்றால்
கட்டபொம்மன்களிடமும்
காட்டிக்கொடுக்கும் குணமுண்டு

butterfly Surya said...

நாளை ராஜபக்‌ஷேவுக்கு ஒரு கவிதை பாடுவாரு...

ஆ.ஞானசேகரன் said...

என்ன சொல்லனுமுனு தெரியவில்லை நண்பா... எப்படியானாலும் ஈழத்தமிழர்கள் சகசநிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் தற்பொதையா ஆசைகள்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

போறக்கு முன்னயே தெரியும் சுரேஷ் இவங்க நாடகம்!

இவர்களையெல்லாம் இன்னும் நம்புகிறவர்களின் மேல் தான் தவறு என்று சொல்வேன்.


சென்னை டு திருப்தி எம்.பி எக்ஸ்பிரஸ் இலங்கை பயணம்
http://jothibharathi.blogspot.com/2009/10/blog-post.html

Post a Comment

Send your Status to your Facebook