இருதலை காதல் , ஒரு தலை காதல் ,கள்ள காதல் என காதல் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. சிலர் காதலை மனசுக்குள் பூட்டி வைக்கின்றனர் சிலர் காதலை வெளிப்படையாக சொல்லி விடுகின்றனர் . ஆண்கள் பொதுவாகவே காதலை மறைப்பதில்லை. பெண்கள் காதலில் காதலிக்கும் வரை வெளிப்படையாக இருப்பதில்லை.
காதலிப்பவர்கள் தங்களுக்குள் சொல்லி கொள்வதெல்லாம் காதல் ஒரு மனசு சம்மந்த பட்டது . மனசும் மனசும் உரசும் போது காதல் ஏற்படுகிறது. பொய்யாக ஒரு மனசை ஏற்படுத்தி தங்கள் எதிர்பார்ப்பை தீர்த்து கொள்வது தான் காதல். இந்த காதல் எந்த வயசிலும் எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் . ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் எந்த காதலும் உருவாவதில்லை.
சிறு வயதில் காதலிக்கிறார்கள் என்றால் ஒரு வித ஏக்கம் நாமும் காதலிக்க வேண்டும் என்ற தவிப்பு . இவைகள் புற சூழ்நிலைகளை பொறுத்து ஏற்படுகிறது . குறிப்பாக அன்றாடம் தங்களை சுற்றி நடைபெறும் செயல் பாடுகள் இவர்களுக்குள்ளும் ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி விடலாம் . ஒரு வயது தாண்டி வாழ்க்கையை பற்றி சிந்திக்க துவங்குகிறவர்கள் இவன் அல்லது இவள் தங்கள் வாழ்க்கைக்கு துணையாக இருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற ஒரு வித எதிர்பார்ப்பு.
இவை அனைத்திலும் மனித உணர்சிகள முக்கியமாக இடத்தை வகிக்கிறது காமம் என்ற உணர்ச்சி மட்டும் இல்லைஎன்றால் கணவன் மனைவி என்ற உறவே இருந்திருக்காது. கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிக பட இந்த உணர்சிகள் பயன் படுகிறது . காதலன் காதலிக்குள் அன்பு பெருகிடவும் இந்த உணர்சிகள் பயன் படுகிறது. உடலில் உரைக்கும் ஹார்மோன்களின் அளவை பொறுத்து உணர்சிகளும் வேறு படுகிறது. மனசு என்பது நம்மை கட்டு படுத்தவும் நம் உணர்சிகளை தூண்டவும் சில நேரங்களில் பயன் படும் . ஆனால் காதல் ஏற்படுவதற்கு மனசு தேவையில்லை.
சில நேரங்களில் திருமணம் ஆனவர்களுக்கு கூட மற்றவர்கள் மீது ஒரு வித காதல் ஏற்படும். இதை சமூக பார்வையில் கள்ள காதல் என்றே சொல்லுகிறோம் . பண்பாடு கலாசாரம் இவற்றில் சிறந்தவர்களாக நம்மை சொல்லி கொள்ளும் நம் நாட்டில் தான் இந்த வகையான கள்ள காதல்கள் அதிகமாக இருக்கின்றன. கள்ள காதல்கள் கடைசியில் விபரீதங்களில் முடிந்தும் இருக்கிறது.
இங்கே காதல் தோல்வி வெற்றி என்பது திருமணத்தில் மட்டுமல்லாது எந்த எதிர்பார்ப்போடு காதலிப்பார்களோ அந்த எதிர்பார்ப்புகளில் அடங்கி இருக்கிறது. காதலித்த பின்னர் காதலை தொடருவதற்கு மனம் பயன் படலாம். காதலிக்கும் முன்னர் எதிர்பார்ப்புகள் தான் முன்னணியில் நிற்கின்றன. ஒரு தலை காதலில் சிலர் தங்கள் காதலை சொல்லாமல் மனசுக்குள்ளே வைத்திருப்பார்கள். சொன்னால் காதலை ஏற்று கொள்வார்களோ இல்லையோ என்பதாலும் சொல்லி விட்டால் மேற்கொண்டு எதாவது பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற எண்ணங்களாலும் சொல்லாமல் ஒரு தலை காதலில் இருக்கலாம். காதலை மனசுக்குள் பூட்டி வைத்தால் அது பூச்செடி ஆகாது மாறாக அரளி செடியாக ஆகி விடும். சொல்ல வேண்டியதை சொல்லி விட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம் இல்லை எதிர்பார்ப்புகள் குறையலாம் எதிர்பார்ப்புகள குறைந்து விட்டால் காதலும் குறையலாம்.
காதலர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் : காதலிக்கும் முன்னர் எதிர்பார்ப்புகளை கூட்டுங்கள் காதலித்த பின்னர் எதிர்பார்ப்புகளை குறையுங்கள் வாழ்க்கை வசந்த மாகும் .
Tweet
7 கருத்துக்கள்:
Arumaiyaana varikal
பகிர்வுக்கு நன்றி
Thanks asokan for ur comments
ஓகே பாஸ்
shibi said...
ஓகே பாஸ்
/////////////////////
என்ன ஓகே
டிப்ஸ் சூப்பர்,,,,
ஜெரின் said...
டிப்ஸ் சூப்பர்,,,,
///////////////////////
இந்த மாதிரி டிப்ஸ் கிடைக்க குடுத்து வைக்கணும் தம்பி
Post a Comment