என்னுடைய அலை பேசியில் ஆர்குட் பக்கத்தை திறந்ததும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் எனக்கு கிடைத்து . இப்படியெல்லாம் இருக்குமோ இல்ல என்னோட அலைபேசியில் தான் பிரச்சனையோ என்று யோசித்தேன் . இல்ல அலைபேசி இணையதள உலாவியில் பிரச்னை இருக்குமோ என் நினைத்தேன் . பின்னர் உலாவியை துண்டித்து மீண்டும் திறந்தேன் அதே அதிர்ச்சிகரமான செய்தி தான் .
ரூம் போட்டு யோசிக்கிறது இது தானோ ? சர்வர் தகராறு செய்கிறது பக்கத்து கடையில் டீ சாப்பிட்டு விட்டு வாருங்கள் . அதிர்ச்சி இருக்காதா பின்ன .பின்னர் அப்படியே கீழ் பக்கம் துரதிர்ஷ்டவசமாக orkut.com எதிர்பாராத விதமாக நடந்து கொள்கிறது . சில நிமிடங்கள் கழித்து நீங்கள் முயற்சி செய்தால் உதவிகரமான நிலைக்கு வரலாம் . அப்படின்னு இருக்கு .
முடிவெட்டும் சலூன் கடைக்கு செல்லும் போது வாடிக்கையாளர் அதிகமாக இருந்தால் சலூன் கடை உரிமையாளர் வாடிக்கையாளரை கவரும் விதமாக டீ ஏதாவது சாப்பிட வேண்டியது இருந்தா சாப்பிட்டு வாங்க அதற்குள்ளால உங்க வரிசை வந்து விடும் என சொல்லுகிறமாதிரியே இப்போ ஆர்குட்லேயும் சொல்ல தொடங்கீட்டாங்க .......... ஐயோ சாமி தாங்கல யாருப்பா ஆர்குட் தமிழ் மொழி சர்வர கவனிக்கிறது . உங்களுக்கு எதாவது தரனும் போல இருக்கு சாமியோ ........... உடனே தொடர்பு கொள்ளுங்க .....
Tweet
6 கருத்துக்கள்:
என்ன இதுவரை யாரும் தொடர்பு கொள்ளலியே!
டீக்கு யார் காசு தருவது, ஆர்குட்டா?
தேவன் மாயம் said...
டீக்கு யார் காசு தருவது, ஆர்குட்டா?
////////////////////////////////
அது தான் தெரியல சார் . அதனால தான் ரூம் போட்டு யோசித்தவங்கள தேடிகிட்டு இருக்கேன்
வணக்கம் சார்
Vanakkam sir nalama?
இப்படி வாற மாதிரி தெரியலியே
Post a Comment