கருணாநிதியும் குடும்பமும் சேர்ந்து தமிழ் நாட்டை கூறு போட்டு வரும் வேளையில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்று அனைவரும் ஓரணியில் திரண்டு கருணாநிதிக்கு எதிராக வருகின்ற தேர்தலை பயன் படுத்த நினைத்தார்கள். கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்து விட கூடிய சூழல் உருவாக்கி வந்த வேளையில் யானை தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டுவது போல் ஜெயலலிதாவால் மதிமுக அலட்சியம் செய்ய பட்டது இன்று மக்கள் மத்தியில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போது ஜெயலலிதாவின் ஆணவம் அகங்காரம் குறைந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகியிருப்பார் என நினைத்து கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தலாம் என பெரும்பான்மையானோர் நினைத்து உண்மை. அதற்கேற்றாற்போல் தான் முதலில் கள நிலவரங்களும் இருந்தன. ஆனால் இன்று நேர்மாறாக கள நிலவரங்கள் இருப்பது மட்டும் தெரிகிறது.
தற்போதைய கள நிலவரங்களில் வேடிக்கை பார்ப்பவராக இருப்பதால் ஓரளவேனும் உண்மை நிலவரத்தை கணித்து சொல்ல முடியும். அதன் அடிப்படையில் ஒவ்வெரு கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் தேர்தல் நிலவரங்கள் குறித்து தெரிந்து கொண்டோம். அதனடிப்படையில் முன்னரை விட திமுகவினர் மிகவும் உற்சாகத்தோடு தேர்தல் பணியாற்றுகின்றனர். அதிமுக அணியில் ஒரு வித தொய்வு ஏற்பட்டுள்ளது.
சிந்திக்கும் மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர் ஆனால் அதே நேரம் கருணாநிதிக்கு பதிலாக ஜெயலலிதா என்பதை ஏற்று கொள்ள வில்லை. யார் இலவசங்கள் அதிகம் கொடுக்கிறார்கள் என்று பார்த்து வாக்களிக்கும் வாக்காளர்கள் பெருகி விட்டார்கள். இரண்டு கட்சி வாக்குறுதிகளையும் ஆராய்ந்து பார்க்கும் மக்கள் ஜெயலலிதா சொன்னதை செய்வார் என்பதை நம்ப தயாரில்லை.
குமரி மாவட்ட நிலவரத்தை பார்த்தால் ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதே கடினம். அப்படியே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் கூட அது கூட்டணி கட்சியின் வெற்றியாக தான் இருக்கும். அதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளில் 2 தொகுதிகளில் அதிமுக போட்டியிலே இல்லை என்பது தான் உண்மை. இதே போல் தென் மாவட்டங்களில் பெரும்பான்மை தொகுதிகளில் அதிமுகவின் தோல்வி உறுதி செய்ய பட்டுள்ளது.
கருணாநிதிக்கு மாற்றாக மக்கள் ஜெயலலிதாவை நம்ப தயாரில்லை. மதிமுகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றியவுடன் ஜெயலலிதா மீது மக்களுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து விட்டது என்பது மக்களிடம் பேசும் போது தெரிகிறது. மாற்றம் வேண்டும் என நினைத்தவர்கள் மத்தியில் யார் வந்தாலும் மக்களுக்கு பயன் இல்லை. ஆட்சிக்கு வரும் முன்னரே நச்சு ஆளை அதிபரிடமும் , சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவிடமும் விலை போன ஜெயலலிதாவால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி தரமுடியும் என்பது தான் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி.
மேலும் தேர்தலுக்கு பின்னர் அதிமுகவோடு காங்கிரஸ் கூட்டணிக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு எதிரான அலை மாறி ஜெயலலிதாவின் திமிர்தனத்திற்கும் மக்கள் விரோத கொள்கைக்கும் எதிரான தேர்தலாக மாறி விட்டது. இதிலிருந்தே அதிமுகவின் தோல்வி குறிக்க பட்டு விட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதான எதிர் கட்சி ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து பின் வாங்கி கொட நாட்டில் ஓய்வெடுத்தது. சிறந்த எதிர் கட்சியாக மதிமுக செயல் பட்டதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட திமுகவிற்கு எதிரான அலையை பயன் படுத்த தெரியாமல் தோல்விக்கு தயாராகி கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இவ்வளவு நாட்களும் வாய்தா வாங்கி காலம் கடத்திய சொத்து குவிப்பு வழக்கும் முடியும் தருவாயில் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு ஜெயிலுக்கு போகும் வாய்ப்புகள் பிரகாசமாக அமையலாம்.
மீண்டும் ஒருமுறை எதிர்கட்சியாக அதிமுகவை ஜெயலலிதாவால் வழி நடத்த முடியுமா ?........
6 கருத்துக்கள்:
கலக்கல் போஸ்ட்.
என்னுடைய கடுமையான கண்டனத்தை அம்மாவின் காலில் விழுந்து வணங்கி பதிவு செய்ய விரும்புகின்றேன்.
அகில இந்திய அக்ரஹாரத் தி மு க வின் முடி சூடாத மன்னியை அவமதித்து எழுதி விட்டீர்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். இனி எழுதும் போது தவறில்லாமல்
கொடநாட்டு மஹாராணி
என்று எழுதவும். மைசூர் மஹாராஜாவின் பரம்பரை என்பதை மறந்து விட வேண்டாம். நடந்து கொள்வதைப் பார்த்தாலே புரிந்து கொள்ள வேண்டாமா?
மீண்டும் ஐயாவே வருவாரு போலிருக்கு .......... குடும்ப அரசியலை சகிச்சுத்தான் ஆகணும் போலிருக்கு
Meendum kalaignar aatchi ... yesterday vaidivelu told
கூட்டணி ஆட்சிக்குதான் வாய்ப்பு அதிகம். ஒரு வேளை ஜெயலலிதா கூட்டணி ஆட்சி அமைத்தால் நிறைய வேடிக்கைகள் பார்க்கலாம்.
அது என்ன காமெடி குடும்ப அரசியல் புரியல.. அதுவும் அது தி மு க வுக்கு மட்டும்..
விஜயகாந்து - பிரேமலதா - சுதீஷ் (இவர் ஆட்சிக்கு வந்த யாரெல்லாம் வருவாங்களோ)
அம்மா - உ பி ச - நடராஜன் - மன்னார்குடி மாபியாக்கள் சுதாகரன் - பாஸ்கரன் - தினகரன் - திவாகரன் - வெங்கடேஷ் - மகாதேவன் - இளவரசி - இன்னும் பலர் ... குடும்ப லிஸ்ட் போதுமா??
Post a Comment