Friday

இரு கழகங்களுக்கும் மாற்றான சக்தி மதிமுக என்பதை நிருபிக்கும் தேர்தல்

பக்கத்து ஊரை சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை நேற்று தொடர்பு கொண்டு கேட்டேன் வாக்களிக்க ஊருக்கு எப்போது வருகிறாய் என்று? நண்பர் சொன்னார் நான் 13 ஆம் தேதி மாலை திரும்பி 14 ஆம் தேதி காலை வந்து சேருவேன். வாக்கு பதிவு 13 ஆம் தேதி வாக்களிப்பது என்றால் 13 ஆம் தேதி இங்கு வர வேண்டும் அல்லவா என்றேன். அதற்கு அவர் எனக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை.   

என்னை விட வயதில் இளையவர் தான் இது இவருக்கு இரண்டாவது தேர்தல் என்று நினைக்கிறேன். எந்த கட்சியையும் சாராதவர் தமிழ் உணர்வு மிக்கவர். மேலும் அவரிடம் பேசும் போது வாக்களிப்பது நமது உரிமை அதை நாம் விட்டு கொடுக்க கூடாது என்று வாதிட்டேன். எதற்குமே அசராத அவர் கடைசியாக ஒன்றை சொன்னார். "சிறு வயது முதலே அதிமுக மீது ஒரு வித வெறுப்பை கொண்டவன் ஆனால் ஈழ போராட்டம் இறுதி கட்டம் அடைந்த போது அந்த மக்களை காப்பாற்ற முடிந்தும் காப்பாற்றாமல் கைவிட்ட திமுக மீதான கோபத்தில் என்னுடைய முதல் தேர்தலிலேயே அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தேன்." 

"அதே போல் இந்த தேர்தலிலும் வாக்களிக்க வர வேண்டும் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். என்னை போல் தான் ஒவ்வெரு தமிழ் உணர்வாளர்களும் நினைத்திருந்தார்கள். மதிமுகவை கூட்டணியை விட்டு வெளியேற்ற அதிமுகவிற்கு ஏற்பட்ட காரணங்களை நினைக்கும் போது ஒரு விசத்தை கீழிறக்க இன்னொரு விசத்தை அல்லவா மேல் ஏற்ற வேண்டியிருக்கிறது என்று நினைக்கும் போது யாருக்கு வாக்களித்தாலும் தமிழர்களுக்கு செய்யும் துரோகம் எனவே நான் யாருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை என்று சொல்லி முடித்தார். " 

இவ்வளவு தெளிவாக பேசிய அவரிடம் வேறு எதுவும் சொல்ல முடியாமல் ஒன்றை மட்டும் சொன்னேன். வாக்களிக்கும் உங்கள் உரிமையை விட்டு கொடுக்காமல் தொகுதியில் போட்டியிடும் கட்சியை பார்க்காமல் வேட்பாளரை பார்த்து வாக்களிக்கலாமே".

தமிழக அரசியலை மிகவும் தெளிவாக புரிந்து வைத்திருக்கும் இவர் எந்த கட்சியையும் சாராதவர். இவரிடம் பேசிய பின்னர் தான் மதிமுக தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடுத்த முடிவு எவ்வளவு நல்ல முடிவு என்பது தெரிந்தது. ஒருவேளை அதிமுக கூட்டணியில் மேலும் சில தொகுதிகளை கொடுத்து மதிமுக அந்த கூட்டணியில் தொடர்ந்து தேர்தலை சந்தித்திருந்தால் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் ஆனால் பலனை பெறுவது மதிமுகவோ தமிழர்களோ அல்ல அதிமுகவும் ஆதிக்க சக்திக்களுமாக தான் இருந்திருக்கும். 

ஒரு வேளை அதிமுக மீதான வெறுப்பில் உணர்ச்சி வசப்பட்டு தனித்து போட்டியிட்டால் திமுக எளிதில் வெற்றி பெற்றிருக்கும் அதனாலும் பலனை பெறுவது மதிமுகவோ தமிழர்களோ அல்ல மாறாக கருணாநிதியும் அவர் குடும்பமும் தான்.  

தேர்தல் முடிந்த பின்னர் விலை போய் மதிமுகவை கழற்றி விடுவதுக்கு பதிலாக முன்னரே விலை போய் மக்கள் மத்தியில் தன்னை பற்றி நிருபித்த ஜெயலலிதாவிற்கு மக்கள் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளார்கள். இப்போது மக்கள் மத்தியில் இரண்டு வாய்ப்புகள் ஓன்று சேலை கட்டிய கருணாநிதி இன்னொன்று வேட்டி கட்டிய ஜெயலலிதா . இவர்கள் இருவருக்குள்ளும் ஒரே எண்ணங்கள் தான் ஓடி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டதால் இரு அணிகளுக்கிடையே எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலை மாறி யாருக்கும் எளிதில் வெற்றி கிடைக்காது என்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது. 

அதனால் தான் மதிமுக எங்கே இருக்கிறது என்று கெட்ட கருணாநிதி ஒவ்வெரு நாள் அறிக்கையிலும் மதிமுக எங்களை ஆதரிக்கிறது இதனால் எங்கள் வெற்றி உறுதி செய்ய பட்டுள்ளது என்று சொல்லி மதிமுகவின் ஆதரவை எதிர் பார்த்து கொண்டிருக்கிறார். 

அதே போல் ஜெயலலிதாவோ வைகோ மீது அன்பும் மரியாதையும் இருக்கும் என்று பேசுகிறார். இருவருமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறார்கள் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது யார் காலில் விழுந்தாவது வெற்றி பெற வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். 

ஒவ்வெரு தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணுவது மதிமுகவின் முடிவுகள் என்பது இந்த தேர்தலிலும் நிருபிக்க பட்டு வருகிறது. மதிமுகவின் சக்தியை தெரிந்து தான் இரு கழகங்களும் மதிமுகவை அழிக்க நினைக்கிறது. அவர்கள் நினைத்த திட்டத்திற்கு மதிமுக எடுத்த தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு மிக பெரிய அடி. மதிமுகவின் இந்த முடிவின் மூலம் மதிமுக தமிழகத்தில் இரு ஊழல் கட்சிகளுக்கு மாற்றான மாபெரும் சக்தியாக உருவெடுக்க துவங்கியிருக்கிறது. 

இந்த தேர்தல் முடிவுகள் என்பது யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு பயன் பட போவதில்லை. ஆனால் தமிழகத்திகு ஒரு மாற்று சக்தி தேவை அது மதிமுக என்பதை நிருபிக்கும் தேர்தலாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

வைகோவின் தேர்தல் புறகணிப்பு முடிவு பற்றி கவிஞர் தாமரை ஜூனியர் விகடனில் 
வரவேற்கத்தக்க முடிவு நான் மனமார ஆதரிக்கிறேன். வைகோ எந்த கூட்டணியில் இருந்தாலும், மக்களுக்கான போராட்டங்களில் அவர் பின்வான்கியதே இல்லை. அவர் உண்மையான, நேர்மையான தலைவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஒரு நல்ல தலைவர் தப்பான இடத்தில் இருந்தது வேதனை. நமக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.                

                

4 கருத்துக்கள்:

Raj said...

Nice

ம.தி.சுதா said...

யாரைத் தான் நம்புவது என்றே தெரியல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

thiyaa said...

வைகோ நேர்மையான நல்ல தலைவர்

Anonymous said...

yes, vaiko is a good politician. but he is not shown a leadership quality yet. atleast now he has to learn leadership quality and come as a alternative force.

// மதிமுக தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடுத்த முடிவு எவ்வளவு நல்ல முடிவு என்பது தெரிந்தது.//
this was not a decision taken by MDMK, but was forced to take. it took almost 20+ yrs for him to realise the politics, i still hope he will learn from his mistakes and come as a alternative soon.

but to me I vote for DMK than Jaya. because she is the poison, she is the one give congress people a courage to talk against LTTE. she is the one made people scare to support LTTE by putting them in Jail. she destroyed all the ltte support in tamilnadu.

Post a Comment

Send your Status to your Facebook