Saturday

சூழ்ச்சியை மக்கள் எழுச்சியால் முறியடிப்போம்

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகியும் இன்னும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வரவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் கல்வியோடு விளையாட ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்திருக்கிறது. நீதிமன்றங்கள் நியாயத்தின் பக்கங்கள் நின்றும் சட்டத்தின் கீறல்களை பயன் படுத்தி மக்கள் விருப்பத்திற்கு மாறாக மாணவர்களின் எதிர் காலத்தை முடக்க இந்த அரசு விரும்புகிறது. 

கல்வி நிறுவனங்களை தனியார் நடத்த அனுமதி கொடுக்க பட்ட நாளிலிருந்து வசதி படைத்தவர்களை கவர்ந்து கல்வி நிறுவன அதிபதிகள் பணம் சம்பாதிக்க உருவாக்க பட்டது தான் மெட்ரிக் பாட திட்டம். தமிழக அரசு பாடதிட்டத்தோடு இது உய்ரவானதாக இருந்தது. மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர் சமுதாயத்திலேயே மெட்ரிக் பாட திட்டம் மூலம் தமிழகத்தில் ஹிந்தி நுழைந்தது.

மெட்ரிக் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் அரசு பள்ளியில் படித்தவர்களுக்குள்ளும் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டது. பிள்ளையை மெட்ரிக் பள்ளிகளில் படைக்க வைப்பது நடுத்தர மக்களிடத்தில் பெருமையாக சித்தரிக்க பட்டது . இதன் விளைவாக கடன் வாங்கியாவது பிள்ளைய மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று வாழ்க்கையை சீரழித்த பெற்றோர்கள் ஏராளம். 

பள்ளி கல்லூரிகளில் சீருடைகள் அமுல் படுத்த பட்டதே ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இருக்க கூடாது என்பதற்காக தான். ஆனால் தமிழகத்தில் கல்வியிலோ ஏற்ற தாழ்வுகள் உருவாகின. கல்வியில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் குறைக்க பட வேண்டும். அனைத்து குடிமகன்களுக்கும் ஒரே கல்வி வழங்க வேண்டும் இது தான் ஒரு நல்ல அரசின் கடமை. பல ஆண்டு காலமாக மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. அப்போதே மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் சார்பாக நீதி மன்றம் சென்றும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. 

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அரசியல் காள்புனர்ச்சியாலும் ஆதிக்க சக்திகளின் தூண்டுதலாலும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் நலனுக்காகவும் சமச்சீர் கல்வியை இடை நிறுத்த சட்ட சபையில் தீர்மானம் போட்டது அதிமுக அரசு. உயர் நீதி மன்றம் , உச்ச நீதி மன்றம் சமச்சீர் கல்வியை தொடர்ந்து நடை முறை படுத்த உத்தரவிட்ட போதும் இதுவரை 1 ஆம் வகுப்பு  6  ஆம் வகுப்பிற்கும் செயல் படுத்தாமல் இருக்கிறது தமிழக அரசு.  மேலும் மற்ற வகுப்புகளின் பாட திட்டங்கள் குறித்து 9 பேர் கொண்ட ஆய்வு குழு தமிழக அரசு அமைக்க வேண்டும் அதன் அறிக்கையை உயர் நீதி மனற்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. 

உச்ச நீதி மன்றம் செய்த மிக பெரிய தவறே இது தான். புதிய தமிழக அரசு தான் சமச்சீர் கல்வியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று துடிக்கிறது . அப்படி பட்ட அரசிடம் நீங்களே ஆய்வு குழுக்கள் அமையுங்கள் என்றால் அவர்கள் என்ன செய்வார்களோ அதை தான் அதிமுக அரசு செய்தது. அவர்களின் கொள்கைக்கு ஏற்ற வகையில் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் அதுவும் யார் பெரிதாக சமச்சீர் கல்வியை எதிர்க்கிரார்களோ அவர்களை குழு உறுப்பினர்களாக அமைத்தார்கள். எல்லொரும் எதிர் பார்த்தது போல் அவர்களின் அறிக்கையும் அமைந்தது. 

சமச்சீர் கல்வி பாடங்கள் தரமற்றது எனவே இதை நடத்த முடியாது என அறிக்கை கொடுத்து விட்டார்கள். தரமற்றதாகவே இருந்தால் கூட 200 கோடி ருபாய் செலவு செய்து அச்சிட பட்ட புத்தகங்கள் மூலம் இந்த ஆண்டு இதே பாட திட்டத்தில் கல்வியை நடத்தி விட்டு அடுத்த ஆண்டிலிருந்து மேலும் தரமானதாக மாற்ற முயல வேண்டும் அது தானே நியாயமான அறிக்கையாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்?  

சமச்சீர் கல்வி என்பது இன்றைய சூழ்நிலைக்கு தேவையானது அது தரமானதா இல்லையா என்பதை ஆய்வு செய்து மேலும் தரமானதாக மாற்ற முயல வேண்டும் அது தான் ஒரு நல்ல மக்களுக்கான அரசின் கடமை. சமச்சீர் கல்வி ரத்து செய்ய வேண்டும் என சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது தினமணியில் வந்த தலையங்கம் அவர்களின் நோக்கத்தை காட்டுகிறது. இந்த பாட புத்தகங்களில் திராவிட இனத்தின் வரலாறு திராவிட இயக்க தலைவர்கள் பற்றி இருக்கிறதாம் அதனால் இதை மாற்ற வேண்டும் என எழுத பட்டது. ஒரு இனம் சொந்த இன வரலாறை பற்றி தெரிந்து கொள்ளாமல் வட இந்திய வரலாறையும் உலக வரலாறையும் படிப்பது நியாயமா? முதலில் தன் இனத்தின் வரலாறு அதோடு உலக வரலாறுகளையும் படிக்க வேண்டும். இது தான் நியாயம். 

சட்டத்தில் ஏற்பட்ட கீறல்கள் மூலம் சூழ்ச்சி செய்து தமிழக மக்களிடையே ஒரு ஏற்ற தாழ்வுகளை புகுத்த இந்த அரசு நினைக்கிறது. 25 சதவீத மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும் 75   சதவீத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் ஒரு இடை வெளியை உருவாக்கி அதன் மூலம் மாணவர்களின் எதிர் காலத்தை    சீரழிக்க நினைக்கும் இந்த அரசின் சூழ்ச்சியை மக்கள் எழுச்சியால் தான் முறியடிக்க வேண்டும். நீதி மன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்த அரசு சமச்சீர் கல்வியை முடக்கவே முயற்சி எடுக்கும். இப்போதே போராட்டத்தை துவக்கிய மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு நாமும் இந்த போராட்டத்தில் இணைந்து சூழ்ச்சியை முறியடிப்போம் .  

அரசுக்காக மக்கள் இல்லை! மக்களுக்காக தான் அரசு !                     

4 கருத்துக்கள்:

Anonymous said...

Sure......

dharma said...

Poonaiku yaar Mani katturathu?!

Suresh Kumar said...

dharma said...

Poonaiku yaar Mani katturathu?!
///////////

தேவை பட்டால் நாம தான் மணி கட்டனும். மணி கட்டுறதுக்கு வேறு யாராவது வருவாங்களா என்ன ?

Anonymous said...

Ammaam Annikku DMK ku jalra adichavanunga thane Patriga karargallam.DMK peran nalla hindi pesuvaar,Ezhai paazhai pasangallam Thamizhe ozhunga pesa mudiyaadu.Idhan lkalvi ayagu TamilNattula

Post a Comment

Send your Status to your Facebook