Monday

இனியும் கேவல படாதீர்கள் அம்மா

இன்று உயர்நீதி மன்றத்தால் கொடுக்க பட்ட சமச்சீர் கல்வி பற்றிய தீர்ப்பு வரலாற்றில் முக்கியமான தீர்ப்பாக மாறி விட்டது. மக்களாட்சி அமைப்பு என்றால் மக்கள் ஆட்சி செய்வது. அதனால் தான் மக்களே பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் நிர்வாகிக்கும் உரிமையை கொடுக்கிறார்கள். வாக்களித்து வெற்றி பெற்று விட்டால் அவர்களுக்கு உலகளாவிய அதிகாரம் இருப்பதாக சிலர் நினைத்து மக்களின் தீர்ப்பிற்கு மாறாக செயல் படுகிறார்கள். 

அதற்கான உதாரணம் தான் சமச்சீர் கல்வி. கடந்த ஆட்சியாளர்கள் நெறி தவறி அவர்கள் தான் எல்லாம் என்று நினைத்த விளைவு தான் இந்த ஆட்சி மாற்றம். ஆனால் அதிமுக தலைமை ஏதோ நம்மை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என மக்கள் நினைத்து வாக்களித்து விட்டதாக எண்ணி மனம் போன போக்கில் செயல் பட்டு வருகிறது . 

சமச்சீர் கல்வி நிறுத்த சட்டம் போட்ட போதே உயர் நீதி மன்றம் தடை விதித்தது அதையும் மதிக்காமல் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து அதனடிப்படையில் குழு அமைத்த தமிழக அரசு தங்களுக்கு வேண்டியவர்களை பார்த்து குழு உறுப்பினராக நியமித்தது.( யார் சமச்சீர் கல்விக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களை குழுவில் சேர்த்து கொண்டது) இந்த குழு எதிர் பார்த்ததை போல் அறிக்கை கொடுத்தது.

பாட புத்தகங்களை தரமுள்ளதாக்க பரிந்துரை செய்ய நியமிக்க பட்ட குழு சமச்சீர் கல்வியை தடை செய்ய வேண்டும் என்று தீர்ப்பை கூறி அறிக்கை தயாரித்தது.

இந்த வழக்கின் விசித்திரம் என்ன வென்றால் சமச்சீர் கல்வியை நிறுத்த வேண்டும் என அரசாலே நேரடியாக வாதாட முடியாத நிலை. அரசின் ( அம்மாவின் )      நோக்கம் எப்படியாவது சமச்சீர் கல்வியை தொடர கூடாது அதற்கு கிடைத்த வலுவற்ற வாதம் தான் பாட திட்டம் தரமானதாக இல்லை என்பது.

தரமானதாக இல்லை என்றால் தரமுள்ளதாக மாற்றுவது அரசின் கடமை. அதற்காக ஏற்கனவே அறிமுக படுத்திய புதிய பாட திட்டத்திலிருந்து மீண்டும் பழைய பாட திட்டத்திற்கு மாற்றுவது என்பது எவ்வளவு பெரிய அயோக்கிய தனம். இங்கே யாருமே தரமற்ற பாட திட்டத்தை மக்களுக்கு கொடுக்க விரும்ப வில்லை. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு துவங்க பட்ட சமச்சீர் கல்வி என்பதை ஒரு முன்னோட்டமாக தான் எடுத்தது கொள்ள வேண்டும். படி படியாக தரமுள்ளதாக்கி கொள்ளலாம். இன்று உயர் நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு என்பது தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் எண்ண ஓட்டங்கள் தான். இந்த தீர்ப்பை மதித்து சமச்சீர் கல்வியை காலம் தாழ்த்தாமல் நடை முறை படுத்த வேண்டும்.

ஏற்கனவே எந்த மீடியா உதவியும் இல்லாமல் அனைத்து மக்கள் மத்தியிலும் சூடான செய்தியாக மாறியிருக்கும் இந்த நிலையில் மக்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்தால் இனியும் நீங்கள் கேவல பட தான் செய்வீர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்பது இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்து கொண்டோம். மக்கள் முட்டாள்கள் என நினைத்தன் விளைவு தான் திமுகவிற்கு எதிர் கட்சி வரிசை கூட கிடைக்க வில்லை என்பதை மறந்து விடாதீர்கள். அன்றாட நிகழ்வுகளை மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

மாற்றம் வேண்டும் அதற்கு சரியான மாற்று இல்லாமல் அதிமுகவை தேர்ந்தடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ள பட்டத்தால் தான் இந்த நிலைமை என்பதை மறுப்பதற்கில்லை. சரியான மக்களாட்சி மக்களின் விருப்பத்திகு ஏற்ப நடைபெற வேண்டுமானால் மாற்று சக்தியை மக்கள் உருவாக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களுக்கு பணிவிடை செய்ய தான் இருக்கிறார்களே தவிர அதிகாரம் செலுத்த அல்ல .    

சமச்சீர் கல்வி வழக்கு விசித்திரமானது தீர்ப்பு வரும் முன்பே தமிழக அரசு குற்றவாழியாக இருக்கிறது 

3 கருத்துக்கள்:

Suresh Kumar said...

உச்ச நீதி மன்றமும் எதிர் பார்த்தது போலவே மக்கள் விரும்பிய தீர்ப்பை கொடுத்திருக்கிறது. சமச்சீர் கல்வியை தொடர்ந்து நடத்த தமிழக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு .

jagadeesh said...

கனிமொழிகவிதை, கலைஞர் புராணம் இதை தூக்கரதுதா அம்மாவின் முடிவு. அது இந்த வருஷம் முடியள்ளனாலும், அடுத்த வருஷம் முடிஞ்சிடும்.

Suresh Kumar said...

அதை தூக்கி கொள்ளட்டும் தவறில்லை . ஆனால் அனைவருக்கும் சமமான தரமான பாட திட்டங்கள் அமைய வேண்டும் . கருணாநிதியின் புராணத்தை நீக்க வேண்டும் என்றல எதற்காக இந்த ஆண்டு நிறுத்தி வைக்க வேண்டும் . அதை நீக்கி விட்டு இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை தொடரலாமே

Post a Comment

Send your Status to your Facebook