ஒவ்வெரு நாளும் புது புது வரலாறுகளை காலம் உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் சிலவற்றை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருகிறோம். வரலாறுகளை நாம் உருவாக்குவதில்லை வரலாறு நம்மை உருவாக்குகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி இன்றுவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
தமிழகத்தில் சமீப காலமாக மக்களால் விரும்பி ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு அரசியல் மாற்றங்கள் வேறு வழியின்றி மக்களால் தீர்மானிக்க படுகிறது. மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகள் உருவாகாததின் விளைவு தான் மக்களாலேயே நல்ல அரசை அமைக்க முடியவில்லை. மக்கள் மத்தியில் சிந்திக்கும் தன்மையை உருவாக்க வேண்டும் என்றால் மக்கள் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை பற்றியோ இந்தியாவை பற்றியோ கட்சிகளை பற்றியோ பேசினாலே சிலர் அரசியல் எனக்கு பிடிக்காது எனவே அரசியலை பற்றி நாம் பேச வேண்டாம் என்று ஒதுங்கி விடுவர்.
விரல் விட்டு எண்ண கூடிய அளவில் தான் அரசியல் குறித்த ஆர்வம் மக்களிடம் இருக்கிறது. அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று நினைப்பவர்கள் மத்தியில் அரசியல் குறித்து தவறான எண்ணங்கள் இருக்கிறது. அரசியல் என்றாலே அடி பிடி என்றும் , அரசியல் என்றாலே ஏமாற்று என்றும் , அரசியல் என்றாலே கட்சிக்குள்ளே போட்டி பொறாமைகள் என்ற ஊரு எண்ணமும் இருக்கிறது .
பொதுவாக என்னை போன்ற இளைஞர்களிடம் பேசும் போது கூட அவர்கள் இப்படி பேசுகிறார்கள். சமூக தளங்களில் அரசியல் குறித்து பதிவு செய்யாதீர்கள் என என்னிடமே சிலர் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பதிவுகளை பதிவுகளை பார்த்தால் எந்த ஒரு நோக்கமோ லட்சியமோ அவர்களிடம் தெரியவில்லை. ஏதோ பொழுதை போக்க நண்பர்களோடு அரட்டை அடிக்க தான் இணையம் பயன் படுத்துவதாக தெரிகிறது.
இணையம் என்பது இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான வர பிரசாதம் என்றே சொல்லலாம். பொழுது போக்கிற்கும் அரட்டைக்கும் பயன் படுத்தலாம் தவறில்லை. ஆனால் சிறிதளவேனும் சமூக சிந்தனைகள் நமக்கு இருக்க வேண்டும் சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணக்கிடுபவராகவும் நாம் இருக்க வேண்டும்.
மக்களாட்சி தத்துவத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் நம் மீது திணிக்கபட்டுள்ளது.
ஒவ்வெரு நாள் நம் வாழ்க்கை முறை முதல் நாம் சாப்பிடும் உணவு வரை அரசியல் தான் தீர்மானிக்கிறது. அரசியலே பிடிக்காது, என்று ஒதுங்கி கொண்டாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அரசியலுக்கு உள்ளாக்க படுகிறோம். அரசியல் பிடிக்காது என்று சொல்லுபவர்கள் பெரும்பாலும் சொல்லும் கருத்தாக அரசியல் நேர்மையாக இல்லை என்று தான். அரசியலில் நேர்மையை எதிர் பார்க்கும் நாம் அரசியலை விட்டு தூரத்தில் நிற்கும் போது அது எப்படி இருக்கும்.
ஒரு புறம் இணையத்தை பயன் படுத்துவோர் சரியாக பயன் படுத்த வில்லை என்றாலும் கடந்த நாட்களில் அரபு நாடுகளை புரட்டி போட்ட புரட்சிகள் எல்லாம் இணையம் வாயிலாக நடத்த பட்டன. அந்த நாடுகளின் இளைஞர்கள் சரியாக இணையத்தை பயன் படுத்தியதால் தான் புரட்சிக்கு பயன் பட்டது. எகிப்து , துனிசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள் முழுக்க முழுக்க இளைஞர்களால் நடத்த பட்டது. இளைஞர்கள் புரட்சிக்கு வித்திட்ட போது அடக்கி கொண்டிருந்த ஆதங்களை மக்கள் கொட்டி புதிய மாற்றத்தை உருவாக்கினர் . இது வரலாற்றில் முக்கிய துவம் பெற்றது.
சிங்கள கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் கொல்ல படுவது வழக்கமாகி கொண்டிருந்தன. வட இந்தியாவில் பாட்டி கால் தவறி விழுந்தாலே பெரிய செய்தியாகும் வட இந்திய ஊடகங்கள் தமிழக மீனவர்களை கண்டு கொள்ள வில்லை. அதே நேரம் தமிழ் இணைய பயனர்கள் Twitter மூலம் இடைவிடாது தமிழக மீனவர்கள் இந்திய அளவில் பேசும் பொருளாக செய்தார்கள். இரவு பகலென்று பாராமல் தங்களுடைய ஒவ்வெரு tweet - டும் தமிழக மீனவர்கள் குறித்ததாக இருந்ததன் விளைவு ஓரளவிற்கு வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட காரணமாக இருந்தது.
இணையம் மூலம் இன்று பல நன்மைகள் உருவாக்க முடியும். அரசியலில் நேர்மையை விரும்புவோர் கவனத்திற்கு என்ற பதிவின் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இணைய தள நண்பர்கள் சந்திக்க இருப்பதையும் மேலும் விரும்புவோர் சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தோம். Facebook மற்றும் Orkut போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு இந்த கலந்துரையாடல் நிகழ்வினை ஏற்பாடு செய்தார்கள்.
தமிழக அரசியலை பொறுத்தவரையில் நேர்மையான அரசியல் வாதி யார் என்றால் வைகோ பக்கம் தான் அனைவரின் கைகளும் திரும்பும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் கட்சி சார்பற்ற அரசியலை நேர் வழியில் கொண்டு செல்ல நினைக்கும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துரையாடலில் பங்கு பெற்றார்கள். எதிர் பார்த்ததை விட அதிகமாக இளைஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் ஒவ்வெரு பகுதியிலிருந்தும் இளைஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் கலந்து கொண்டதை குறித்து சொல்லும் பொது ஒரு நல்ல தலைவரை என் வாழ்நாளில் சந்தித்திருக்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறார்கள். ஆரோக்கிய அரசியலை மதிமுகவால் மட்டும் தான் முன்னெடுக்க முடியும் . தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று தங்கள் சொந்த பிரச்சனைகளுக்காக தொண்டர்களை ஏவி விட்டு பொது சொத்துக்களை சேத படுத்தும் தலைவர்கள் மத்தியில் பதினெட்டு ஆண்டுகள் லட்சகணக்கான தொண்டர்களோடு கட்சி நடத்தி கொண்டிருக்கும் வைகோவின் மதிமுகவால் ஒரு குண்டூசி அளவில் கூட பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததில்லை.
அதே நேரம் மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்த தயங்கியதும் இல்லை . இது தானே ஆரோக்கிய அரசியல். மக்களை ஏமாற்றினால் தான் பதவி கிடைக்கும் வெற்றி பெற முடியும் என்றால் அந்த பதவி கூட வேண்டாம் என்பது தானே ஆரோக்கிய நேர்மையான அரசியல். நேர்மையான் அரசியல் கட்சிக்கும் நேர்மையான அரசியல் தலைவருக்கும் இன்னொரு கட்சியையும் இன்னொரு தலைவரையும் அடையாளம் காட்ட முடியாது. அப்படிஎன்றால் நேர்மையான தலைவர் வைகோ தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் வர வேண்டும். நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதனடிப்படையில் ஜூலை 24 இளைஞர்கள் வைகோவை சந்தித்து கலந்துரையாடியிருக்கிரார்கள். இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
கலந்து கொண்ட இளைஞர்கள் அடுத்த நிகழ்வில் மேலும் பல இளைஞர்கள் மத்தியில் இந்த செய்தியை கொண்டு சென்று இணையம் மூலம் தமிழகத்தை வளமாக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளனர். இது வரலாற்று மாற்றத்தை உருவாக்கும் புதிய வழிகோலாக அமைந்துள்ளது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் நம் மீது திணிக்க பட்டு விட்டது . அதை நாம் தான் சுத்த படுத்த வேண்டும். மாற்றம் நம் கையில்
6 கருத்துக்கள்:
இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உழைத்த தோழர்களுக்கு நன்றிகள் பல .......
அருமையாக எழுதியுள்ளீர்கள் சுரேஷ். நீங்கள் சொல்வதில் பல விசயங்கள் உண்மை தான் அரசியலை தூய்மை படுத்த வேண்டிய கடமை இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிறது.
vaiko good polition but can you assure that he wiil not join hands with DMK AND ADMK in feautre
Anonymous said...
vaiko good polition but can you assure that he wiil not join hands with DMK AND ADMK in feautre /////////
வைகோவும் மதிமுகவும் இனிமேல் அதிமுக திமுக உடன் கூட்டணி அமைக்காது அதற்கான அனைத்து உறுதிகளையும் என்னால் தர முடியும் . மதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் . நான் மட்டுமல்லாது அனைத்து நடுநிலையாளர்களும் விரும்பிய பாதைக்கு மதிமுக வந்திருக்கிறது அதை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு நம்முடையதே
அருமையான பதிவு
தமிழ்மணம் முதல் vote
Post a Comment