Tuesday

கல்பாக்கம் சிறிது சிறிதாக கொல்லும் உயிர் கொல்லி


உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் வேளையில் இந்திய அரசு புதிது புதிதாக அணு உலைகளை கட்ட தீர்மானித்து கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் ரசியா இந்தியா கூட்டு முயற்சியில் கட்ட பட்டு வரும் அணு உலையை கூடங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் அணு உலையை திறக்க கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளத்தில் துவங்கிய போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பிரதி பலிக்கிறது .
கல்பாக்கம் பகுதியில் அணு கதிர் வீச்சால் பாதிக்க பட்ட நாய்


இந்த நிலையில் கல்பாக்கத்தில் அணு உலை செயல்பட்டு வருகிறது. கல்பாக்கம் பகுதிக்கு சென்று அங்கே இந்த அணு உலைகளால் ஏதாவது பாதிப்பு வந்திருக்கிறதா? இல்லை சும்மா பாதிப்பு என கூச்சல் போடுகிறார்களா என்பதை அறிந்து கொள்ள நானும் மற்ற சில நண்பர்களுமாக சென்றிருந்தோம்.

அணு உலைக்கு ஆதரவானவர்கள் முன் வைக்கும் வாதங்கள் சில

  1. ஆபத்து இல்லாத திட்டங்கள் என்று எதுவுமே கிடையாது 
  2. சுனாமி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்று தெரிந்தே நாம் உயிர் வாழவில்லையா ? 
  3. பேருந்து பயணம் என்றாலும் விமான பயணம் என்றாலும் ஆபத்து வந்து விடும் என்று நாம் பயனிக்காமலா இருக்கிறோம் . 
  4. இவ்வளவு கோடி பணம் செலவு செய்து விட்டோம் இனி நிறுத்துவது நியாயமா ? 
  5. ஜப்பான் தொழில் நுட்பத்தை விட ரசியா தொழில் நுட்பம் மேலானது அது மட்டுமல்லாது இந்தியாவில் கட்ட பட்டுள்ள அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானவை 
இப்படி சில வாதங்களை முன் வைக்கிறார்கள் .

கல்பாக்கம் அணு மின் நிலைய பகுதிகளில் நாங்கள் நேரில் தெரிந்து கொண்ட தகவல்களை உங்களுக்கு தருகிறோம்.

கல்பாக்கம் அணு உலையில் இரண்டு யூனிட் மூலம் 220X2 = 440 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. கூடங்குளத்தில் இரண்டு யூனிட் மூலம் 2400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் .

வெறும் 440    மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் கல்பாக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டால் கூடங்குளம் வேண்டுமா? வேண்டாமா ? என்பதை நீங்கள் முடிவு செய்வீர்கள் என நினைக்கிறேன் .

ஒரு அணு உலை வெடித்தால் மட்டும் தான் பிரச்சனையா ? இல்லை அணு உலை என்பது வெடிக்க வேண்டிய அவசியமே வேண்டாம் உயிர் கொல்ல. இயற்கை ஆய்வாளர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஓன்று ஒரு அணு உலை அமைந்திருக்கும் இடத்தில் அதை சுற்றி பறவைகள் வாழாது என்பது . இதை எங்களால் கவனிக்க முடிந்தது . பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிட்டு குருவிகள் அதிகமாக இருக்குமாம் . கடந்த பத்து ஆண்டுகளாக சிட்டு குருவிகளை அந்த பகுதிகளில் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் .

அது மட்டுமல்லாது காகம் முன்னர் கூட்டம் கூட்டமாக காகங்கள் இருக்கும் இடத்தில் மருந்திற்கு ஓன்று பார்ப்பதை போல் தான் பார்க்க முடிகிறது . வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கல்பாக்கத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . முன்னர் வேடந்தாங்கலுக்கு செல்லும் பறவைகள் கல்பாக்கத்தில் உள்ள நீர் நிலைகளில் இரை உட்கொண்டு செல்லுமாம். இந்த சீசன்களில் எங்கு பார்த்தாலும் பறவைகள் காணப்படும் . ஆனால் இப்போது எந்த பறவைகளும் கல்பாக்கம் பகுதியில் வருவதில்லை . அணு கதிர்வீச்சின் தாக்கத்தை பறவைகள் உணர்ந்து கொள்ளும் திறன் உடையது என நிபுணர்கள் கூறுகின்றனர்.


நிலத்திடி நீர் குறைந்திருக்கிறது . விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .  

மீனவர்கள்  அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவு "கருவாடு" இதில் உப்பு சத்து அதிகமாக காணப்படும். உணவில் அயோடின் அதிகமாக காணப்பட்டால் தைராய்டு என்னும் நோய் வர வாய்ப்பு இல்லை . ஆனால் சமீப காலமாக இங்கு உள்ள மக்கள் தைராய்டு என்னும் நோயால் பாதிக்க பட்டுள்ளனர் . மிக பெரிய கொடுரம் என்னவென்றால் பிறக்கும் போது தைராய்டு நோயால் பிறக்கும் குழந்தைகளும் இங்கு காணப்படுகின்றனர். 

அணு கதிர்வீச்சின் தாக்கத்தால் கரு சிதைவுகள் கூட அதிகமாக இருக்கிறது . இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒருவர் தைராய்டு புற்று நோயால் இறந்திருக்கிறார் மருத்துவர்கள் புற்றுநோய் என்றே சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் . ஆனால் ஏதோ காரணத்தால் அரசு நிர்வாகத்தால் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாக பதிவு செய்திருக்கிறார்கள் . இதே போல் பல தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது . 

இந்த பகுதியில் வாழும் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கறால் என்னும் மீன் மொத்தமாக அழிந்து விட்டது . இந்த மீன்கள் இடம்பெயர முடியாதவை . இடம்பெயர கூடிய மீன்கள் இந்த பகுதிகளை தாண்டி சென்று விட்டன. அது அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அதிக வெப்பம் கொண்டதால் பவள பாறைகள் முற்றிலுமாக அழிந்து போய் விட்டது . 
இப்படி  ஒரு புறம் இயற்கைக்கு பாதிப்பை உண்டு பண்ணும இந்த அணு உலைகள் சிறிது சிறிதாக மனித வாழ்வுக்கும் பாதிப்பை உருவாக்குகிறது .இன்னும் பத்து ஆண்டுகளில் கல்பாக்கம் பகுதியில் வாழும் மக்களில் எண்பது சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்க பட்டவர்களாக இருப்பார்கள் என அதிர்ச்சி கரமான செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் வெறும் 2 சதவீத மின் தேவையை பூர்த்தி செய்யும் இந்த அணு உலைகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளோ அதிகம் . இவைகள் நமக்கு வேண்டுமா ? பணம் செலவு செய்து விட்டோம் என்று சொல்லி நாம் விசத்தை சாப்பிடுவோமா ? இன்றைய தலைமுறையை விடுங்கள் காலம் காலமாக இயற்கையை பாதுகாத்து வந்த நம் முன்னோர்கள் நமக்காக நல்ல இயற்கை சூழலை தந்திருக்கிறார்கள் . அதே போல் நாம் அடுத்த தலைமுறைகளுக்கு நாம் விசத்தை விட்டு செல்ல வேண்டுமா ? சிந்தியுங்கள்  .   இயற்கை தந்த கொடை சூரியன் அதை பயன் படுத்தி மின் தேவையை பூர்த்தி செய்வோம் .
எங்கள் ஆய்வு குறித்து வந்த செய்தி
"வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை"
 

4 கருத்துக்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

அணுமின் நிலையத்தை மூடுவோம், இன்குலாப் ஜிந்தாபாத்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விரிவான தகவல்...

மக்கள் மத்தில் இன்னும் விழிப்புணர்வு ஏற்ப்பட வேண்டும்

Suresh Kumar said...

MANO நாஞ்சில் மனோ said...
அணுமின் நிலையத்தை மூடுவோம், இன்குலாப் ஜிந்தாபாத்.. //////////

மூடி ஆக வேண்டும் இப்போது தோற்பின் எப்போதும் வெற்றி பெற முடியாது . நன்றி

Suresh Kumar said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
விரிவான தகவல்...

மக்கள் மத்தில் இன்னும் விழிப்புணர்வு ஏற்ப்பட வேண்டும்/////////

நன்றி நண்பரே விழிப்புணர்வு பணியை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்

Post a Comment

Send your Status to your Facebook