இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label சீமான். Show all posts
Showing posts with label சீமான். Show all posts
Sunday
தமிழச்சிக்கு சீமான் மேல என்ன கடுப்போ ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
சீமான்,
தமிழகம்,
தமிழச்சி,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Sunday, January 16, 2011
இணையதளத்தில் பெரியாரின் கருத்துக்களை பரப்புரை செய்வதில் முன்னணியில் இருப்பவர் தான் தமிழச்சி. முகநூலில் பெரியாரின் கருத்துக்களை பார்க்க வேண்டும் என்றால் தமிழச்சியின் பக்கம் சென்றால் போதும் . தமிழச்சியின் பக்கத்திலிருந்து பெரியாரின் சில கருத்துக்களை நானும் தெரிந்து கொண்டவன் என்ற முறையில் தமிழச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . பெரியாரின் கருத்துக்களை மேலும் மேலும் பரப்பி இளைய சமுதாயமும் இனி வரும் தலைமுறைக்கும் பயன் படும் வகையில் நீங்கள் மேலும் மேலும் சமூக சேவைகள் செய்ய வேண்டும் என் மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்.
சில நாட்களாக தமிழச்சியை கவனித்து வருகிறேன் அவரின் கருத்துக்கள் அருவெறுக்க தக்கதாக இருக்கிறது . ஒரு பெண் இந்த ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் துணிச்சலாக தன் கருத்துக்களை எடுத்து வைக்கிறார் என்று சில நேரங்களில் தமிழச்சியை நினைத்து பெருமை பட்டிருக்கிறேன் . ஆனால் பெரியாரில் கருத்துக்கள் மட்டும் இல்லைஎன்றால் நீங்கள் சீரோ என்பது மட்டும் தெரிகிறது. ஏன் தமிழச்சிக்கு சீமானின் மீது இவ்வளவு கடுப்பு என்பது தான் எனக்கு புரியவில்லை . சினிமா காரர் தான் சீமான் ஆனால் அந்த சினிமாகாரர்களில் துணிந்து தன் கருத்தை சொல்லி சிறைக்கு சென்றவர்கள் வேறு யாரும் இல்லை . சீமானிடம் தமிழ் தேசியம் என்ற கொள்கை இருக்கிறது அதே நேரம் தமிழச்சியிடம் என்ன கொள்கை இருக்கிறது .
சீமான் இருந்தால் தப்பு நின்னால் தப்பு அப்படியே சொல்லி சொல்லி அத கேக்குற எங்களுக்கும் ஒரு சலிப்பு வருது . சும்மா இருக்க சங்க ஊதி பெருசாக்குவது போல சீமானை பெரிய தலைவராக வேண்டும் என ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா ? இல்லை சீமானை திட்டியே நிறைய எதிர் கமெண்ட் வாங்கி நீங்க பிரபலம் ஆகணும்னு நினைக்கிறீங்களா? எதுவுமே புரியல இல்லை உங்களுக்கும் சீமானுக்கும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறதா?
இதெல்லாம் ஏன் கேக்குறேனா? நீங்கள் ஒரு ஈழத்து பெண் வெளிநாட்டில் இப்போது இருக்கிறீர்கள் சீமான் முதல் மற்ற தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஈழ தமிழர்களுக்காக தான் பேசுகிறார்கள் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் ஈழ தமிழர்கள் நலனோடு சேர்ந்த முடிவாக தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் விமர்சிக்கிறீர்கள். இலங்கையிலும் அரசியல் நடக்கிறது இதுவரை இலங்கை அரசியலை விமர்சிப்பதை விட அதிகமாக தமிழக அரசியலை விமர்சிக்கிறீர்கள் . அதில் ஒன்றும் தப்பு இல்லை யார் யாரோ விமர்சிக்க வேண்டிய அளவிற்கு தமிழக அரசியல் மாறி விட்டது அது வேறு கதை . தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அல்லாத பல தலைவர்கள் இருக்கிராக்றல் அவர்களுக்கு எதிராக உங்கள் கருத்துக்கள் பலமாக வந்ததை பார்த்ததில்லை.
பிரபலமாக இருக்கும் ஒரு நபாரால் ஒரு சமூகத்திக்கு வேண்டிய பரப்புரையை செய்தால் அந்த சமூகத்திற்கு அது பயனாக இருக்கும் அப்படி இந்த தமிழ் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் இலங்கையின் இனபடுகொலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லலாம் . ஈழ விடுதலை பற்றியும் அதற்கான தேவை பற்றியும் உங்கள் விஸ்ரிகளிடம் எடுத்து சொல்லி அதற்கான ஆதரவை பெறலாம் . இப்படி எவ்வளவோ செய்யலாம் ஆனால் ஒன்றும் செய்ய வில்லை . எனக்கு தெரிந்து தமிழச்சி நீங்கள் ஏதோ உங்களுக்கு பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக பெரியாரின் கருத்துக்களையும் காலத்தை கடத்த வேண்டும் என்பதற்காக சில விமர்சனங்களை வைக்கிறீர்கள் என நினைக்கிறேன் . ஏனெனில் உங்களிடம் இதுவரை தெளிவான நிகழ் காலத்திற்கு ஏற்ற கொள்கைகள் எதுவும் இல்லை .
சரி விடுங்க கேக்க மறந்துட்டேன் உங்களுக்கு சீமான் மேல என்ன கடுப்பு ? சும்மா சொல்லுங்க அப்புறம் ஈழ விடுதலையை பற்றி உங்ககிட்ட ஏதாவது கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்க .
Saturday
ஈழ தமிழர் நலன் காக்கும் பேரணியில் சீமானின் உரை
எழுதியது
Suresh Kumar
Labels:
சீமான்,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
வீடியோ
எழுதிய நேரம்
Saturday, May 23, 2009
Friday
தமிழின விரோதிகளுக்கு கிடைத்த முதல் தோல்வி சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து !
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
சீமான்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Friday, April 17, 2009
இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி , நாஞ்சில் சம்பத் ஆகியோர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தமிழக அரசு இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது .
இதை எதிர்த்து டைரக்டர் சீமான் சார்பாக சீமானின் தம்பி பீட்டர் ஜேம்ஸ் சென்னை உயர்நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட முகாந்திரம் இல்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதற்கிடையே தேசிய பாதுகாப்பு வாரியத்திடமும் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி சீமான் கைது செய்யப்பட்டதற்காக, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யக்கோரி அவரது தம்பி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தர்மராவ், செல்வம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
என்றாலும், புதுச்சேரி பொலிஸார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலை ஆவதில் சிக்கல் உள்ளது.
புதுச்சேரியில் சீமான் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற முடியும். எனவே ஒன்றிரண்டு நாட்களில் அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயர்நீதி மன்ற தீர்ப்பானது தமிழின விரோத அரசுக்கு கிடைத்த முதல் தோல்வி . இது தமிழர்களின் பேச்சுரிமைக்கு கிடைத்த வெற்றி .
தமிழனாய் நான் என் கடமையை செய்கிறேன் -சீமான்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
சீமான்,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Friday, March 06, 2009
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கடந்த 21 ஆம் தேதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட திரைப்பட இயக்குனரும் தீவிர தமிழ் உணர்வாளருமான சீமானின் காவல் இன்றுடன் முடிவடைகிறது . இதனை தொடர்ந்து இன்று காலை10 மணியளவில் சீமான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் . சீமானுக்கு 20ம் தீதி வரை காவலை நீட்டி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் .
நீதிமன்ற வளாகத்தில் நிருபர்கள் சீமானை சந்திதிதனர் . அப்போது உங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயந்துள்ளதே என நிருபர்கள் கேட்டனர் .அதற்கு சீமான் கூறியதாவது சிறையில் வைக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு சட்டம் எந்த ரூபத்தில் இருந்தால் என்ன? சட்டம் தன் கடைமையை செய்துள்ளது . தமிழனாய் நான் என் கடமையை செய்கிறேன் . இவ்வாறு
பதிலளித்தார் .
Read More
நீதிமன்ற வளாகத்தில் நிருபர்கள் சீமானை சந்திதிதனர் . அப்போது உங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயந்துள்ளதே என நிருபர்கள் கேட்டனர் .அதற்கு சீமான் கூறியதாவது சிறையில் வைக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு சட்டம் எந்த ரூபத்தில் இருந்தால் என்ன? சட்டம் தன் கடைமையை செய்துள்ளது . தமிழனாய் நான் என் கடமையை செய்கிறேன் . இவ்வாறு
பதிலளித்தார் .
Subscribe to:
Posts (Atom)