Sunday

அந்துலேக்கு வந்த சந்தேகம் நியாயமானதா ?


மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் . ஆர். அந்துலே இவர் சமீபத்தில் நாடாளுமன்ற கூட்ட தொடர் நடந்து கொண்டிருக்கும் போது மும்பை தாக்குதல் தொடர்பாக ஒரு கருத்தை சொன்னார் . அதாவது மும்பை தாக்குதல் சம்பந்தமாக சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது . ஏனெனில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடங்கிய சில நேரங்களில் போலீஸ் அதிகாரி கார்க்கரே கொலை செய்யப்பட்டார் . இதனால் சந்தேகம் இருப்பதாக தன்னுடைய ஐயத்தை வெளியிட்டார் . இதுதான் அவரின் ராஜினாமாவுக்கு காரணம் .
யார் அந்த கார்க்கரே அவரை கொலை செய்ததால் எதற்கு சர்ச்சை . அவர் தான் மலோகான் குண்டுவெடிப்பை விசாரித்து வந்தவர் . இந்துத்துவவாதிகள் தீவிரவாதத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் . அவரின் நியாயமான விசாரணையை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் முதல் அனைத்து பாரதிய ஜனதா கட்சியுனரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . இந்த விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் தான் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது . அந்த நேரத்தில் தான் அந்த நேர்மையான போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் .

இப்போது அவரை கொலை செய்ததன் மூலம் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணையை திருப்பி விடலாம் என சில சக்திகள் முயன்றிருக்கலாம் என அந்துலே தனது கருத்தாக வெளியிட்டார் . இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன . அந்துலே மீது நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் வலியுறித்தினார் . அவர்களின் பதில் இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது ஒரு அமைச்சர் எப்படி சந்தேகம் வெளியிடலாம் . அப்படி சந்தேகத்தின் அடிப்படியில் கருத்து சொன்னால் அதுவும் விசாரணையை திசைதிருப்புவது போல் அல்லவா இருக்கும் .இப்போது அமைச்சர் ராஜினமா செய்திருக்கிறார் .ஆனால் அவர் ராஜினாமா இதுவரை ஏற்க படவில்லை .
என்னவாக இருந்தாலும் அந்துலேக்கு வந்த சந்தேகம் நியாயமானதே இந்தியாவில் தீவிரவாதம் என்பது பெரும்பாலும் அரசியல் வாதிகளால் உருவாக்க படுவது தான் . எப்படித்தான் நாம் பாகிஸ்தான் மீது படைஎடுதாலும் தீவிரவாதத்தின் நாம் பாகிஸ்தான் மீது படைஎடுதாலும் தீவிரவாதத்தின் நாம் பாகிஸ்தான் மீது படைஎடுதாலும் தீவிரவாதத்தின் வேர் பிடுங்க படவில்லை எனில் தீவிரவாதம் தோன்றி கொண்டுதான் இருக்கும் . நல்ல ஒரு நியாயமான போலீஸ் அதிகாரி எப்படி கொல்ல பட்டார் என்ற கோணத்திலும் விசாரணை இருப்பது தான் ஆரோக்கியமாக இருக்கும் . யார் உருவாக்கினாலும் பாதிக்க படுவது அப்பாவி மக்களே .

2 கருத்துக்கள்:

Anonymous said...

சரியாக சொன்னீர்கள். நானும் தினமலர் பேப்பரில் இதே கருத்தை தெரிவித்துள்ளேன்.

அஹமது கபீர்

Anonymous said...

முஸ்லிமல்லாத தீவிரவாதிகள் குறித்து கர்கரே விசாரித்துவந்தார் எனவே, அவர் தீவிரவாதிகள் மற்றும் வேறு யாறாலோ கொல்லப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல்,நரிமன் இல்லம் செல்லாமல் வேறு இடத்திற்கு அவரை போகச்சொன்னது யார்?' என்று அந்துலே பேசியவுடன்,

பி.ஜெ.பி.,சிவசேனா,போன்ற சங்க்பரிவார கட்சிகள் அந்துலேவுக்கு எதிராக குரல் எழுப்பி அவையை அமளிக்காடாகியுள்ளனர். மாநிலங்களவையில் இதே பிரச்சினையில், இந்த சங்க்பரிவார கும்பலோடு திராவிடக்கட்சி[?]யானஅம்மா தி.மு.க.வும் சேர்ந்து குரலெழுப்பியுள்ளனர்.

கர்கரே குறித்து அந்துலே பேசியவுடன் சங்கபரிவாரம் ஆர்ப்பரிக்கவேண்டிய அவசியமென்ன..?
கர்கரே தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை என்று அந்துலே கூறவில்லையே! தீவிரவாதிகள் மற்றும் வேறுயாறாலோ கொல்லப்பட்டிருக்கலாம் என்றுதானே கூறியுள்ளார். ஏன் சங்கபரிவாரம் துடிக்கவேண்டும்.?

இதைதான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பார்களோ!

Why else would Advani meet Singh before 26th November on the issue of `torture' of Praggya Singh?

Has anyone heard of a leader of the opposition meeting the Prime Minister on such an issue?


AND NOW COMES THE STARTLING FACT--KARKARE WAS KILLED BY A 9 MM BULLET--WHICH COULD NOT HAVE COME FROM AK-47 OR 56!

Post a Comment

Send your Status to your Facebook