Saturday

இலங்கை அமைச்சரை வழிமறித்து மதிமுகாவினர் கலாட்டா

வேளாங்கன்னி மாதாவை தரிசிக்கச் சென்ற இலங்கை அமைச்சரை வழிமறித்து ம.தி.மு.கவினர் கலாட்டா

இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இன்று சென்னையில் இருந்து அன்னை வேளாங்கன்னி மாதா தேவாலயத்திற்கு காரில் சென்றபோது காரைக்காலில் வைத்து ம.தி.மு.க. ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு கோசம் எழுப்பப்பட்டுள்ளது.

இது பற்றித் தெரியவருவதாவது:-

இலங்கை மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் பீலிக்ஸ் பெரேரா. இவர் வேளாங்கன்னி மாதா கோவிலில் தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினர் 10 பேருடன் சென்னை வந்திருந்தார். காரைக்கால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.

சனிக்கிழமை காலை 9 மணியளவில் இலங்கை மந்திரி பீலிக்ஸ் பெரேரா குழுவினர் காரில் வேளாங்கன்னி தேவாலயம் புறப்பட்டு சென்றனர். அவருடன் தமிழ்நாடு பொலிஸார் பாதுகாப்புக்கு வந்திருந்தனர். மதகடி என்ற இடத்தில் வந்தபோது அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க.வினர் மற்றும் காரைக்கால் போராட்ட குழுவினர் இலங்கை அமைச்சரின் காரை வழிமறித்தனர்.

கையில் கறுப்புக்கொடி ஏந்தி நின்ற அவர்கள் "இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே" என கோஷமிட்டனர். தகவல் கிடைத்ததும் காரைக்கால் பொலிஸார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை விடுவித்தனர்.

இதற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்களும் கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் அம்பலவாணன், செல்லப்பா உள்பட 45 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

ஈழ தமிழர்களை கொலை செய்து விட்டு பாவ மன்னிப்பு எடுக்க வருகிறார்களா ?

4 கருத்துக்கள்:

மதிபாலா said...

ஈழ தமிழர்களை கொலை செய்து விட்டு பாவ மன்னிப்பு எடுக்க வருகிறார்களா ///

அதானே??????

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எவ்வளவு தைரியம் இருந்த இங்க வந்து போவானுக!

Anonymous said...

எவ்வளவு தைரியம் இருந்த இங்க வந்து போவானுக![:)]

Anonymous said...

எந்த ஒரு தமிழின விரோதியும் தமிழ்நாட்டில் இருக்கவும், வருவதற்கும் மானம் உள்ள எந்த ஒரு தமிழனும் அனு்மதிக்க கூடாது(காங்கிரசுகாரன் உட்பட)அரசியல் பாகுபாடு இல்லாமல் தமிழர்கள் இணைய வேண்டும்.

Post a Comment

Send your Status to your Facebook